எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 7 பிப்ரவரி, 2015

ஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க புதிய தமிழகம் கட்சி 9 இடங்களில் மறியல்...

விருதுநகர்:ஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் நடந்த மறியலை தொடர்ந்து, 339 பேர் கைது செய்யப்பட்டனர். ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்த அரசு ஒதுக்கிய ரூ. 165 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து, ஆலையை திறக்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் பிப்.6ல் பொதுகடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் அறிவித்திருந்தது. அதன் படி கட்சியினர் நேற்று சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் மறியலில் ஈடுப்பட்டனர் . கடைகள், போக்குவரத்துக்கள் வழக்கம் போல் இயங்கின. விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் நகர தலைவர் ராமராஜ் தலைமையில் 18 பேர் பங்கேற்றனர்.

* சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே புதிய தமிழகம் மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திக் தலைமையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டியம்மாள் முன்னிலையில் 20 பேர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கைதுசெய்தார். ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் பொன்னுச்சாமி, வக்கீல் குமார், நகர் செயலாளர் முத்து முன்னிலை வகித்தனர். போக்குவரத்து பிரிவு செயலாளர் காளிமுத்து, கனகராஜ், கண்ணன், பெரியசாமி கலந்துகொண்டனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் உட்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணன்கோவிலில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பவுல் ராஜ் தலைமையில் 29 பேரை கைது செய்தனர்.
* சாத்தூர் காமராஜர் சிலை எதிரில் மாவட்ட மத்திய செயலாளர் செல்லக்கனி தலைமையில் அக்கட்சியினர் 46 பேர் ரோடு மறியல் செய்ய முயன்றனர். போலீசார் கைது செய்தனர். முன்னதாக கடைகளை அடைக்க கோரி கட்சியினர் முன்னாள் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.
மாவட்டம் முழுவதும் கட்சியினர் 339 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக