எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 28 டிசம்பர், 2016

விஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள்.,

விஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள்., வலியுறுத்தியுள்ளார்...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தற்கொலை செய்துக் கொண்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவின் வீடு கடலூர் கோண்டூரில் உள்ளது.
சனிக்கிழமையன்று அவரது வீட்டிற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள் அவர்கள் வந்திருந்தார். அங்கு விஷ்ணுபிரியாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதோடு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றவாளிகளை நெருங்கும் நேரத்தில் அவருக்கு உயர் அதிகாரிகளால் நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 1 நம்பர் லாட்டரி ஒழிப்பு, இரவு 10 மணிக்கு மேல் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். மேலும், மில்அதிபர் ஒருவரது கொலை வழக்கினையும் விசாரித்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக வழக்கில் சம்பந்தமில்லாத 4பேரை குண்டர் தடுப்புக்காவலில் அடைக்கவும் அவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் அவர் ஈடுபட கொடுக்கப்பட்ட நெருக்கடியே அவரது மரணத்திற்கு காரணம். எனவே, இதில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கருதுவதால் சிபிஐ விசாரணையை கோருகிறோம்.
இச்சம்பம் போலீஸ்துறையில் பெண்கள் பணியாற்ற அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக