எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 17 ஏப்ரல், 2014

தேர்தல் விதிமுறை மீறல்: டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு


தென்காசி பாராளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பிரசாரம் செய்தார். இரவு 10 மணிக்கு மேல் அவர் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி முத்தையா தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதில் டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் விதிமுறை மீறி இரவு 10 மணிக்கு மேல் அதிக வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தனுஷ்கோடி, செட்டியார் பட்டி தி.மு.க. நகர செயலாளர் தங்கபாண்டியன், ராமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேர்தல் விதிமுறை மீறல்: டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக