எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 7 ஏப்ரல், 2014

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி மனுதாக்கல்.......



தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். நெல்லை, தென்காசி தொகுதிகளில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 8 பேர் மனுதாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் கடந்த 29–ந் தேதி தொடங்கியது. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
4–வது நாளாக நேற்று பகல் 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நெல்லை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தேவேந்திரன் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மு.கருணாகரனிடம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட எஸ்.சுப்பிரமணியன் (இந்து மக்கள் கட்சி), எலிசபெத், ஜெர்மானுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு நேற்று மட்டும் 5 பேர் மனு தாக்கல் செய்தனர். முன்னதாக இந்து மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்.சுப்பிரமணியன், மனு தாக்கல் செய்ய எருமை மாட்டில் ஏறி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் 2 மனுக்களை தாக்கல் செய்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான உமா மகேசுவரியிடம் கொடுத்தார். அப்போது, நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பூங்கோதை, மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முனீசுவரன் என்பவர் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேசுவரியும் மனு தாக்கல் செய்தார். அதேபோல் தென்காசி உதவி கலெக்டர் ரமேஷிடம், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட கண்ணன் மனு தாக்கல் செய்தார். தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு நேற்று 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நெல்லை, தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் நேற்று மட்டும் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் சொத்து மதிப்பு
தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தனது வேட்புமனுவை, சொத்து விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் தாக்கல் செய்தார்.
அதில் தனக்கு ரூ.5 லட்சமும், மனைவி டாக்டர் சந்திரிகா பெயரில் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 163–ம், மகன் ஷியாம் பெயரில் ரூ.9 ஆயிரமும் வங்கியில் கையிருப்பு இருப்பதாக கூறியுள்ளார். வங்கியில் முன்வைப்பு தொகை, விவசாய தளவாடங்கள், கார், வேன் உள்பட அசையும் சொத்துக்கள் டாக்டர் கிருஷ்ணசாமி பெயரில் ரூ.31 லட்சத்து 39 ஆயிரத்து 953–ம், மனைவி பெயரில் ரூ.90 லட்சத்து 22 ஆயிரத்து 233–ம், மகன் பெயரில் ரூ.11 லட்சத்து 99 ஆயிரத்து 415–ம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
விவசாய நிலங்கள், வீடு, ஆஸ்பத்திரி போன்ற அசையா சொத்துகள் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தற்போதைய மதிப்பின் படி ரூ.8 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரத்து 600–ம், மனைவி பெயரில் ரூ.5 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 500–ம், மகன் பெயரில் ரூ.1 கோடியே 72 லடசத்து 51 ஆயிரத்து 900–ம் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த ஆவணத்தில், எல்.ஐ.சி.யில் டாக்டர் கிருஷ்ணசாமி, அவருடைய மனைவி சந்திரிகா ஆகிய 2 பேரின் பெயரில் கூட்டாக வீட்டுக்கடன் வாங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 3 முறை கடன் வாங்கி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
ஒரு கடன் ரூ.43 லட்சத்து 42 ஆயிரத்து 343–ம், மற்றொரு கடன் ரூ.20 லட்சத்து 15 ஆயிரத்து 538–ம், இன்னெரு கடன் ரூ.38 லட்சத்து 80 ஆயிரத்து 168–ம் வாங்கி இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக