ராஜபாளையத்தில் புதிய தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ராஜபாளையத்தில் புதிய தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும்; உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பட்டியலினநலத்துறை என அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த, இந்தப் போராட்டத்துக்கு, கட்சியின் தென்காசி மக்களவைத் தொகுதி செயலர் ராஜலிங்கம் தலைமை வகித்தார்.
சட்டப்பேரவை தொகுதி செயலர் குமார் முன்னிலை வகித்தார். நகர் செயலர் முத்து வரவேற்றார். கட்சியின் நிறுவனர் கே. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார்.
கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஜி. கனகராஜ் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக