டாக்டர் அய்யா அவர்கள் கொண்டுவந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினைகள் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்:
1) திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட இ.வெள்ளைகால் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம், முருகன் ஆகிய பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 வாரங்கள் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாதது குறித்து
2) தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட 100-க்கும் மேற்ப்பட்ட படுகொலைகள் குறித்து.
3) தமிழககத்தில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்துவரும் கெளரவக் கொலைகளை தடுக்கும் தனிச்சட்டம் கொண்டுவருதல் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம்.
4) விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள திருமலைப்புரம்-அகரத்துப்பட்டி பட்டியலின மக்களை தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யவிடாமல் தடுத்துவரும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து.
4) விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள திருமலைப்புரம்-அகரத்துப்பட்டி பட்டியலின மக்களை தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யவிடாமல் தடுத்துவரும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து.
5) பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திரகுலத்தான் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஒரே சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோருவது குறித்து.
6) சுயநிதி கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்று வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் அரசாணை எண்.92- ஐ தமிழ்நாடு அரசு முழுவதுமாக அமல்படுத்தாதது குறித்து.
7) சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து போராடிவரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து.
8) கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்கள் தங்களது படிப்பிற்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கமறுக்கும் அரசாணையில் திருத்தம் கொண்டுவரக்கோரி தொடர்ச்சியாக பல நாட்களாக நடத்தி வரும் போராட்டம் குறித்து.
9) கோவை சி.பி.எம். தனியார் கல்லூரி மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து நடத்திவரும்போராட்டங்கள் குறித்து.
10) கல்விபெறும் உரிமைச்சட்டத்தின் படி தனியார்பள்ளிகளுக்கு அரசால் வழங்கப்படவேண்டிய நிதியை தமிழக அரசு வழங்காததால், தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கான 25 % இடஒதுக்கீட்டை அளிக்கமறுக்கப்படும் நிலை குறித்து.
11) விருதுநகர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்துவதன் அவசியம் குறித்து.
12) கரும்புப் பயிரிடும் தமிழக விவசாயிப் பெருங்குடி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 விலை நிர்ணயம் செய்யக் கோருவது குறித்து.
13) தென்தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டத்துக்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சிமலையிலுள்ள செண்பகவல்லி அணையை பழுது நீக்கி சீர்செய்ய மத்திய அரசின் உதவியை நாடுவது குறித்து.
14) திருநெல்வேலி மாவட்டம் மானூர் மதிகெட்டான் குளத்தை சீர்செய்ய தமிழக அரசை வலியுறுத்துவது குறித்து.
15) தமிழ்நாடெங்கும் மிகப்பெரிய சமூகச் சீரழிவை உண்டாக்கிவரும் மதுக்கடைகளை ஒழிப்பது குறித்து.
16) தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆக்கிரமைப்புகளை அகற்றுவது குறித்து.
17) தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் பெருகிவரும் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற அபாயகரமான நோய்களால் தொடர்ந்து தமிழக மக்கள் பாதிக்கப்படுவது குறித்து.
18) இராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மிக வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து.
19) மின்துறையில் ஏற்படும் ஊழல்கள் மற்றும் மின்பற்றாக்குறை ஆகியவை குறித்து கவன ஈர்ப்புத்
தீர்மானங்களை கொண்டுவந்தார். புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்.
தீர்மானங்களை கொண்டுவந்தார். புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக