எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 23 ஜூன், 2013

அன்று டாக்டர் ராமதாஸ் – இன்று டாக்டர் கிருஷ்ணசாமி !


arasiyaltodayராமநாதபுரம் : சட்டம் – ஒழுங்கு பிரச்சனையால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய, புதிய தமிழகம் தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், புதிய தமிழகம் கட்சி சார்பில், இமானுவேல் சேகரன் குருபூஜையை, அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட, மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, புல்லந்தை, சிக்கல், தேவிபட்டினம், சத்திரக்குடி, பேரையூரில் 13ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதில், கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்க இருப்பதாகவும், பாதுகாப்பு கோரியும், கட்சியினர், போலீசில் மனு செய்தனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கிருஷ்ணசாமிக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதித்து, கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக