எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 28 டிசம்பர், 2016

சிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.

சிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.....சிவகாசி அருகே விளாம்பட்டி தேன்காலனியில், புதிய தமிழகம் கட்சி பெயர் பலகைக்கு தீவைத்தவர்களை கைது செய்யக்கோரி புதன்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
விளாம்பட்டி தேன்காலனியில் வைக்கப்பட்டிருந்த புதிய தமிழகம் கட்சி பெயர் பலகையை யாரோ சிலர் தீவைத்து எரித்திருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.
இதையடுத்து கட்சி பெயர்பலகைக்கு தீவைத்த நபர்களை கைது செய்யக்கோரி தேன்காலனி மக்கள், சிவகாசி-விளாம்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த சிவகாசி வட்டாட்சியர் அய்யக்குட்டி, காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.சி.வெள்ளையன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முறையாக புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். இதையடுத்து, புதிய தமிழகம் கிளை செயலாளர் உத்தமராஜா மாரனேரி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக