எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 25 பிப்ரவரி, 2015

தமிழ்நாடு புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்...

பழனி பேருந்து நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் செவ்வாய்க்கிழமை திடீர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் பாஸ்கரன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பழனி பேருந்து நிலையம் முன்பு போராட்டம் செய்யப்பட்டது.  திண்டுக்கல் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது 20க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.  பாஸ்கரனை கொலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற வரும் கொலைகளை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பிய கட்சியினர் திடீரென பேருந்துகள் வெளியேறும் இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி டவுன் போலீஸார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்றனர். 
இதனால் பேருந்து நிலைய பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக