எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 25 ஜூன், 2013

கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு ! டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு...



 டெல்லி மேல்-சபை தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், அதன் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் 5 பேரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. மீதம் உள்ள ஒரு இடத்துக்கு தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் மனு செய்துள்ளனர். இந்த இரு கட்சிகளுக்கும் போதிய ஆதரவு இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து இந்த நிலையில் இன்று புதிய தமிழகம் கட்சியும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவரும், எல்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி, மற்றொரு எம்.எல்.ஏ.வான நிலக்கோட்டை ராமசாமி ஆகியோர் இன்று பகல் 12.30 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சி.ஐ.டி.காலனியில் உள்ள வீட்டில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் உடன் இருந்தனர்.


சந்திப்புக்குப் பின் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லி மேல்-சபை தேர்தலில் 6-வது எம்.பி.யை தேர்வு செய்வதற்கான போட்டியில் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பது என்று புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. எங்கள் கட்சியின் 2 வாக்குகள் வீணாகி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க.வின் எஞ்சிய வாக்குகள் மூலம் இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜாவும் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வுக்கு எங்கள் வாக்கு தேவையில்லாமல் போய்விட்டது. எனவே கனிமொழிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் 'நீங்கள் அளித்துள்ள ஆதரவு பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா என்று கேட்டதற்கு, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. இப்போது அதுபற்றிய பேச்சே எழவில்லை என்று கிருஷ்ணசாமி கூறினார்.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு அ.தி.மு.க.வுக்கு எங்கள் வாக்கு தேவையில்லை என்ற நிலையில்தான் தி.மு.க.வை ஆதரிக்கிறோம். அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்றார். 

கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு : மாநிலங்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உறுதி?



எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்க முன்வந்துள்ளது.
 இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய கிருஷ்ணசாமி பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இது பற்றி அறிவித்தார்.

அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போதுமான ஆதரவு உள்ளது. எனவே, எங்கள் கட்சியின் வாக்குகள் வீணாகக் கூடாது என்பதற்காக திமுகவுக்கு ஆதரவ்ளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

புதிய தமிழகம் கட்சிக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மனித நேய மக்கள் கட்சி ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது கனிமொழியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் 6வது இடத்தை கைப்பற்ற திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுகவுக்கு மொத்தம் 23 எம்.எல்.ஏக்களும், தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். எனினும் தேமுதிகவில் 7 பேர் அதிருப்தியாளர்களாக உள்ளனர்.  இதனால் அந்தக் கட்சிக்கு 22 எம்.எல்.ஏக்களே உள்ளனர்.

இந்நிலையில் புதிய தமிழகம், மனித் நேய மக்கள் கட்சி என்பன திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் திமுகவின் பலம் தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆறாவது இடத்தை கனிமொழி கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக தேமுதிக, காங்கிரஸைச் சந்தித்து தமது வேட்பாளருக்கு ஆதரவு கோரியிருந்தது. திமுகவும், காங்கிரஸை சந்தித்து மீண்டும் ஆதரவு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு :


மேலவை தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு  புதிய தமிழகம் ஆதரவு அளிக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள 6 பேருக்கான மேலவை தேர்தலில் அ.தி.மு.க. 4 வேட்பாளர்களையும், அ.தி.மு.க.வின் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூலம் 5-வது வேட்பாளரையும் நிறுத்தியுள்ளன. 6-வது வேட்பாளராக தி.மு.க.வின் சார்பில் கனிமொழியும் தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் களத்தில் உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த மனிதநேய மக்கள் கட்சி நேற்று தி.மு.க.வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. இச்சூழலில் அக்கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியான புதிய தமிழகமும், தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிகின்றது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பார் தகவல் கசிந்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க.வின் எண்ணிக்கை 27 ஆக உயரும்.  5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் பட்சத்தில் தி.மு.க.வின் பலம் 32-ஆக உயர்ந்து கனிமொழியின் வெற்றி உறுதியாகும்.

ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி



புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழக்குவதற்காக 76 சாதிகள் அடங்கிய பிரிவை எஸ்.சி.(பட்டியல் இனத்தவர்) என்று அம்பேத்கார் வகுத்துள்ளார். இந்தியா முழுவதும் இதுதான் நடைமுறையில் உள்ளது. 
ஆனால் தமிழகத்தில் எஸ்.சி. என்பதை பொதுவாக பட்டியல் இனத்தவர்கள் என்று மொழி மாற்றம் செய்யாமல் ஆதிதிராவிடர்கள் என்று அழைத்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் மத்திய பகுதி, தென் பகுதியில் அதிகம் வாழும் பள்ளர் இனத்தை சேர்ந்த மக்கள் தங்களை பொது பெயரான ஆதிதிராவிடர் என்ற பெயரில் அழைப்பதை விரும்பவில்லை. தங்கள் இனத்தின் பெயரான தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கவே விரும்புகின்றனர். 
இதற்காக பல்வேறு போராட்டம் நடத்தியும் தமிழகத்தில் ஆளுகின்ற அரசுகள் இதை நிறைவேற்றவே இல்லை. புதிய தமிழகம் கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தற்போது தாலுகா அளவில் உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம். உடனடியாக தமிழக அரசு ஒட்டு மொத்தமாக ஆதிதிராவிடர் என அழைப்பதை கைவிட்டு தேவேந்திர குல வேளாளர் என அழைக்க உத்தரவிட வேண்டும். 
பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்காக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அருந்ததியர் இன மக்கள் 3 சதவீதத்தில் மட்டும் இல்லாமல் மீதமுள்ள 15 சதவீத இட ஒதுக்கீட்டிலும் பங்கு பெறும் வகையில் தற்போது சட்ட திருத்தம் உள்ளது. 
இதனால் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான வேலைவாய்ப்பில் அருந்ததியர் இன மக்கள் முழு வேலைவாய்ப்பையும் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
தற்போது தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 25 ஆயிரத்திற்கும் மேல் காலியிடங்களை நிரப்ப உள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மொத்த காலியிடங்களில் எத்தனை சதவீதம் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த இடங்களில் கண்டிப்பாக பட்டியல் இனத்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 
கல்வி உரிமை சட்டப்படி ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் நலிந்த பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் இந்த முறையை எந்த கல்வி நிறுவனங்களும் பின்பற்றவில்லை. எனவே 25 சதவீத இடங்களை தொழில் கல்விகளில் அரசு ஒற்றை சாளர முறைப்படி நிரப்புவது போல் தமிழகம் முழுவதும் அரசே நிரப்ப வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து முழுமையாக சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்காததால் நான் வெளிநடப்பு செய்தேன். 
வருகிற மேல் சபை எம்.பி. தேர்தல் பதவி குறித்து புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து 12-ந்தேதி முடிவு எடுக்கப்படும்’’என்று கூறியுள்ளார்.

ஆட்சியில் பங்கு கொண்டால்தான் கூட்டணி; நாங்கள் தொகுதி உடன்பாடே செய்திருந்தோம்: டாக்டர் கிருஷ்ணசாமி


ஆட்சியில் பங்கு கொண்டிருந்தால்தால் கூட்டணி என்பதாகும்; நாங்கள் வெறுமனே தொகுதி உடன்பாடுதானே கொண்டிருந்தோம் என்றார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
இன்று திருச்சிக்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு தொடர்பாக வரும் அக்டோபர் 2ல் ஒரு மக்கள் இயக்கம் தொடங்கப்படும். அது குறித்த இதர தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
அப்போது, திமுகவுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் வழங்கப்படும் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
ஐந்து முறை முதல்வராக இருந்த மூத்த அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதரவு கேட்டார். எனவேதான் திமுக.வை  ஆதரிக்கும் முடிவுக்கு வந்தோம். மேலும், அதிமுக, கம்யூ. உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்த வேட்பாளர் வென்றுவிடுவார் என்பதால், எங்கள் வாக்குகள் வீணாகக் கூடாது என்று முடிவு செய்தோம். மேலும் அவர்களுக்கு வெற்றிக்குத் தேவையான வாக்குகளைக் காட்டிலும் அதிகம் உள்ளதால், எங்கள் வாக்குகள் வீணாகாமல் இருக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம். கனிமொழி எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்றார் அவர்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று, இப்போது எதிர்த் தரப்புக்கு ஆதரவு தருவது நியாயமானதா என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு அவர், ஆட்சியில் பங்கு கொண்டால்தான் கூட்டணி என்பது சரியாகும். நாங்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை. மேலும், நாங்கள் வைத்தது கூட்டணி அல்ல, தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்களே... என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு ....

தஞ்சாவூர்: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தருவதற்காக நாங்கள் திமுகவிடம் பணம் எதையும் வாங்கவில்லை. பணம் வாங்கிக் கொண்டு ஆதரவு தரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட அக்கட்சி பணத்தை இறக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த புதிய தமிழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவைத் தெரிவித்தன. இந்த நிலையில், திமுகவிடம் பணம் வாங்கவில்லை என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜ்யசபா தேர்தலில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 5 பேரும் வெற்றி பெறுவது உறுதி. இப்படிப்பட்ட நிலையில், நாங்கள் திமு. வேட்பாளரான கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார். மக்களின் வாக்குகளைப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களானவர்கள் வாக்களிக்கக்கூடிய தேர்தல் இது. இதற்கும் மக்களவைத் தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. திமுகவை ஆதரிக்க பணம் வாங்கினேனா என்று கேட்கிறீர்கள், ரூ. 10 கோடி, ரூ. 20 கோடியை நான் பார்த்தது கிடையாது என்றார் கிருஷ்ணசாமி. இதற்கிடையே, புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் கிருஷ்ணசாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுகக்கு ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது ராஜ்யசபா தேர்தலுக்கு திமுகவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி கேட்கிறார்கள். அதே போல அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டனி தொடருமா என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு இந்த கூட்டனி அமைந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அப்போது சந்தர்ப்பம் எப்படி உள்ளதோ அதன்படி கூட்டனி அமைப்போம் என்றார் அவர்

ஞாயிறு, 23 ஜூன், 2013

புதிய தமிழகமும் ஆதரவு: கனிமொழி வெற்றி உறுதி?


சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சி தலைவர்  டாக்டர் கிருஷ்ணசாமி, கருணாநிதியை இன்று பகல் 12 மணிக்கு நேரில் சந்தித்தார். சென்னை சிஐடி காலனியில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மாநிலங்களவை தேர்தலில் ஒரு உறுப்பினர் வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. திமுகவுக்கு 22 உறுப்பினர்கள் உள்ளனர். 2 உறுப்பினர்களை கொண்ட மனிதநேய மக்கள் மக்கள் கட்சி நேற்று தனது ஆதரவை திமுகவுக்கு வழங்குவதாக அறிவித்துவிட்டது.

எனவே 24 உறுப்பினர்களின் ஆதரவு  உறுதியான நிலையில், தற்போது  2 உறுப்பினர்களை கொண்ட புதிய தமிழகம் கட்சியும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதால் மொத்த ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 8 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.

இந்நிலையில் 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் ஆதரவையும்,  3 உறுப்பினர்களை கொண்ட பாமகவின் ஆதரவையும் திமுக ஏற்கனவே கோரியுள்ளது.
இதில் எதிர்கால கூட்டணி கணக்குகளின் அடிப்படையில் திமுகவுக்கு தனது ஆதரவை காங்கிரஸ் நிச்சயம் அளிக்கும் என்றே டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அதேப்போன்று திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளபோதிலும், திமுகவின் ஆதரவு வேறு எதற்காவது ( ஒருவேளை மீண்டும் கூட்டணி வைக்கலாம் என்று முடிவெடுத்தாலும்) பயன்படும் என்ற நோக்கத்திலும், 3 உறுப்பினர்களின் வாக்குகள் வீணாக வேண்டாம் என்ற எண்ணத்திலும் கனிமொழிக்கு ஆதரவாக பாமக ஆதரவளிக்கலாம் என தெரிகிறது. 

இதன் மூலம் கனிமொழியின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

ஆதரவு ஏன்? கிருஷ்ணசாமி விளக்கம் 
இதனிடையே கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, மாநிலங்களவை தேர்தலில் போட்ட்டியிடும் கனிமொழிக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தெரிவித்தார்.

மேலும் இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 4 பேருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராஜாவுக்கும் போதுமான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்களின் 2 வாக்குகளும் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக, தாம் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி



புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழக்குவதற்காக 76 சாதிகள் அடங்கிய பிரிவை எஸ்.சி.(பட்டியல் இனத்தவர்) என்று அம்பேத்கார் வகுத்துள்ளார். இந்தியா முழுவதும் இதுதான் நடைமுறையில் உள்ளது. 
ஆனால் தமிழகத்தில் எஸ்.சி. என்பதை பொதுவாக பட்டியல் இனத்தவர்கள் என்று மொழி மாற்றம் செய்யாமல் ஆதிதிராவிடர்கள் என்று அழைத்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் மத்திய பகுதி, தென் பகுதியில் அதிகம் வாழும் பள்ளர் இனத்தை சேர்ந்த மக்கள் தங்களை பொது பெயரான ஆதிதிராவிடர் என்ற பெயரில் அழைப்பதை விரும்பவில்லை. தங்கள் இனத்தின் பெயரான தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கவே விரும்புகின்றனர். 
இதற்காக பல்வேறு போராட்டம் நடத்தியும் தமிழகத்தில் ஆளுகின்ற அரசுகள் இதை நிறைவேற்றவே இல்லை. புதிய தமிழகம் கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தற்போது தாலுகா அளவில் உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம். உடனடியாக தமிழக அரசு ஒட்டு மொத்தமாக ஆதிதிராவிடர் என அழைப்பதை கைவிட்டு தேவேந்திர குல வேளாளர் என அழைக்க உத்தரவிட வேண்டும். 
பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்காக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அருந்ததியர் இன மக்கள் 3 சதவீதத்தில் மட்டும் இல்லாமல் மீதமுள்ள 15 சதவீத இட ஒதுக்கீட்டிலும் பங்கு பெறும் வகையில் தற்போது சட்ட திருத்தம் உள்ளது. 
இதனால் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான வேலைவாய்ப்பில் அருந்ததியர் இன மக்கள் முழு வேலைவாய்ப்பையும் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
தற்போது தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 25 ஆயிரத்திற்கும் மேல் காலியிடங்களை நிரப்ப உள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மொத்த காலியிடங்களில் எத்தனை சதவீதம் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த இடங்களில் கண்டிப்பாக பட்டியல் இனத்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 
கல்வி உரிமை சட்டப்படி ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் நலிந்த பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் இந்த முறையை எந்த கல்வி நிறுவனங்களும் பின்பற்றவில்லை. எனவே 25 சதவீத இடங்களை தொழில் கல்விகளில் அரசு ஒற்றை சாளர முறைப்படி நிரப்புவது போல் தமிழகம் முழுவதும் அரசே நிரப்ப வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து முழுமையாக சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்காததால் நான் வெளிநடப்பு செய்தேன். 

இது தற்காலிகமான கூட்டணிதான்.. சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி..

தேனி: ராஜ்யசபா தேர்தலில் நாங்கள் திமுகவுக்கு ஆதரவு தருவது என்பது தற்காலிகமான ஒன்றுதான். இதைப் புதிய கூட்டணியாக பார்க்கக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ராஜ்யசபா தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் 2 சட்டசபை உறுப்பினர்களும் திமுகவுக்கு ஆதரவு தருவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியாகும். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தேனியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். கிருஷ்ணசாமி பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில், கல்வி, வேலைவாய்ப்பில், அருந்ததியினருக்கு, 3 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. உள்ஒதுக்கீடு போக, எஞ்சியுள்ள 15 சதவீதத்திலும், அருந்ததியினர் ஒதுக்கீடு பெறலாம் என, அரசாணை உள்ளது. இது மற்ற தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது; இதில் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். ராஜ்யசபா தேர்தலில், அசாதாரண சூழ்நிலையில், திமுக வை ஆதரித்துள்ளோம். இது லோக்சபா தேர்தலுக்கான புது கூட்டணி அல்ல. அதிமுகவுடன் கூட்டணி சட்டசபை தேர்தலுடன் முடிந்துவிட்டது. தற்போது, நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம் என்றார் அவர்
.


அன்று டாக்டர் ராமதாஸ் – இன்று டாக்டர் கிருஷ்ணசாமி !


arasiyaltodayராமநாதபுரம் : சட்டம் – ஒழுங்கு பிரச்சனையால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய, புதிய தமிழகம் தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், புதிய தமிழகம் கட்சி சார்பில், இமானுவேல் சேகரன் குருபூஜையை, அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட, மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, புல்லந்தை, சிக்கல், தேவிபட்டினம், சத்திரக்குடி, பேரையூரில் 13ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதில், கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்க இருப்பதாகவும், பாதுகாப்பு கோரியும், கட்சியினர், போலீசில் மனு செய்தனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கிருஷ்ணசாமிக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதித்து, கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி


அன்புள்ளம் கொண்ட எனது அருமை நண்பர்களே என் குல சொந்தங்களே நாளை தந்தி தொலைக்காட்சியல் காலை 10 மணிக்கும் இரவு 10 மனிக்கும் தமிழின போராளி டாக்டர் க.கிருஷ்ணசாமி MD.MLA அவர்கள் ஏன் திமுகவுக்கு ஆதரவு போடுத்தோம் என்பதை பற்றி தெளிவாக காரசாரமாக பேசுகிறார் என் இன சோந்தங்களே தவறாமல் பார்க்க உங்களை அன்புடன் வேண்டுகிறேன் முடிந்தவரை இந்த தகவலை நண்பர்களுக்கு சொல்லுங்கள்...

வெள்ளி, 21 ஜூன், 2013

ராஜ்யசபா தேர்தல்.. திமுகவுக்கு 'அதிமுகவின்' புதிய தமிழகமும் ஆதரவு....

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக அணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் 27-ந் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக அணியின் 5 எம்.பிக்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் வேட்பாளராக கனிமொழியும் தேமுதிகவின் வேட்பாளராக இளங்கோவனும் மோதுகின்றனர். ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. திமுகவுக்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர். 2 உறுப்பினர்களை கொண்ட மனிதநேய மக்கள் மக்கள் கட்சி நேற்று தனது ஆதரவை திமுகவுக்கு வழங்குவதாக அறிவித்துவிட்டது. இதனால் 25 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியானது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று நண்பகல் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு புதிய தமிழகம் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிப்பதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா தேர்தலில் அதிமுக, இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போதிய வாக்குகள் உள்ளதாக தெரிவித்தார். எனவே வாக்குகளை வீணாக்காமல் திமுகவிற்கு அளிக்க உள்ளதாக கூறினார். புதிய தமிழகம் கட்சியும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் இடம்பெற்றிருந்தது. தற்போது ராஜ்யசபா தேர்தலில் திமுகவை ஆதரிக்க முன்வந்துள்ளது. லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே புதிய தமிழகம் ஆதரவு அளிக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, திமுக அணியில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. ஆதரவு நிலை ராஜ்யசபா தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு புதிய தமிழகம் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவையும் சேர்த்து மொத்தம் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. தேமுதிக வேட்பாளருக்கு அக்கட்சியின் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி மற்றும் 3 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் யாருக்கு ஆதரவு என்பதைத் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவை திமுகவும் தேமுதிகவும், பாட்டாளி மகள் கட்சியின் ஆதரவை திமுகவும் கோரியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
.


சாதிகள் பட்டியலில் மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது: டாக்டர் க. கிருஷ்ணசாமி


மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறும் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.இது தொடர்பாக திருநெல்வேலி செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்:
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் புதன்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிலை குறித்து முடிவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
எஸ்.சி. என்ற பிரிவு 76 சாதிகளை உள்ளடக்கிய தொகுப்பு. அதில் ஒரு சாதி தான் ஆதிதிராவிடர். ஆனால், தமிழகத்தில் 76 சாதிகளையும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் ஆதிதிராவிடர் என அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க தப்பானது. ஆதிதிராவிடர் நலத்துறை என்றே செயல்படுகிறது வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை. எனவே,  எஸ்.சி. பிரிவை பட்டியலினம் என்றே அழைக்க வேண்டும். இதேபோல் பள்ளர் இனத்தை தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக 40 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம். தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்கள் இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முந்தைய ஆட்சியில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு பிரித்து கொடுக்கப்பட்டது. இது மாநில அரசின் வரம்பு மீறிய செயலாகும். சாதிகள் பட்டியலில் மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.அருந்ததியர்களுக்கு 3 சதவீத ஒதுக்கீடு மட்டுமின்றி, மீதமுள்ள 15 சதவீத ஒதுக்கீட்டிற்கும் அவர்கள் போட்டியிடலாம் என அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 18 சதவீத இடத்தையும் அருந்ததியினர் மட்டுமே பெரும் நிலை உள்ளது. இந்த மூன்று பிரச்னைகளையும் மையமாக வைத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய வாரியாக புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் ஜூலை முதல் வாரம் வரை தொடர்ந்து நடைபெறும். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
கடந்த 2011- 2012 மற்றும் 2012- 2013 -ம் ஆண்டுகளில் தமிழகத்தில் 25 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தில் இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் ஆசிரியர் நியமனத்தில் எந்தெந்த சாதிக்கு எவ்வளவு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.எனவே, வரும் கல்வி ஆண்டு முதல் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை அரசே நிரப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் விநியோகித்து, 25 சதவீத இடங்களுக்கு ஏழை, நலிவடைந்த மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக புதிய தமிழகம் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் கிருஷ்ணசாமி.
பேட்டியின் போது மாநகர் மாவட்ட செயலர் செல்லப்பா, புறநகர் மாவட்ட செயலர் மதுரம் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தி தி.மு.க. துரோகம் செய்துவிட்டது: டாக்டர் கிருஷ்ணசாமி


கடந்த முறை ஆட்சி செய்த தி.மு.க. அரசு 76 சாதிகளில், 70 சாதிகளுக்கு விரோதமாக 3 சதவீத அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி துரோகம் செய்துவிட்டது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் அவர் கூறியதாவது:
பல முறை தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளால் வெற்றி பெற்ற தி.மு.க. தனது ஆட்சி காலத்தின் இறுதிகட்டத்தில் ஒரு நபர் கமிஷனைப் போட்டு ஏமாற்றி சென்று விட்டது. 76 சாதிகளில் 70 சாதிகளுக்கு விரோதமாக அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை தி.மு.க. அரசு அமலாக்கியது. இதன் காரணமாக 76 சாதிகளுக்கான முதல் வாய்ப்பை அருந்ததியர் என்னும் ஒரு சாதி மட்டுமே அபகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தி.மு.க. செய்த துரோகம். இதன் விளைவாக அடுத்த 30 அல்லது 40 வருடங்களுக்கு எந்த உயர் பதவிகளிலும் தேவேந்திர குல வேளாளர் போட்டியிட முடியாத சூழ்நிலை உள்ளது. இது சமூக நீதிக்குப் புறம்பானது.
2011 பொதுத் தேர்தல் மற்றும் 2012 சங்கரன்கோவில் இடைத் தேர்தலின் போது அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தயங்குகிறது.ஆதிதிராவிடர் என்பது பட்டியலில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்கும். ஆனால் 76 சாதிகளை உள்ளடக்கிய ஒட்டு மொத்த பட்டியலின மக்களை, ஆதிதிராவிடர் என்ற ஒரு பெயரில் அழைப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. தேவேந்திர குல வேளாளர் என அரசாணைப் பிறப்பிக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
உண்ணாவிரத்திற்கு போக்குவரத்து சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் எஸ்.டி.கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.ராமராஜ் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். உண்ணாவிரத்ததில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் டி.லட்சுமி நன்றி கூறினார்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

கோவில்பட்டி புதிய தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உள் இடஒதுக்கீட்டை அறவே ஒழிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

கோவில்பட்டி அரசு அலுவலக வளாகம் அருகே கோவில்பட்டி ஒன்றிய மற்றும் நகர புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-

இடஒதுக்கீட்டுக்கு என 76 ஜாதிகளை டாக்டர் அம்பேத்கர் பட்டியலிட்டார். அவர் எண்ணத்துக்கு விரோதமாக 76 ஜாதிகளையும், ஆதிதிராவிடர் என அழைக்கும் அரசாணை உள்ளது. தேவேந்திர குல வேளாளர் குல அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் வண்ணம் பட்டியல் ஜாதிகளில் உள்ள ஆதிதிராவிடர் என்னும் ஒரு ஜாதியின் பெயரை 76 ஜாதிகளுக்கும் சூட்டி, தேவேந்திர குல வேளாளர்களின் ஒட்டுமொத்த அடையாளத்தை அழிக்க தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் திராவிடக் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்ட சமுதாயத்தினரை ஒரே பெயரில் அழைக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. உள் இடஒதுக்கீட்டை அறவே ஒழிக்க வேண்டும். ஒட்டுமொத்த பட்டியலின மக்களை ஆதிதிராவிடர் என அழைப்பதை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உண்ணாவிரதங்கள் நடைபெற்று முடிந்துவிட்டன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்ற மாவட்டங்களில் இம்மாதம் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர் இந்த உண்ணாவிரதப்போராட்த்தில் புதிய தமிழகம்கட்சியின் மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

வியாழன், 13 ஜூன், 2013

புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வருகையைத் தடுக்க போலீஸ் தீவிர வாகன சோதனை


ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் புதிய தமிழக கட்சி தலைவர், மருத்துவர் கிருஷ்ணசாமி வருகையைத் தடுக்க, நேற்றும்(புதன் கிழமை), இன்றும்(வியாழக்கிழமை) போலீஸார், தீவிர வாகன சோதனை நடத்தினர். 
இமானுவேல் சேகரன் நினைவு நாளை, அரசு நிகழச்சியாக கொண்டாடுதல், பள்ளர் இனத்தை தேவேந்திர குலத்தில் சேர்த்தல், அருந்ததியர் இட ஒதுக்கீடு வரைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில், ஜூன்.13(வியாழக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக, அந்த கட்சியின் தலைவர், மருத்துவர் ஆர்.கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல், புல்லந்தை, தேவிபட்டினம், போகலூர், பேரையூர் ஆகய 5 ஊர்களில் உண்ணாவிரதம் நடைபெறுவதாகவும், இதில் தானும் கலந்து கொள்வதாகவும் கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார்.
ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்ததோடு, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் கிருஷ்ணசாமி நுழையக் கூடாது என்ற முறையி்ல 144 தடை உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் க.ந்நத குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயி்லவாகணன் ஆகியோர் அறிவித்திருந்தனர். ஆனாலும் தடையை மீறி ராமநாதபரம் மாவட்டத்திற்குள் நுழைந்து, தனது கட்சியினரை உண்ணாவிரதம் இருக்கச் செய்வேன் என்றும் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.
எனவே நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் எந்த வழியிலாவது இருந்து கிருஷ்ணசாமி நுழைவதைத் தடுக்க ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து கமுதி பகுதியில், அருப்புக்கோட்டை சாலையில் கிழாமரத்துப்பட்டி என்ற இடத்திலும், சாயல்குடி அருகே தூத்துக்குடி சாலையில் கன்னிராஜபுரம் என்ற இடத்திலும், பார்த்திபனூர் அருகே நரிக்குடி சாலையில் பிடாரி சேரி என்ற இடத்திலும், அ.பரலை என்ற இடத்திலும் பலத்த போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. இதே போன்று பரமக்குடி, ராமநாதபுரம், தேவிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். சோதனைச் சாவடிகள் அமைத்து நேற்று பகல் முதல் இரவு வரையிலும் பின்னர் மறு நாளும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களில் கிருஷ்ணசாமி உள்ளாரா? என்று கடும் சோதனை போட்டனர்.

புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வருகையைத் தடுக்க போலீஸ் தீவிர வாகன சோதனை


ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் புதிய தமிழக கட்சி தலைவர், மருத்துவர் கிருஷ்ணசாமி வருகையைத் தடுக்க, நேற்றும்(புதன் கிழமை), இன்றும்(வியாழக்கிழமை) போலீஸார், தீவிர வாகன சோதனை நடத்தினர். 
இமானுவேல் சேகரன் நினைவு நாளை, அரசு நிகழச்சியாக கொண்டாடுதல், பள்ளர் இனத்தை தேவேந்திர குலத்தில் சேர்த்தல், அருந்ததியர் இட ஒதுக்கீடு வரைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில், ஜூன்.13(வியாழக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக, அந்த கட்சியின் தலைவர், மருத்துவர் ஆர்.கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல், புல்லந்தை, தேவிபட்டினம், போகலூர், பேரையூர் ஆகய 5 ஊர்களில் உண்ணாவிரதம் நடைபெறுவதாகவும், இதில் தானும் கலந்து கொள்வதாகவும் கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார்.
ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்ததோடு, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் கிருஷ்ணசாமி நுழையக் கூடாது என்ற முறையி்ல 144 தடை உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் க.ந்நத குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயி்லவாகணன் ஆகியோர் அறிவித்திருந்தனர். ஆனாலும் தடையை மீறி ராமநாதபரம் மாவட்டத்திற்குள் நுழைந்து, தனது கட்சியினரை உண்ணாவிரதம் இருக்கச் செய்வேன் என்றும் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.
எனவே நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் எந்த வழியிலாவது இருந்து கிருஷ்ணசாமி நுழைவதைத் தடுக்க ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து கமுதி பகுதியில், அருப்புக்கோட்டை சாலையில் கிழாமரத்துப்பட்டி என்ற இடத்திலும், சாயல்குடி அருகே தூத்துக்குடி சாலையில் கன்னிராஜபுரம் என்ற இடத்திலும், பார்த்திபனூர் அருகே நரிக்குடி சாலையில் பிடாரி சேரி என்ற இடத்திலும், அ.பரலை என்ற இடத்திலும் பலத்த போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. இதே போன்று பரமக்குடி, ராமநாதபுரம், தேவிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். சோதனைச் சாவடிகள் அமைத்து நேற்று பகல் முதல் இரவு வரையிலும் பின்னர் மறு நாளும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களில் கிருஷ்ணசாமி உள்ளாரா? என்று கடும் சோதனை போட்டனர்.

ராஜபாளையத்தில் புதிய தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.



ராஜபாளையத்தில் புதிய தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ராஜபாளையத்தில் புதிய தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும்; உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பட்டியலினநலத்துறை என அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த, இந்தப் போராட்டத்துக்கு, கட்சியின் தென்காசி மக்களவைத் தொகுதி செயலர் ராஜலிங்கம் தலைமை வகித்தார்.
சட்டப்பேரவை தொகுதி செயலர் குமார் முன்னிலை வகித்தார். நகர் செயலர் முத்து வரவேற்றார். கட்சியின் நிறுவனர் கே. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார்.
கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஜி. கனகராஜ் நன்றி கூறினார்

பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதிய தமிழகம் கட்சியினர், அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமையில் சங்கரன்கோவில் நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உண்ணாவிரதத்தை துவக்கி வைத்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, அருந்ததியர்களின் உள்ஒதுக்கீடான 3 சதவீதத்தை ரத்து செய்யவேண்டும். நாங்கள் வேறுஎதுவும் கேட்கவில்லை. பள்ளன், குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன் ஆகிய சாதியை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் இனத்தவர் என அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அதற்காகவே இந்த உண்ணாவிரதம் என்று கூறினார். 
உண்ணாவிரதத்தில் அத்தொகுதிக்குட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்


சாத்தூரில் இன்று புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரத்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யவும், ஆதி திராவிடர் நலத்துறை என்பதற்கு பதிலாக பட்டியல் இனத்துறை என்று அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் சாத்தூர் நகர ஒன்றிய புதிய தமிழகம் கட்சி சார்பில் வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சாத்தூர் மதுரை பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரத்திற்குள் நுழைய புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு தடை

ராமநாதபுரம்: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13ஆம் நாள் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புல்லந்தை, பேரையூர், தேவிபட்டணம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்காக புதிய தமிழகம் கட்சியினர் காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் இந்த உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதில், கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்க இருப்பதாகவும், பாதுகாப்பு கோரியும், கட்சியினர், போலீசில் மனு செய்தனர். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு மாவட்ட எஸ்.பி பரிந்துரை கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் கிருஷ்ணசாமிக்கு தடை விதித்து கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.