எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 13 ஜூன், 2013

சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்


சாத்தூரில் இன்று புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரத்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யவும், ஆதி திராவிடர் நலத்துறை என்பதற்கு பதிலாக பட்டியல் இனத்துறை என்று அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் சாத்தூர் நகர ஒன்றிய புதிய தமிழகம் கட்சி சார்பில் வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சாத்தூர் மதுரை பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக