எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 28 பிப்ரவரி, 2015

புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடக்கம்...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28), புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்த இவர், கடந்த 22–ந்தேதி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஸ்கரின் உறவினர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று பாஸ்கரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதியம் பாஸ்கர் உடல் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ்(22), பாதாளம் (23), இசக்கி ஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டார். தற்போது அந்த தடை உத்தரவை மார்ச் 9–ந்தேதி மாலை 6 மணி வரை நீட்டித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பாஸ்கர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நேற்று முன்தினம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்துசி சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி.கரன்சின்ஹா உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. அன்பு, டி.எஸ்.பி. பொன்னுதுரை ஆகியோர் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், மனோகர், கலையரசன் ஆகியோர் இன்று பிற்பகல் ஸ்ரீவைகுண்டத்திற்கு வருகின்றனர். பின்னர் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விசாரணையை தொடங்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக