எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

சங்கரன்கோவில் அருகே தாக்கப்பட்ட புதிய தமிழகம் பிரமுகர் மரணம்


புதிய தமிழகம் கட்சி தலைவரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
தி.மு.க. தலைமையிலான கூட்டணி இயற்கையான வலுவான கூட்டணி. ஜாதி, மதம், மொழி கடந்த கூட்டணி. இதனால் தென்காசி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
ஜனநாயகத்தில் தேர்தல் மிக முக்கியம். அதனை நியாயமாக நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நியாயமாக நடத்தவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் வீடுவீடாக சென்று பண பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். இதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி வீதம் என தமிழகம் முழுவதும் ரூ.4 ஆயிரம் கோடி பண பட்டுவாடா நடந்துள்ளது.
144 தடை உத்தரவு போட்டு, சோதனை சாவடிகளை எடுத்ததால் பணம் கொடுக்க ஆளும் கட்சியினருக்கு எளிதாகிவிட்டது. 144 தடையால் எதிர்கட்சியினர் கூட்டமாக சென்று தடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே பண பட்டுவாடா செய்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண பலத்தை மீறி கூட்டணி பலத்தால் எங்கள் அணி வெற்றி பெறும். தமிழகத்தில் இது போன்ற பண பலம் தொடர்ந்தால் மக்கள் கிளர்ச்சி ஏற்படும். ஆளுங்கட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வார்கள். தி.மு.க. கூட்டணியில் பணம் விநியோகம் செய்யப்பட்டது என்பது முட்டாள்தனமானது. 
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தென்காசி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஜெயகுமார், செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.தேர்தலில் பண பட்டுவாடா: விசாரணை நடத்த கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக