ஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம்: தாமிரபரணி ஆற்றில் கட்சிகள் அஞ்சலி..... புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .. டாக்டர் கிருஷ்ணசாமி ... M .D .M .L .A . : அவர்கள் தலைமையில் அஞ்சலி..!!!!!...நெல்லை தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் உயிர் நீத்த நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகள், மற்றும் கட்சிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
1999ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம்தேதி மாஞ்சோலை தோட்ட தொழி லாளர்கள் போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதில் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்த தோட்ட தொழிலாளர்கள் 17பேர் உயரிழந்தனர். அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மலரஞ்சலி செலுத்த காலை 9மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை சந்திப்பில் இருந்து. டாக்டர் ..கிருஷ்ணசாமி ... M .D .M .L .A . : அவர்கள் தலைமையில் ஊர்வலமாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அரவிந்தராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக