எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 16 ஜூன், 2013

கோவில்பட்டி புதிய தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உள் இடஒதுக்கீட்டை அறவே ஒழிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

கோவில்பட்டி அரசு அலுவலக வளாகம் அருகே கோவில்பட்டி ஒன்றிய மற்றும் நகர புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-

இடஒதுக்கீட்டுக்கு என 76 ஜாதிகளை டாக்டர் அம்பேத்கர் பட்டியலிட்டார். அவர் எண்ணத்துக்கு விரோதமாக 76 ஜாதிகளையும், ஆதிதிராவிடர் என அழைக்கும் அரசாணை உள்ளது. தேவேந்திர குல வேளாளர் குல அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் வண்ணம் பட்டியல் ஜாதிகளில் உள்ள ஆதிதிராவிடர் என்னும் ஒரு ஜாதியின் பெயரை 76 ஜாதிகளுக்கும் சூட்டி, தேவேந்திர குல வேளாளர்களின் ஒட்டுமொத்த அடையாளத்தை அழிக்க தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் திராவிடக் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்ட சமுதாயத்தினரை ஒரே பெயரில் அழைக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. உள் இடஒதுக்கீட்டை அறவே ஒழிக்க வேண்டும். ஒட்டுமொத்த பட்டியலின மக்களை ஆதிதிராவிடர் என அழைப்பதை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உண்ணாவிரதங்கள் நடைபெற்று முடிந்துவிட்டன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்ற மாவட்டங்களில் இம்மாதம் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர் இந்த உண்ணாவிரதப்போராட்த்தில் புதிய தமிழகம்கட்சியின் மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக