எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 17 ஏப்ரல், 2014

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்


ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் தென்காசி தொகுதி டாக்டர் க.கிருஷ்ணசாமி, மதுரை தொகுதி வி.வேலுச்சாமி ஆகி யோரை ஆதரித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்தினார்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார் (இராஜபாளையம், 1.4.2014)
தென்காசி - க.கிருஷ்ணசாமி
தென்காசி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து இராஜபாளையம் நகர திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 1.4.2014 அன்று மாலை 5 மணியளவில், இராஜபாளையம் பொன்விழா மைதானத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாநில இளைஞரணிச் செயலாளர் இல.திருப்பதி தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்டத் தலைவர் வானவில் வ.மணி, செயலாளர் தி.ஆதவன், தென்காசி மாவட்டத் தலைவர் டேவிட் செல்லத்துரை, செயலாளர் அய்.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைமைக் கழகப் பேச்சாளர் முனைவர் க.அன்பழகன் தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்தினார்.
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரை அடுத்தாக, கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றுகையில்:
ஜெயலலிதா அம்மையார் ஆட்சியின் அவலங்களையும், கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் களான பிரகாஷ்காரத் போன்றோர் மூன்றாவது அணி அமைக்க அம்மையார் அவர்களுடன் திட்டமிட்டு கைகோர்த்து விட்டு, பிறகு அவர்களை நண்பர்களை (தா.பாண்டியன் போன்றோரை) கூட்டணியில் இருந்து  கழட்டி விட்டாரா? அல்லது கழட்டி விடப்பட்டனரா? என்பது அனைவருக்கும் தெரியும். இதிலிருந்து தெரிகிறது அல்லவா? அம்மையார் ஆட்சியின் அரசியல் நாணயம்! கலைஞராக இருந்தால் இதுபோன்று செய்து இருப்பாரா? இருக்கமாட்டார். அவர் அழைத்தாலும் கூட்டணிக்கு உண்மையாக இருப்பார். உண்மையாக கூட்டணி வைத்துக் கொள்வார். எதிர்க்கிறார் என்றாலும் பண்போடு எதிர்ப்பார். ஆனால் இந்த அம்மையார் அதுபோல் உண்டா?
கூட்டணி கட்சி நண்பர்களை மதிக்கும் பண்பு  இந்த அம்மையாரிடம் இருக்கிறதா? இல்லையே! இவரது ஆட்சியின் சாதனைகள் என்ன செய்தார். வேதனைகள்தான் கொடுத்தார் என பல செய்திகளை மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர் சாத்தூர் இராமச்சந்திரன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார் (இராஜபாளையம், 1.4.2014)
தமிழர் தலைவர் வருகை
தமிழர் தலைவர் அவர்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு (மேடைக்கு) சரியாக மாலை 6.30 மணிக்கு வருகை தந்தார்கள். திராவிடர் கழகத் தோழர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் உள அன்போடு வரவேற்றார்கள்.
தமிழர் தலைவருக்கு சிறப்பு
தமிழர் தலைவர் அவர்களுக்கு வேட்பாளர் க.கிருஷ்ண சாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டத் தலைவர் வானவில் வ.மணி, இல.திருப்பதி, திமுக ஒன்றிய செயலாளர் கோ.தனுஷ்கோடி, நகரச் செயலாளர் அ.உதய சூரியன், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் இராசா அருண் மொழி, புதிய தமிழகம் கோ.காமராஜ், திமுக மாணவரணி பொறுப்பாளர் வேல் முருகன் உள்ளிட்ட திராவிடர் கழக கூட்டணி கட்சி தோழர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.
வேட்பாளர் க.கிருஷ்ணசாமி வாக்கு கேட்டு உரை
தென்காசி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தனக்கு வாக்குகேட்டு, இத்தொகுதியில் நான் நிற்கவில்லை. தலைவர் கலைஞர் நிற்கிறார் அவரை நினைத்து, திமுகவை நினைத்து தனக்கு வாக்களியுங்கள் என்று உரையாற்றினார்.
இறுதியாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தென்காசி தொகுதி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து தேர்தல் (பிரச்சார) பரப்புரை, சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
கலந்துகொண்டோர்
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ். எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ப.க. செயலாளர் கே.டி.சி.குருசாமி, மாநில ப.க.துணைத் தலைவர் நல்லதம்பி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கோவிந் தன், திமுக வாசுதேவன், நகர திராவிடர் கழகச் செயலாளர் இரா.பாண்டி முருகன் உள்ளிட்ட திராவிடர் கழக ஜனநயாக முற்போக்கு கூட்டணி கட்சித் தோழர்கள், பொதுமக்கள் அதிகமான அளவில் தமிழர் தலைவர் அவர்களின் உயைக் கேட்க ஆர்வமாக கலந்து கொண்டு நின்று கூட்டம் கேட்டு சென்றனர். முன்னதாக இராஜபாளையம் நகர திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஆ.சிவக்குமார் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.


Read more: http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/78000-2014-04-02-10-32-49.html#ixzz2z8b196yo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக