எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 7 பிப்ரவரி, 2015

ஆலங்குளம் சிமெண்டு ஆலையை செயல்படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் 9 இடங்களில் மறியலுக்கு முயற்சி 2 பெண்கள் உள்பட 339 பேர் கைது..



விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி செயல் படுத்த கோரி 9 இடங்களில் மறியலுக்கு முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 339 கைது செய்யப்பட்டனர்.

அறிவிப்பு


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சிமெண்டு ஆலையை ரூ.165 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தி அதனை மீண்டும் செயல் படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் நேற்று கடை அடைப்பு மற்றும் மறியல் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ஆலங்குளத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் பிற பகுதியில் சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந் தன. இதனால் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப் படவில்லை.

மறியல்


மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் கோரிக்கையை வலியுறுத்தி மறியல் செய்ய முயன்ற புதிய தமிழகம் கட்சி யினர் கைது செய்யப் பட்ட னர். விருதுநகரில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராம ராஜ் தலைமையில் 18 பேரும், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜ லிங்கம் தலைமையில் 117 பேரும், சாத்தூரில் மத்திய மாவட்ட செயலாளர் செல்லக் கனி தலைமையில் 46 பேரும், கிருஷ்ணன் கோவிலில் ஒன் றிய செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் 29 பேரும் கைதாயினர்.

சிவகாசி

சிவகாசியில் கார்த்தி தலை மையில் 2 பெண்கள் உள்பட 22 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், ஆலங்குளத்தில் ஒன்றிய செய லாளர் அழகுமலை தலைமை யில் 33 பேரும், காரியாபட்டி யில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், அருப்புக்கோட்டையில் ராமச்சந்திரன் தலைமையில் 17 பேரும் கைதாயினர். மொத்தம் 2 பெண்கள் உள்பட 339 பேர் கைதாயினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக