எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 12 ஏப்ரல், 2014

தென்காசி தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி பேச்சு.

புளியங்குடி, : தென்காசி தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என புதியதமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி பேசினார்.
 புளியங்குடியில் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அரபி பாடசாலையில் நடந்த ஊழியர் கூட்டத்திற்கு நகரத்தலைவர் செய்யது சுலை மான் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் செய்யது பட்டாணி, மைதீன்பிச்சை, முன்னாள் எம்.எல்.ஏ.ரசாக் நகர தி.மு.க.செயலாளர் வக்கீல்.செல்வகுமார். நகர ம.ம.க தலைவர் முகைதீன்அப்துல்காதர், புதிய தமிழகம் கட்சி மாவட்ட இணைச் செயலாளர் இன்பராஜ், நகர செயலாளர் பால்ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முஸ்லீம் லீக் நகர செயலாளர் அப்துல்வஹாப் வரவேற்றார்.
 கூட்டத்தில் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட முஸ்லீம்லீக் பொருளாளர் காதர் முகைதீன், முன்னாள் நகரசெயலாளர் அப்துல்ரஹீம், வாசு தேவநல்லூர் செய்யது, தி.மு.க. பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், ஆசிரியர் முப்பிடாதி, நகர த.மு.மு.க.செயலாளர் அசன் கவுன்சிலர் முருகன் ஆகியோர் வரும் தேர்தலில் ஒற்றுமையாக பணியாற்றி டாக்டர்.கிருஷ்ணசாமியை அமோக வெற்றிபெறச் செய்திடவேண்டும் என பேசினர்.
தொடர்ந்து தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில், ‘தென்காசி தொகுதியை தமிழகத்தில் முதல் நிலை தொகுதியாக மாற்றிடவும், தொழில்வளர்ச்சியடைந்த தொகுதியாகவும் மாற்றப் பாடுபடுவேன்.
இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கையான ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையினை அமல்படுத்திடவும், வாசுதேவநல்லூர் செண்பகவல்லியாறு அணை உடைப்பினை சீர்செய்திடவும், நான்கு வழிச்சாலை கொண்டுவருதல் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றிட பாடுபடுவேன்‘ என்றார். முஸ்லீம் லீக் நகர செயலா ளர் வக்கீல்.அப்பாஸ் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக