எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 20 டிசம்பர், 2016

தமிழக அரசின் உள்துறை செயலாளரை, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.. M .D .M .L .A ., அவர்கள் சந்திப்பு.

தமிழக அரசின் உள்துறை செயலாளரை, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.. M .D .M .L .A ., அவர்கள் சந்திப்பு.
நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே சங்குபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் கடந்த 12ம் தேதி சங்குபுரம், கூடலூர் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவருடைய கொலை வழக்கை நியாமான முறையில் நடைபெற நெல்லை மாவட்ட ஆட்சியர்க்கு உத்தரவிட வலியுறுத்தி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் திரு அபூர்வா வர்மா அவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது மாநில அமைப்புச் செயலாளர் வி.கே அய்யர் அவர்கள் உடன் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக