எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

10 மணிக்கு மேல் வாக்குசேகரித்த கிருஷ்ணசாமி மீது வழக்கு


விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி புதன்கிழமை இரவு 10 மணிக்கும் மேல் செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் ஓட்டு கேட்டாராம். இதுதொடர்பாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் முத்தையா தளவாய்புரம் போலீஸில் புகார் செய்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி, தி.மு.க. நிர்வாகிகள் தனுஷ்கோடி, தங்கப்பாண்டியன், புதிய தமிழகம் மாவட்டச் செயலர் ராமராஜ் ஆகியோர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, தளவாய்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக