எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 12 ஏப்ரல், 2014

தென்காசி - டாக்டர் கிருஷ்ணசாமியே முந்துகிறார்.


கடந்த சில நாட்களாக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் களத்தில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியின்வெற்றி வாய்ப்பை அறியும் நோக்கில் தொகுதி முழுக்க சுற்றியதில் நான் எனது நண்பர்களுடன் அவதானித்ததை சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.
1. தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர்,சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற அணைத்து சட்டமன்ற தொகுதிளுக்கு உட்பட்ட பகுதிவாழ் சமூக சிந்தனையுள்ள தேவேந்திரர்கள் அனைவரும் பிரிவினை மறந்து ஒருமனதாக டாக்டர் கிருஷ்ணசாமியையேஆதரிப்பதாய் உணர்ந்தேன்.
2. தேவேந்திரர்களில் சிலர் வசந்தி முருகேசனையும், வெகு சிலர் சதன் திருமலை குமாரையும் ஆதரிப்பதாய் கூறுகிறார்கள் அவர்களால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது .
3.கூட்டணி கட்சி என்பதை கருத்தில் கொண்டு தி.மு.க தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமியர்கள் அனைவரும் சாதி-மதம் மறந்து டாக்டர் கிருஷ்ணசாமியை தான் ஆதரிகிரார்கள் அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் எனும் அளவிற்கு தான் இருக்கிறது அந்த கட்சி காரர்களின் மனநிலையும் ஆதலால் எமது சமூக வாக்கோடு கூட்டணி கட்சி தொண்டர்களும் இணையும் போது டாக்டர் கிருஷணசாமியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றே எண்ணுகிறேன்.
4.மொத்தத்தில் தென்காசியில் இன்று வரை டாக்டர் கிருஷ்ணசாமியின்கையே மேலோங்கி இருக்கிறது ஆனால் அங்கே சதன் திருமளைகுமாருக்கு இணையாக வசந்தி முருகேசனும் வெற்றியை எட்டி விடும் தொலைவிலையே இருக்கின்றனர், டாக்டர் கிருஷ்ணசாமி வெகு குறைந்த வாக்குகளில் தான் முன்னிலையில் இருக்கிறார் ஆதலால் புதிய தமிழகம் தொண்டர்களும் தேவேந்திர குல சமூக உணர்வாளர்களும் பிற சமூக நடுநிலை வாக்காளர்களின் வாக்கை பெற இன்னும் தீவரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
  அன்பிகினிய தேவேந்திரர்களே செய் அல்லது செத்து மடி என்கிற இக்கட்டான நிலையில் அரசியல் களத்தில் நிற்கிறது எமது சமூகம், ஆதலால் எண்ணற்ற தேவேந்திரர்கள் சமூக பெயரை சொல்லி பல தொகுதிகளில் எம் சமூக அடையாளமான சிவப்பு பச்சை கொடியேந்தி நின்றாலும் ஜெயிக்க கூடிய வல்லமையுடனும் ஆற்றலுடனும் டாக்டர் கிருஷணசாமி மட்டுமே இன்று களத்தில் நிற்கிறார்.
ஆதலால் தமிழத்தில் மட்டும் அல்ல கடல் கடந்து வாழும் தேவேந்திரர்களின் பார்வையும் தென்காசியை நோக்கி மட்டுமே சுழன்று கொண்டிருகிறது இன்றைய அரசியல் களத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியின்வெற்றி தேவேந்திரர்களின் வெற்றி என்பதை உணர்ந்து உணர்வுள்ள தேவேந்திரர்கள் அனைவரும் டாக்டர் கிருஷ்ணசாமியின்வெற்றிக்கு உங்களால் ஆனதை ஏதோ ஒரு வகையில் களப்பணி செய்யுங்கள் தேவேந்திரர்களின் குரலாக பாராளுமன்றத்தில் கிருஷ்ணசாமியின்குரல் ஒலிக்கட்டும்.
எமது சின்னம் தொலைகாட்சிபெட்டி மறவாதீர் தேவேந்திரர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக