எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 25 பிப்ரவரி, 2015

நெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்: 30 பேர் கைது ..


ஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் கட்சியின் செயலர் படுகொலையில் தொடர்புடைகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் பிச்சினார் தோப்பைச் சேர்ந்த மா. லட்சுமணன் என்ற பாஸ்கரன் (28). புதிய தமிழகம் கட்சியின் நகர செயலரான இவர் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாஸ்கரன் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேருந்துகள் உடைக்கப்பட்டன. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பாஸ்கரன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதனிடையே திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை அருகில் செவ்வாய்க்கிழமை புதிய தமிழகம் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, தலைமையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். கட்சி நிர்வாகிகள் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பாஸ்கரன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வருவதால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக