எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 28 டிசம்பர், 2016

தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ...!!!

தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ...!!!
தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணியில் வெள்ள நீரை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டும் மாவட்ட நிர்வாம் போர்கால அடிப்டையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ள நிவாரண பணியை மேற்பார்வையிட நீதி மன்ற மேற்பார்வையில் குழூ அமைத்திட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம் .டி .எம் .எல் .ஏ .,அவர்கள் வழக்கு தொடந்துள்ளார். இன்று மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

தத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…

தத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…….
தமிழகத்தில் கனமழை கடந்த ஒரு மாத காலமாக பெய்து வருகிறது. இம்மழையில் பெரும் பாதிப்புக்குள்ளான கடலூா் மாவட்டம், சென்னை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் போன்றவை ஆகும். கடலூா் மாவட்டத்திலும் சென்னை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை பல அரசியல் கட்சி தலைவா்கள், பிரமுகா்கள் சென்று ஆறுதல் கூறியும், உணவு உடை வழங்கியும் போட்டோவுக்கு போஸ்ஸீம் கொடுத்தனா். சிலா் தனது கட்சிக் கொடியை அறிமுக படுத்திக்கொண்டே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனா். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவா்களுக்கும், பிரமுகா்களுக்கும் சென்னை மற்றும் கடலூா் போன்ற மாவட்டங்கள் கண்ணுக்கு தெரிந்ததே தவிர, தென்தமிழகத்தின் முத்து நகரமான தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதே வருத்தப்படக்கூடியது. ஆனால் ஒரே ஒரு அரசியல் கட்சி தலைவா், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்கள் மட்டும் தான் இன்றைய நாள் வரை தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து வருகிறார்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடியில் முகாமிட்டு தனது தொகுதிக்கு உட்பட்ட ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கு சென்று வெள்ளநீா் பாதித்த இடங்களை பார்வையிட்டு, மக்களுக்கு உணவு, உடை, அரிசி ஆகியவைகளை வழங்கிட தனது கட்சியின் பொறுப்பாளா்களுக்கு உத்திரவிட்டா். மேலும் அனைத்து சமுதாய மக்களின் குறைகளை கேட்டு அவா்கள் வெள்ளத்தால் எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளார்கள் என்பதை வீடு வீடாக சென்று மதிப்பீடு செய்யவும் தனது கட்சிகாரா்களுக்கு உத்தரவு பிறபித்தார். மேலும் டாக்டா் அய்யா அவா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே தொடா்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். ஒரு தாலுகாவில் வெள்ளநீரை சமாளிக்க முடியாத மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று அறிக்கையும் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம குறிஞ்சி நகரில் தேங்கி இருந்த வெள்ளநீரை அதிகாரிகள் வெளியேற்றும் வரை தா்ணா போராட்டம் மேற்க்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளம், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் விவசாய நிலங்களை பைக்கில் சென்று பயணம் செய்து பார்வையிட்டார். தனிநபா் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்க்கொண்டார். தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எந்த ஒரு உதவியும் செய்யாதததை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டார். பல இடங்களில் பொதுமக்களும் வெள்ளநீரை வெளியேற்றாததைக் கண்டித்து சாலை மறியல் செய்தனா்.
டாக்டா் அய்யா அவா்கள் தனது தொகுதி மட்டும் அல்லாமல் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை இரவு, பகல் என்று பாராமலும் உணவு வேளை என்றும் பாராமலும் தூத்துக்குடி மக்களை கவனித்து வந்தார். தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கிட பல அறிக்கை விட்டும், ”செவிடன் காதில் சங்கு ஊதினார் போல” தமிழக அரசு கண்டு கொள்ள வில்லை. ஆதலால் டாக்டா் அய்யா அவா்கள் இன்று மதுரை உயா்நீதி மன்றத்தில் - தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப்பணியில் வெள்ளநீரை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டும் மாவட்டநிர்வாகம் போர்கால அடிப்டையில் நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தியும், வெள்ள நிவாரண பணியை மேற்பார்வையிட நீதி மன்ற மேற்பார்வையில் குழு அமைத்திட உத்திரவிட கோரியும் வழக்கு தொடரபட்டுள்ளது. இந்த வழக்கில் டாக்டா் அய்யா அவா்களே நேரடியாக வாதிட்டார்கள். மதுரை உயா்நீதி மன்றமும் உடனடியாக வெள்ள நீர் அகற்ற அரசு நடவடிக்கை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவு பிறபித்துள்ளது. இவ்வழக்கில் புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞா்களான திரு. பாஸ்கா் மதுரம், திரு. கனகராஜ், திரு.பவுன்ராஜ், திரு.குமார், திரு.கார்மேகம், திரு.வீரபாண்டி ஆகியோர் டாக்டா் அய்யாவுடன் உடன் இருந்தனா்.
தமிழகத்தில் நிகழ்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சணையை உயா்நீதி மன்றம் வரை சென்று மக்களின் துன்பங்களை துடைத்த புதிய தமிழகம் டாக்டா் அய்யா அவா்களை போன்று தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவா்களை எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து நான் கண்டது இல்லை.
எனவே தத்தெளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா் – டாக்டா் அய்யா அவா்களை சாரும் என்பதில் சொல்வதில் இன்றியமையாதது.
நன்றி.
------------- என்றும் டாக்டா் அய்யா அவா்களின் வழியில் 

சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் குற்றச்சாட்டு.

சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை:
டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் குற்றச்சாட்டு.
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக கூறி புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் , அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரமில்லா நேரத்தின்போது தம்மை பேச அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கோரிக்கை வைத்தார். இதற்கு அனுமதி மறுத்ததால் அவர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். அவையின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக கூறி அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை என்றார்

காலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து போராடும்..

காலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து போராடும் .....புதிய தமிழகம் கட்சி தலைவர். டாக்டர் .க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A அவர்கள் அறிக்கை: ......விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமுதாய மக்களின் அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளாக கூறப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.
தமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் தற்போதும் "ன்' விகுதி வைத்து ஒருமையில் அழைக்கப்படுகின்றனர். பட்டியலின பிரிவில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதை அரசு நிறைவேற்றவில்லை.
பட்டியலின துறைக்கு சமூக நீதித்துறை அல்லது பட்டியலினத்துறை என பெயரிடுவது, உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடக்கவுள்ளது.முதற்கட்டமாக 20 முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். 20ம் தேதி திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர், 21ம் தேதி மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கடலூர், 22ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, நாகப்பட்டணம், விழுப்புரம், திருவாரூர், 23ம் தேதி ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், 24ம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இப்போராட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து வேண்டும்.

தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்

தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவேந்திரகுல வேளாளர் வகுப்பினருக்கு மத்திய மாநில அரசுகள் விவசாயத்தில் சிறப்பு நிதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 7ஆம்தேதி முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தபோவதாக தெரிவித்தார்.
மேலும் மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயரை வைக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு ...!!!

டெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு ...!!!
இலங்கை தமிழர்களுக்காக, டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் 2009 அக்டோபர் 2ம் தேதி அன்று நடத்திய ஐந்து நிமிடம் போராட்டம். உலகத்தில் பல நாடுகள் மற்றும் ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த போராட்டம்.
இந்த போராட்டத்திற்க்காக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், உலக நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இந்த போராட்டம் முடித்து விட்டு, சென்னை திரும்பிய டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A .,அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் தாக்க பட்டு , அதில் அலுவலக கண்ணாடி உடைந்தது, பூந்தோட்டி உடைந்தது என்று உலகத்தில் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கையில் பல லட்சம் தமிழர்களை ராஜபக்சே கோன்ற போது. இந்த உலக நாடுகள் எங்கே போனது என்று கேள்வி எழுப்பினார்.
இந்த போராட்டத்திற்க்காக இன்று வரை டெல்லி நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A .,அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் வி.கே அய்யர் அவர்கள், கரூர் பாண்டியன், தஞ்சை குணா, திருச்சி அய்யப்பன், திருச்சி சங்கர் உட்பட 12 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது

கொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர் கிருஷ்ணசாமி

கொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர் கிருஷ்ணசாமி
விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில், கொலை குற்றம் சுமத்தப்பட்ட யுவராஜை சாட்சியத்திற்காக அழைக்கும் சி.பி.சி.ஐ.டி.-ன் போக்கு, சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
சென்னையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் வழக்கறிஞர் மாளவியா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில், மர்மமான முறையில் உயிரிழந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கு விவகாரத்தில், காவல்துறை உயரதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுள்ள நிலையில், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு, மனு தாக்கல் செய்யப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மேலும், கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள யுவராஜை, சாட்சியம் அளிக்க அழைப்பாணை விடுத்திருக்கும் சி.பி.சி.ஐ.டி.-ன் போக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளதென்று தெரிவித்தார்.தலித் பெண் என்பதால் தான், தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரம் என்று பொய் தகவலை பரப்புகிறது காவல்துறை என வழக்கறிஞர் மாளவியா தெரிவித்தார்.

விஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள்.,

விஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள்., வலியுறுத்தியுள்ளார்...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தற்கொலை செய்துக் கொண்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவின் வீடு கடலூர் கோண்டூரில் உள்ளது.
சனிக்கிழமையன்று அவரது வீட்டிற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள் அவர்கள் வந்திருந்தார். அங்கு விஷ்ணுபிரியாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதோடு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றவாளிகளை நெருங்கும் நேரத்தில் அவருக்கு உயர் அதிகாரிகளால் நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 1 நம்பர் லாட்டரி ஒழிப்பு, இரவு 10 மணிக்கு மேல் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். மேலும், மில்அதிபர் ஒருவரது கொலை வழக்கினையும் விசாரித்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக வழக்கில் சம்பந்தமில்லாத 4பேரை குண்டர் தடுப்புக்காவலில் அடைக்கவும் அவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் அவர் ஈடுபட கொடுக்கப்பட்ட நெருக்கடியே அவரது மரணத்திற்கு காரணம். எனவே, இதில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கருதுவதால் சிபிஐ விசாரணையை கோருகிறோம்.
இச்சம்பம் போலீஸ்துறையில் பெண்கள் பணியாற்ற அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் ...

விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல் ..

விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல் ..
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தற்கொலை செய்துகொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவின் வீடு கடலூர் அருகே கோண்டூரில் உள்ளது.
அவரது வீட்டுக்கு சனிக்கிழமை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் வந்திருந்தார்.
அங்கு விஷ்ணுபிரியாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் கூறியது: விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றவாளிகளை நெருங்கும் நேரத்தில் உயரதிகாரிகளால் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பான வழக்கில் சம்பந்தமில்லாத 4 பேரை குண்டர் தடுப்புக்காவலில் அடைக்க விஷ்ணுபிரியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட கொடுக்கப்பட்ட நெருக்கடியே அவரது மரணத்துக்குக் காரணம். எனவே இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கருதுவதால், சிபிஐ விசாரணை கோருகிறோம்.
இச்சம்பவம் காவல் துறையில் பெண்கள் பணியாற்ற அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலர்கள் எம்.வி.ராஜா, ச.வெற்றிசெல்வன், மாநில இளைஞரணிச் செயலர் பாஸ்கர்மதுரம், மாவட்ட துணைச் செயலர்கள் ர.சுதாகர், எஸ்.பாலமுருகன், நகரச் செயலர் கு.அ.ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சி:

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சி:டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள். குற்றச்சாட்டு...
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள். குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் வழக்கறிஞர் மாளவியாவை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. பொறியியல் மாணவர் கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக 3 மாத காலம் என்ன நடவடிக்கையை இந்த காவல்துறை எடுத்து வந்ததோ, அதேபோல டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணத்திற்கு காரணமானவர்களையும் காப்பாற்றுவதற்கு உண்டான நடவடிக்கையிலும் இறக்கியிருக்கிறார்கள்.
இப்படி சுற்றி வலைத்து யாராவது ஒருவரை பலிகாடாக்கி அந்த வழக்குகளை முடிப்பதற்காக முயற்சி செய்கிறார்கள். அது தவறானது. என்றார் அவர்.

தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்தில் .

தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்தில் ..... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .. டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் ..தேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வோரு சமுதாயமும் தங்களுடைய அடையாளத்திற்க்கா போராடி வருகின்றனர். அது போலவே காலாடி, பண்ணாடி, வாதிரியான், தேவேந்திர குலத்தான், பள்ளன் போன்ற பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கக் கூடிய ஒரே சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று இந்த சமூக மக்கள் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக போராடியும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்.
அது எந்த விதத்திலும் தவறு இல்லை. இதை ஒரு அரசாங்கம் ஒரு சின்ன ஒருசொட்டு மையுங்கூட செலவாகாது அதற்க்கு உத்தரவு போடுவதற்க்கு. இன்றைக்கு இருக்கும் திராவிட இயக்கங்களுக்கு மனசு வரவில்லை.
இதனால் வெறுப்புற்ற அச் சமூக மக்கள், திராவிட கட்சிகளின் அரசாங்கமும் , திராவிட இயக்கங்களும் நம்மை இன்னும் பள்ளர்/ மள்ளர் என்று கூப்பிட்டு என்று கூப்பிட்டு சிறுமைப் படுத்தி பார்ப்பதில் தான் அதிமுக , திமுக விரும்புகிறது என்பதை நினைத்து , வெறுப்புற்ற மக்கள் , அப்படியானால் இந்த பாட்டியலில் இருந்தே விடு பட வேண்டும் என்று நினைக்க துவங்கி விட்டனர்.
பட்டியலே வேண்டாம் என்றும் சொல்ல
ஆரம்பித்து விட்டனர். இதில் நியாயம் இருகின்றது.
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் அந்த மக்களுடைய பார்வை இப்போழுது ; இந்த அரசாங்கம் தங்களை ஒரு கெளரவத்தோடு அழைப்பதற்க்கு தயங்குகிற காரணத்தினால் இந்த ஒதுக்கீடு- தாழ்த்தப் பட்ட பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வுகள் தேவேந்திர குல மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.
இட ஒதுக்கிடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த இழிவோடு பட்டியலுக்குள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக தங்களை பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக படித்தவர், படிக்காதவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு கூறினார்..

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கோவையில் நிருபர்களிடம் இன்று கூறியது:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கோவையில் நிருபர்களிடம் இன்று கூறியது:
தேசிய நெஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகள் படிப்படியாக அகற்றப்படும் தனது பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், அகற்றவில்லை. இதை கண்டித்து நாடு முழுவதும் ஸ்டிரைக் நடக்கிறது. இதற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.
மேற்கு மண்டல மாவட்டங்களில் கூலிப்படை கலாச்சாரம் பரவி வருகிறது. துவக்கத்திலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நாமக்கமல் டிஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் உண்மை நிலைய கண்டறிய சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். மேலும் உடனடியாக யுவராஜை கைது செய்ய வேண்டும் என்றார்.

காலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .

காலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .....தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்கு நிலவரம்.
*இராஜபாளையம்-26,706.
*ஓட்டப்பிடாரம்-24,585.
*ஸ்ரீவில்லிபுத்தூர்-20,364.
*வாசுதேவநல்லூர்-9000.
*ஸ்ரீவைகுண்டம்-8000.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெற்றி பெற்றார். அவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உறுப்பினர் என்று சட்டமன்றத்தில் பதிவு ஆனது..அப்போது தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது ..

03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள்..

03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள் இன்று கடலூர் கோண்டூர் டிஎஸ்பி விஷ்ணுபிரியா அவர்கள் இல்லத்திற்கு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத்திற்கு உயர் அதிகாரிகளின் அழுத்தமே காரணம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள் கடலூர் கோண்டூரில் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வரும் என கூறினார்.

தலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்.... புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள்

தலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்.... புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள் ..தமிழகத்தின் நிர்வாக நலன் கருதி, தலைமைச் செயலக கிளையை மதுரைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை தென்னகத்தில் வலுவடைந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருப்பதுபோல மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
புதிய வருவாய் கோட்டங்கள்
மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி என்பது மட்டும் ஜனநாயகம் அல்ல. அந்த ஆட்சி மக்கள் எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டுதான், புதிய மாவட்டங்களும், தாலுகாக்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்தில் புதிதாக 9 வருவாய் கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும், 59 குறுவட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் சூழலில், தலைமைச் செயலகம் மட்டும் தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி நிற்கிறது. அதுவும் தென்னக மக்களுக்கு பாரமாக, தமிழகத்தில் வடக்கு ஓரமாக ஒதுங்கி நிற்கிறது.
தென்னகத்தின் அவஸ்தை
சென்னையில் தலைநகர் இருப்பதன் அவஸ்தையை தென்னகத்தில் பிறந்தவர்களால்தான் உணர முடியும். சென்னையில் புறப்படும் மின்சார ரயில் தென்னகத்தை அடைய வேண்டுமானால், இடையில் நிறுத்தி டீசல் எஞ்சின் மாற்ற வேண்டிய சூழல் தொடர்கிறது. தென்னக மக்கள் சென்னை போக வேண்டுமானால் 3 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டிய அவலமும் நீடிக்கிறது. சுமார் 700 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள கன்னியாகுமரி மக்கள், தலைமைச் செயலக அதிகாரி ஒருவரை சந்திக்க வேண்டும் என்றால் குறைந்தது 2 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டிய கட்டாயமும் தொடர்கிறது.
கிராம மக்களைப் பொருத்தவரையில் ஆட்சியர் அலுவலகங்கள் தான் தலைமைச் செயலகங்கள் என்றாலும் அதிகாரம் எல்லாம் சென்னையில்தான் குவிந்திருக்கிறது. தகுதியிருந்தும் உரிமை மறுக்கப்படும்போது, மேல்முறை யீட்டிற்காக மக்கள் சென்னை செல்கிறார்கள். பணி நியமனம், இடமாற்றம், நில ஒதுக்கீடு போன்றவற்றிற்கு சென்னை சென்றே ஆக வேண்டும். இவ்வளவு ஏன்? உள்ளூர் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால்கூட, சென்னையில் இருந்து உத்தரவு வர வேண்டியது இருக்கிறது.
வேலை, தொழில் வாய்ப்பு இல்லை
தென்னகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. அதில் படித்து வெளியேறுபவர்கள் எல்லாம் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள். தென்தமிழகம் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருப்பதற்கு காரணம் இங்கே யாரும் தொழில் தொடங்க முன்வராததுதான். கட்டமைப்பு வசதி இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும், தொழில்பேட்டைகளும் காத்தாடுகின்றன.
இதை கருத்தில் கொண்டுதான் "தென்தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்பட வேண்டும் என்றால், அதிகார மையம் பக்கத்தில் இருக்க வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆண்டுக்கு ஒருமுறையேனும் மதுரையில் கூட்ட வேண்டும்" என்று சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தி யுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்கு நகர், குளிர்காலத்துக்கு ஜம்மு என்று இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன. சென்னை மாகாணமாக இருந்தபோது, அதன் கோடைக்கால தலைநகராக சென்னையும், குளிர்கால தலைநகராக ஊட்டியும் இருந்தது. ஆட்சி யாளர்களின் சொகுசுக்காக அரசு ஆவணங்கள் மலையேறிச் செல்லும்போது, மக்களின் வசதிக்காக அவை மதுரைக்கு வந்தால் என்ன? என்பது தென்னக மக்களின் கோரிக்கை.

புதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு வீரவணக்கம்!

புதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு வீரவணக்கம்!
அக்டோபர் – 6: புதிய தமிழகம் கட்சியின் புரட்சிகரமிக்க போராட்ட வரலாற்றின் துவக்கப்புள்ளி என்று கூறலாம். அதுமட்டுமல்ல தென்மாவட்ட தேவேந்திர மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கறுப்பு நாளும் கூட. 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் எனும் கிராமத்தில் அன்றைய தமிழ்நாடு அரசின் காவல்துறை என்கிற பெயரில் செயல்பட்ட கள்ளர்துறை குற்றவாளிகளைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த கிராமத்தையே சூறையாடிய நிகழ்வு நடந்தேறியது. பொதுமக்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் காவல் அளிப்பதற்காக பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் வழங்கி உருவாக்கப்பட்ட காவல்துறை, கள்ளர்துறையாக உருவெடுத்து கொடியன்குளம் கிராம மக்களின் வீடுகளை சூறையாடி, வீடுகளிலிருந்த பணம், பொருள், நகைகளையெல்லாம் களவாடி கொள்ளையடித்துச் சென்ற அந்த நிகழ்வு தமிழக அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு மட்டுமல்ல அழிக்கமுடியாத அவமானமுமாகும். அதோடுமட்டுமல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றில் மலத்தை அள்ளிக் கலந்த மிகக்கேவலமான, அருவருக்கத்தக்க, அசிங்கப்படத்தக்க, காரி உமிழத்தக்க சம்பவங்களும் தமிழக காவல்துறையால் அரங்கேற்றப்பட்டன. நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் துணிவில்லாத கோழைகள் மானமிழந்து, சுயமரியாதையிழந்து அரசு இயந்திரத்திற்கு அடிமையாக, அடிவருடியாக செயல்பட்டு அரசு அதிகாரத்தை துணைக்கழைத்து கொள்ளையடித்த கொடியன்குளம் வன்முறை எனும் இந்த காவல்துறை அத்துமீறலைக் கண்டித்தும், சி.பி.ஜ. விசாரணைக் கோரியும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையிலமைந்த அன்றைய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பாக 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் நாள் சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. தாய்மார்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான போராளிகள் திரண்ட அந்த பிரமிக்கத்தக்க பேரணி சென்னையை அதிரவைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது. கூட்டமைப்புத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடந்த அந்த பேரணியில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் ஒன்று திரண்டதோடு, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர்.இராமதாஸ், ஆவடி சுந்தர்ராஜன், ஆகியோர் பங்கேற்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் திரண்டிருந்ததை சீரணித்துக்கொள்ளமுடியாத தமிழக அரசு அன்றைய காலகட்டத்தில் சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த அயோத்திக்குப்பம் வீரமணி மூலம் கூட்டத்தினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. இதற்காகவே காத்துக்கொண்டிருந்த தமிழக கள்ளர்துறை வழக்கம்போல் தங்களது துப்பாக்கிச் சூடு எனும் அரசபயங்கரவாதத்தை அரங்கேற்றியது. முன்பு சொன்னதுபோல ஆண்டாண்டு காலமாக நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் துணிவில்லாத கோழைகள் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்திய அந்த மெரினா துப்பாக்கிச்சூட்டில் திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரண்டு போராளிகள் வீரமரணமடைந்தனர். பல தோழர்கள் படுகாயமடைந்தனர். இந்த அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஆளுங்கட்சிக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரண்டு போராளிகளின் உயிர்த்தியாகத்துக்கு முன்னால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமே தோற்றுப்போனது. கோழைகளால் ஏவிவிடப்பட்ட அரசின் அடக்குமுறையை தோற்கடித்து, புதிய தமிழகம் போராளிகளின் புரட்சிகர போர்க்குணமிக்க போராட்ட வரலாற்றை திலகமிட்டு துவக்கிவைத்த திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரண்டு போராளிகளின் உயிர்த்தியாகத்தை இந்த நாளில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் நம்முடைய புரட்சிகர வீரவணக்கத்தை செலுத்திக்கொள்வோம்.
எழுவோம் எழுவோம் விழவிழ எழுவோம்!
விழவிழ எழுவோம்! வீறுகொண்டு எழுவோம்!!
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்வரை எழுந்து கொண்டேயிருப்போம்!!!...

காலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை குலுக்கிய பேரணி ...!!!..

காலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை குலுக்கிய பேரணி ...!!!.. ..தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .... டாக்டர் .க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் 
கொடியங்குளத்தில் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் காவல்துறை அரங்கேற்றிய அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் நீதி கேட்டு முதற்கட்டமாக அக்டோபர் 6ல் சென்னை மெரினாவில் பேரணி, அந்த பேரணியிலும் காவல்துறை அரங்கேற்றிய அத்துமீறலால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் இரண்டு இளைஞர்கள் தன்னுயிரை நீத்த சம்பவம் தமிழகமெங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மென்மேலும் கொந்தளிப்பை உருவாக்கியது.
ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கியே வைக்கவும், அடிக்கி வைக்கவும் எண்ணுகின்ற அரசும், அதிகார வர்க்கமும் ஒருபக்கம், ஒடுக்கு முறையையும், அடக்குமுறையையும் நெஞ்சுக்கு நேர் எதிர் கொண்டு தூள்தூளாக்கு வதற்கு முடிவு செய்து அணிவித்துக் கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களோ இன்னொரு பக்கம்.
சமூக கொடுமைகள் மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளான அனைத்து சமுதாய மக்களையும் ஒரு சேர ஒடுக்கப்பட்ட மக்கள் என்று நாம் குறிப்பிட்டாலும் கூட, அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணி அணியாய் களம் கண்டவர்கள், இழப்புகளை எதிர்க் கொண்டவர்கள், அடிக்க அடிக்க எழுந்து நின்றவர்கள், ஒடுக்க ஒடுக்க ஒங்கி நின்றவர்கள், களத்திலும் கருத்திலும் அடங்க மறுத்து நின்றவர்கள் தென் தமிழகத்தினுடைய தேவேந்திகுல வேளாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
தேவேந்திரகுல வேளாளர்களை பொருத்தமட்டிலும் வரலாற்றில் இன்று போலவே என்றும் வறிய நிலையில் இருந்தவர்கள் அல்ல நில உடமையாளர்களாக இருந்து இந்த மண்ணில் எந்த விதமான அடிமைத்தனத்துக்கும் ஆளாகாமல் இருந்தவர்கள். இடைப்பட்ட காலத்தில் அரச படையெடுப்புகளில் நிலப்பறிப்புகளுக்கு ஆளாகி மீண்டும் தங்களுடைய முதன்மை இடத்தை பிடிக்க வேண்டுமே என்ற தாகத்தோடும், கோபத்தோடும் போராட்டங்களில் இயற்கையான முன்னனி பாத்திரத்தையும், தலைமை பாத்திரத்தையும் தாங்கிவரும் தகுதியைப் படைத்தவர்களாக மாறினர்.
தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய தேசத்திலேயும் ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாறுகள் எழுதப்படுகின்ற போது தேவேந்திரகுல மக்களுடைய வீர வரலாறுகள் எழுதப்படாமல் இருக்கமுடியாது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தங்களுடைய அடையாளங்களை மீட்டெடுப்பதற்காக தமிழகத்திலே அக்டோபர் 6-ஆம் தேதி நடத்திய பேரணி முதல் மைல்கல்லாக அமைந்தது.
பல நூறாண்டு காலமாக மறைக்கப்பட்ட தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்கப் பட்டது. இந்த சரித்திர நிகழ்வுகளை புதிய தமிழகம் கட்சியின் தாய்க் கழகமான தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிகழ்த்தியது.

சிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.

சிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.....சிவகாசி அருகே விளாம்பட்டி தேன்காலனியில், புதிய தமிழகம் கட்சி பெயர் பலகைக்கு தீவைத்தவர்களை கைது செய்யக்கோரி புதன்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
விளாம்பட்டி தேன்காலனியில் வைக்கப்பட்டிருந்த புதிய தமிழகம் கட்சி பெயர் பலகையை யாரோ சிலர் தீவைத்து எரித்திருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.
இதையடுத்து கட்சி பெயர்பலகைக்கு தீவைத்த நபர்களை கைது செய்யக்கோரி தேன்காலனி மக்கள், சிவகாசி-விளாம்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த சிவகாசி வட்டாட்சியர் அய்யக்குட்டி, காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.சி.வெள்ளையன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முறையாக புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். இதையடுத்து, புதிய தமிழகம் கிளை செயலாளர் உத்தமராஜா மாரனேரி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில்

இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தி்ல் இன்று ஆஜரானார்.. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :
பாராளுமன்றத்தில் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் சிலையை வைக்க வேண்டும்.
மத்திய அரசு பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர் என்று அழைத்திடும் ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திடும் அரசானை பிறபிக்க வேண்டும். என்றார் அவர்.

மலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் அண்ணன் கிருஷ்ணாசாமி அவர்களின் உறவினர்களோடு!!!.....

மலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் அண்ணன் கிருஷ்ணாசாமி அவர்களின் உறவினர்களோடு!!!........
இதில் என்ன நகைச்சுவை என்றால்,
மருத்துவர் கிருஷ்ணசாமியை தெலுங்கர் என தமிழ்நாட்டில் பரப்பியதோடு நிற்காமல்,
உலகம் முழுவதும் பரப்பியுள்ளனர் கிறுக்கர்கள் சிலர்!......
கிருஷ்ணசாமி தெலுங்கரா?
என்ற கேள்வியை மலேசியாவில் மள்ளர்கள் மட்டுமல்லாது தமிழ்த் தேசியம் பேசும் பலரும் கேட்டனர்...
நான் அவர்கள் அனைவருக்கும் சொன்னது ஒன்றே ஒன்று தான்,
மருத்துவர் கிருஷ்ணசாமி தெலுங்கர் என்றால்,
அவரது உறவினரான நானும் தெலுங்கர் தான் என்றேன்!!!.....
மேலும்,
கிருஷ்ணசாமியை தெலுங்கர் என்று உங்களிடம் பரப்பிய அந்த புரட்சியாளர்கள் யாரேனும் இதுவரை கருணாநிதியையோ அல்லது வைகோவையோ தெலுங்கர் என்ற உண்மையை பற்றி உங்களிடம் சொன்னார்களா என கேட்டேன்???
இல்லையே என்றனர்!....
சில புல்லுருவிகள்,
நம்மில் யார் தலைமைக்கு வந்தாலும் அவர்களை பற்றி அவதூறு பரப்புவதின் மூலம் நமது பொது எதிரிகளுக்கு காட்டிக்கொடுக்கும் வேலையை செய்வதே,
இது போன்ற பிரச்சாரங்கள் எல்லாம் என அவர்களுக்கு விளக்கியதோடு,
அப்படியான துரோகிகள் நம் பொது எதிரிகளை பற்றி வாயே திறப்பதுமில்லை என அவர்களுக்கு விளக்கினேன்....
மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடி ஒளிபவனெல்லாம்,
மக்களுக்காக தன்னால் முடிந்ததை செய்பவர்களை வெட்டியாய் குறைப்பேசி திரிகின்றனர்???
எனக்கும் கூட அவர் பேசும் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லை தான்!,
அதற்காக அவர் உறவே இல்லை என்றாகிவிடுமா என்ன???
மறுபடியும் சொல்கிறேன்,
மருத்துவர் கிருஷ்ணசாமி தெலுங்கர் என்றால் நானும் தெலுங்கர் தான்!!!
அவர் கருத்தியல் அல்லாமல் அவரை தெலுங்கர் என பரப்பி வீழ்த்த நினைத்தால்,
அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்!!!....

தியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 39 பேர் கைது

தியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 39 பேர் கைது போலீசாருடன் தள்ளு, முள்ளு...திருச்சி
தியாகி இமானுவேல்சேகரனாரின் பிறந்தநாளையொட்டி தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிறந்தநாள் விழா நிகழ்ச்சி
தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் விழாவையொட்டி புதிய தமிழகம் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி தில்லைநகரில் அவரது உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
ஆனால் போலீசாரின் தடையை மீறி புதிய தமிழகம் தெற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில், இளைஞரணி அசோக், துணை செயலாளர்கள் பிரேம், ஆனந்த், கோபி, கொள்கை பரப்பு செயலாளர் வினித் மற்றும் நிர்வாகிகள் பலர் இமானுவேல் சேகரனாரின் உருவபடத்தை தில்லைநகர் பகுதிக்கு எடுத்து வந்து, மாலை அணிவிக்க முயன்றனர்.
39 பேர் கைது
இது பற்றி தகவல் அறிந்து அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீஸ் உதவி கமிஷனர் கபிலன் தலைமையிலான போலீசார், அவர்களை நிகழ்ச்சி நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது புதிய தமிழகம் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் மொத்தம் 39 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலச்சுவடுகள் ..செப் .12...2015...தென்தமிழகத்தில் தொழில்துறை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தென்மாவட்டங்களில் பல்வேறு காலக்கட்டங்களிலும் சாதி மோதல்கள் இருந்து வருவதால் தொழில் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது. இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன். இது ஒரு காரணமாக இருந்தாலும் சமுதாய ஏற்றத்தாழ்வும் ஒரு காரணமாக இருக்கிறது.
பள்ளர், குடும்பர் , பண்ணாடி , காலாடி , மூப்பன் , தேவேந்திர குலத்தான் என பல பிரிவுகளாக இருப்பதை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே இனமாக அறிவிக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறேன். இமானுவேல்சேகரனின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். தென் தமிழகத்தில் நீண்ட காலமாக தொழில்துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அங்கு தொழில் வளர்ச்சிக்குரிய கட்டமைப்பு வசதிகள் தேவை.
எனவே சென்னை முதல் கன்னியாகுமரி வரை சரக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும்.
தூத்துக்குடி துறைமுகம், மதுரை விமான நிலையம் ஆகியவற்றை மேம்படுத்தவேண்டும். தென்தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும் இங்கு தொடங்கப்படும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் விளைவிக்காத வகையில் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்...!!!.....டாக்டர் .க.கிருஷ்ணசாமி .M.D.,M.L.A.,அவர்கள் அறிவிப்பு ..!!!...............தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடைபெறும் படுகொலைகளை கண்டித்தும், சாதி ஆணவக் கொலைகள், காவல் நிலைய சாவுகள், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர்களை விடுதலை செய்யக்கோரியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம்.
அடுத்த கட்டமாக இந்தியாவின் உடைய உள்துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க கூடிய வகையில் டெல்லியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம்.

சென்னையிலும் டெல்லியிலும் புதிய தமிழகம் போராட்டம் அறிவிப்பு!


நாடு முழுவதும் தொடரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், சாதி ஆணவக் கொலைகள், காவல் நிலைய சாவுகளைக் கண்டித்தும், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர்களை விடுதலை செய்யக்கோரியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி சென்னையிலும் விரைவில் புதுடெல்லியிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இன்று கோவையில் நடந்த கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்டது.

அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதா?!

அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதா?!
புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட செயலாளர், ஒன்றியச்செயலாளர், நகரச்செயலாளர்கள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
சமீப காலமாக ஒடுக்கபட்ட மற்றும் தேவேந்திர குல வாலிபர்களை குறி வைத்து பெட்டிகேஸ் முதல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்றால் பிளக்ஸ்போட்டு வைத்தல், அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியது தான்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமானால் இந்திய இறையாண்மைக்கு எதிராக நடத்தல், ஆயுதம் தாங்கி போராடுபவர்கள் மீது தான் பாய வேண்டும். ஆனால் சாதாரண வழக்கில் கூட தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதற்கு அரசின் உள்நோக்கம் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் தேவேந்திர குல வாலிபர்களை குறி வைத்து கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய உள்துறை அமைச்சகத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.

தேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: சென்னையில் 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் - டாக்டர் .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் அறிவிப்பு

தேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: சென்னையில் 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் - டாக்டர் .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் அறிவிப்பு..!!!...சமீப காலமாக தாழ்த்தப்பட்ட வாலிபர்களை குறி வைத்து பெட்டிகேஸ் முதல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
ராமநாதபுரம் மாவட்ட கட்சி ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்றால் பிளக்ஸ்போட்டு வைத்தல், அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியது தான்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமானால் இந்திய இறையாண்மைக்கு எதிராக நடத்தல், ஆயுதம் தாங்கி போராடுபவர்கள் மீது தான் பாய வேண்டும். ஆனால் சாதாரண வழக்கில் கூட தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதற்கு அரசின் உள்நோக்கம் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட வாலிபர்களை குறி வைத்து கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய உள்துறை அமைச்சகத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்

ஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..!!!..கிராம மக்கள் , புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்:

ஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..!!!..கிராம மக்கள் , புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்: 500 பேர் பங்கேற்பு.....வாசுதேவநல்லூர் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி இறந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்களைக் கைது செய்யக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்தோர் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் கரிவலம்வந்தநல்லூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள சங்குபுரம் காமராஜர் காலனியை சேர்ந்த கடற்கரை மகன் பாக்கியராஜ் (33). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், கடந்த 12ஆம் தேதி ஆடு மேய்க்கச் சென்றபோது, வாசுதேவநல்லூர் அருகே மர்மமாக இறந்து கிடந்தார். அவர் மின்னல் பாய்ந்து இறந்ததாக வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், புதிய தமிழகம் மற்றும் அப்பகுதி மக்கள் தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை காலையில் கரிவலம்வந்தநல்லூரில் ராஜபாளையம்-சங்கரன்கோவில் பிரதான சாலையில் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். சில பெண்கள் கைக்குழந்தைகளுடன் மறியலில் பங்கேற்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து, சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் திருவேங்கடம் வழியாக ராஜபாளையம் முக்குச் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டன.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் பெர்மிவித்யா பேச்சு நடத்தினார். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதில், புதிய தமிழகம் மாநில இளைஞரணிச் செயலர் எஸ்.பாஸ்கர் மதுரம், வடக்கு மாவட்டச் செயலர் இன்பராஜ், முன்னாள் மாவட்டச் செயலர் வீரா அரவிந்தராஜா, மேற்கு மாவட்டச் செயலர் ஜெயக்குமார், , மாவட்டப் பொருளாளர் விணுப்பாண்டியன், இணைச் செயலர் மாடசாமி, சங்கரன்கோவில் நகரச் செயலர் ராஜா, ஊர்த் தலைவர்கள் முத்துமாணிக்கம், சங்கர்கணேஷ், கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிற்பகல் ஒரு மணிக்கு அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

'மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும்,'' புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி M .D . M .L .A ., அவர்கள்,

''மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும்,''
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி M .D . M .L .A ., அவர்கள், 
பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி தங்கவேல், அவரது மகளான, 13 வயது சிறுமி மகாலட்சுமி ஆகியோர், கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை பெற்றுத்தரவேண்டும்.
இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை மற்றும் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்.
கேரள மாநிலத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு, 301 ரூபாய் ஒரு நாள் சம்பளமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த, தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசு, ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும். இவ்வாறு, டாக்டர் கிருஷ்ணசாமி M .D . M .L .A .,அவர்கள் கூறினார்.

சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் ....

சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் ......தேவேந்திர குல வேளாளர் . மற்றும் சக ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான மீது குண்டர் சட்டம் போடுவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D .M .L .A .. அவர்கள் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து க. கிருஷ்ணசாமி M .D .M .L .A .. அவர்கள் . நிருபர்களிடம் கூறியதாவது:-
பரமகுடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, 20 இடங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ‘பேனர்’கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த ‘பேனர்’களுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளே, அந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டிருந்தனர். இதனை புதிய தமிழகம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கதிரேசன் தட்டிக்கேட்டார். இதன் விளைவாக கதிரேசன் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கதிரேசன் ஏற்கனவே ராமநாதபுரத்தில் தேவேந்திர குல மக்களுக்காக பல போராட்டங்கள் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேவேந்திர குல மக்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடுவது கண்டிக்கத்தக்கது. எனவே கதிரேசன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி .. அலை செய்திகள்

வழிபடவும் வழி இல்லையா?

வழிபடவும் வழி இல்லையா?
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்கா உத்தபுரம், எழுமலை ஆத்தங்கரைபட்டி, கிராமங்களைச் சார்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புதிய தமிழகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிராமக் கோயில்களில் தொன்றுதொட்டு அனைத்து மக்கள்களுக்கும் இருந்த உரிமைகளை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கையில் எடுத்துக்கொண்டு பெரும்பான்மையான மக்களை ஒதுக்குவது முறையற்றது. பேரையூர் அருகே உள்ள உத்தபுரம் முத்தாலம்மன் கோவில் அரச மரத்திற்கு மாலை அணிவித்ததிலும், ஆத்தங்கரைப்பட்டி மற்றும் எழுமலை முத்தாலம்மன் கோவில் அம்மன் சிலை ஊர்வலத்தில் வந்த தேவேந்திர குல மக்களை தனிமைப்படுத்தி பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் தொடுக்கப்பட்டு அம்மக்ககளின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பிற சமுதாயங்களோடு இணைந்தும் விழா எடுக்க அனுமதிப்பதில்லை, தனியாகவும் விழா எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. ஒரு பக்கம் பல நூறு வருடங்களுக்கு முன்பு கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாமியர்களாக மாறியவர்களை கார்வாப்சி எனும் நிகழ்சியின் மூலம் தாய்மதம் திருப்புதல் எனும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் தாய் மதத்திற்குள்ளேயே வழிபாட்டு உரிமையும், வாழ்வுரிமையும் மறுக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போன்ற நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் அண்மைக் காலமாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன எனவே கிராமப்புறக் கோவில்களையும், இந்து அறநிலைத் துறையின் கீழ் கொண்டு வருவதும் வழிபாட்டுத் தளங்களில் வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடியவர்கள் மீது கூட்டுத் தண்டம் (FUNITIVE) விதிப்பதும் காலத்தின் தேவையாகும்.எழுமலைப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடும், தாக்குதல் கொடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகோள்

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகோள்.
வருவாய்த்துறை அமைச்சர்க்கு எழுதிய கடிதம்:
பொருள்:
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க அரசு அறிக்கை கேட்பது சம்மந்தமாக
22-10-2015 நாளிட்ட தமிழ் இந்து மற்றும் தினமலர் செய்தித் தாள்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க அறிக்கை கேட்கிறது அரசு என்ற செய்தியைப்படித்தேன். சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய வட்டங்களுக்கு இரயில் பாதை அமைக்கப்படவில்லை. சரியான குடிநீர் போக்குவரத்து, தொழில்வசதிகள் இல்லை. இதனால் கமுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலக சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அரசிடம் அனுப்பி உள்ளதாகவும் அதன் அடிப்படையில் கமுதி முதுகுளத்தூர், கடலாடி, பார்த்திபனூர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி ஆகிய வட்டங்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டுமென ஒரு சங்கத்தினர் வேண்டுகோள் வைத்திருப்பதன் அடிப்படையில் வருவாய் துறை இணைச்செயலாளர் திரு.எழிலரசன் அவர்கள் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையருக்கு அறிக்கை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே போன்று நிர்வாக வசதிகளை சுட்டிக் காட்டிய பல்வேறு பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அதன் காரணமாகவே அந்த மாவட்டங்களில் தொழில்கள் வளர்ந்து விடவில்லை. ஏற்கனவே திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு உட்பட பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல வருடங்களாக உள்ளன. தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படவேண்டும் என்று இன்று வரையிலும் தொடர் கோரிக்கைகள் இருந்து வருகின்றன. அக்கோரிக்கைகளை அரசு இதுவரையிலும் பரிசீலனைக்கு எடுத்ததுக் கொண்டதாகத் தெரியவில்லை. பல வருடங்களாக பொது மக்கள் மத்தியில் இருந்து வரும் பிற மாவட்டங்களை பிரிக்க கொள்கை ரீதியாக எம்முடிவும் எடுக்காமல்.பொது மக்கள் மத்தியில் இருந்து எந்த ஒரு வேண்டுகோளும் வராத நிலையில் ஒரே ஒரு மாவட்டத்தை மட்டும் பிரிப்பதற்கும் புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்குவதற்கும் அரசே அறிக்கை அனுப்புமாறு கோரியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது இது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் நான்கு சட்டமன்றத் தொகுதிகள மட்டும் உள்ளடக்கி 13 லட்சத்து 53 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய மாவட்டம் ஆகும். இப்பொழுது இருக்க கூடிய நிர்வாக அமைப்புகளை பயன்படுத்தியே குடிநீர் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் உட்பட தொழில்கள் தொடங்குவதற்கு எந்த விதமான தடையும் இல்லை.மாநில அரசு, மத்திய அரசு, மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக குக்கிராமங்கள் வரை குடிநீர் வசதிகளையும்,சாலை வசதிகளையும் அடிப்படை கட்டுமான வசதிகளையும் உருவாக்குவதற்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதிகளை எந்த முறைகேடும் இல்லாமல் அந்தந்த பகுதிகளில் இருக்ககூடிய ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தாலுக்கா அலுவலகங்கள் குடிநீர் வடிக்கால் வாரியம் போன்ற துறை அதிகாரிகள் மிகுந்த அக்கரையுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டாலே போதும் மேலும் மத்திய அரசால் இந்திய முழுமைக்கும் சமமாக பிரித்து கொடுக்க கூடிய நிதியை கமுதி மற்றும் சுற்று உள்ளாட்சிகளுக்கான வட்டாரப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் முறையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உட்பட்ட பகுதிகளில் அரசினுடைய அனைத்து இலவச திட்டங்களையும் முறையாகக் கொண்டு சேர்க்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதே அப்பகுதில் உள்ள தேக்க நிலையைப் போக்கும்.
அதை விடுத்து மாவட்டங்களையும் தாலுக்காக்களையும் துண்டாடுவதால் மட்டும் மக்களுக்கு எல்லா விதமான வசதிகளும் சென்றடைந்து விடும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. கமுதி, கடலாடி, முதுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகள் தொழில் ரீதியாக பின்னடைவதற்கும் வரலாற்று ரீதியாக உள்ள சமுகப் பின்னனிகளைக் கணக்கிலே கொள்ளாமல் பூகோளஅமைப்பை மட்டுமே கணக்கில் கொள்வது கண்னைக் கட்டிக் கொண்டு இருட்டில் நடப்பதற்கு சமமாகும். கமுதி,முதுகுளத்தூர்,கடலாடி பகுதிகள் நூறு வருடங்களுக்கு மேலாக சாதிய மோதல்களுக்கு இலக்காகி வரும் பகுதிகளாகும்.1928முதல் பல வருடங்கள் அப்பகுதில் வாழ கூடிய தேவேந்திரகுல வேளாளர்கள் ,ஆதி திராவிடர்கள் மற்றும் நாடார் இன மக்கள் மீது பல்வேறு விதமான சமுக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையும் அதை எதிர்த்து அப்பகுதியில் மிகப் பெரிய கிளர்ச்சிகள் நடந்ததையும் 1957-ம் ஆண்டு முதுகுளத்தூரில் மிக பெரிய கலவரம் நடந்ததையும் அதன் தொடர்ச்சியாக இன்னும் அடிக்கடி சமுதாய மோதல்களும் அதை ஒட்டி கலவரங்கள் நடந்து வருவதையும் நாடு அறியும்.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்படும் பல சமுதாய மக்கள் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், நரிக்குடி போன்ற பகுதிகளில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு சுதந்திரமாக சென்று வரமுடிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் கமுதியை தலையிடமாக கொண்டு முதுகுளத்தூர், கடலாடி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய தாலுக்காக்களை இணைத்து மாவட்டம் அமைக்கப்படுமேயானால் அது பலதரப்பட்ட மக்களின் நடமாட்டத்திற்கான இடமாக இருக்காது. மாறாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சாதி மாவட்டமாகவே செயல்படும். ஏற்கனவே கமுதி,முதுகுளத்தூர் ,கடலாடி பகுதிகளில் இந்திய சட்டத்திற்கு கட்டுப்படாத ஒரு குறிப்பிட்ட பிரிவனர் மத்தியில் நாடுகள் செயல்பட்டு வருவதையும். அந்த “சாதி நாட்டு அமைப்புகாளால் தான் தேவேந்திரகுல வேளாளர்கள் ,ஆதிதிராவிடர்கள் ,அருந்ததியர் ,நாடார் ,யாதவர் உட்பட்ட எண்ணற்ற பிற சமுதாய மக்களுடைய வாழ்வுரிமை நசுக்கப்படுகிறது என்பதையும் நாடறியும்.
ஜனநாயக நாட்டில் அரசினுடைய அமைப்புகள் அனைத்து மக்களுக்கு ஆனதாக மட்டுமின்றி அனைத்து மக்களுமே எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அது அனைத்து தரப்பினருடைய வளர்ச்சிக்கும் வலு சேர்ப்பதாக இருக்க வேண்டும். ஆனால் கமுதியை மையமாக கொண்டு மாவட்டம் அமையுமேயானால். அந்தப் பகுதியில் ஏற்கனவே மிகவும் வலுவாகவும், ஆதிக்கமும் செலுத்தி வரும் கொண்டைய நாட்டு மறவர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வலுவானவர்களாக மாற்றும் முயற்சியாகவே இது முடியும். மேற்குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்ற இன மக்கள் அங்கு சுதந்திரமாக சென்று வர இயலாத நிலைமையும் அதனால் தங்களது உரிமைகளை இழந்து அல்லது அதை விட்டு இடம் பெயரும் சூழ்நிலையும் உருவாகும்.
13.5 லட்சம் மக்கள் வாழும் ஒரு மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுடைய கருத்தைக் கேட்காமல் நூறு அல்லது இருநூறு பேர் கொண்ட ஒரு அரசு ஊழியருடைய அமைப்பின் தீர்மானத்தை அரசு எவ்வாறு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது என்றுதெரியவில்லை.உள்ளாட்சிபிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்களின் எண்ணற்ற அமைப்புகள் எதுவுமே இது போன்ற ஒரு விபரீதமான கோரிக்கையை வைத்ததாகத் தெரியவில்லை. எனவே தமிழ்நாடு அரசு எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினுடைய வேண்டுகோள் அல்லது ஆதிக்கத்திற்கு இசைந்து போகாமல் ஒட்டு மொத்த மக்களுடைய நலன் கருதி கமுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகோள்

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகோள்.........Puthiya Tamilagam president and Ottapidaram MLA Dr K Krishnasamy has urged the Tamil Nadu government to give up the reported move to create a new district by bifurcating Ramanathapuram district.
In a letter to revenue minister R B Udhayakumar, Krishnasamy said it was reported that Ramanathapuram district Revenue Department Employees Association had demanded creation of a new district with Kamudhi as its headquarters.
On the basis of the demand, revenue joint secretary had sought a report from the revenue additional commissioner about the feasibility of creating a new district.
"The joint secretary's concern over the association's demand raises many doubts and shows ulterior motive. Without hearing public opinion, the government has taken steps to consider the demand," Krishnasamy said.

நவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .. டாக்டர் . க . கிருஷ்ணசாமி M.D..M.L.A.,அவர்கள் .தலைமையில் தொடங்குகிறது ...!!!. மாபெரும் மக்கள் இயக்கம் ....!!!.

நவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற
 உ றுப்பினர் .. டாக்டர் . க . கிருஷ்ணசாமி M.D..M.L.A.,அவர்கள் .தலைமையில் தொடங்குகிறது ...!!!.
மாபெரும் மக்கள் இயக்கம் ....!!!.....................
.மாநிலம் முழுவதும் பேரணி , பொதுக்கூட்டம் .....பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் .அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்...தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.
தேவேந்திர குல இன மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நடத்தும் மாநிலம் தழுவிய மும்முனை .போராட்டத்திற்கு தேவேந்திரகுல மக்களே அலைகடலென திரண்டு வாரீர்..!!!. ஆதரவு தாரீர் ..!!!.

புதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996

புதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்கு நிலவரம்.
இராஜபாளையம்-26,706.
ஓட்டப்பிடாரம்-24,585.
ஸ்ரீவில்லிபுத்தூர்-20,364.
வாசுதேவநல்லூர்-9000.
ஸ்ரீவைகுண்டம்-8000.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெற்றி பெற்றார். அவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உறுப்பினர் என்று சட்டமன்றத்தில் பதிவு ஆனது... தமிழக சட்டமன்றத்தில் தேவேந்திரர் உ ரிமைகுரல் தொடங்கியது ... தொடரும் .

புதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தான் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தின் சமுக , அரசியல் அடையாளம்.....!!!!.

புதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தான் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தின் சமுக , அரசியல் அடையாளம்.....!!!!. 
(1). வன்கொடுமைகளையும் , இல்லாத இழிவுகளையும் சுமந்துகொண்டிருந்த தேவேந்திரர் சமுகத்தை சமூகரீதியாக , அரசியல் ரீதியாக அமைப்பாகியவர் .... தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு மூலம் போர் குணம் மிக்க சக்தியாக உ ருவாகியவர் .... கொடியங்குளம் வன்கொடுமைகளுக்கு நீதி கேட்டு ஜனநாயக வழியில் அனைத்து உ ரிமைகளையும் பெற்று தந்தவர் ... அதன் காரணமாகவே தேவேந்திர குல மக்களுக்கு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தேவேந்திரர் சமுகத்தின் முதல் சட்டமன்ற உ றுப்பினர் .... தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஓட்டபிடாரம் தொகுதியின் சட்டமன்ற உ றுப்பினர்... சமரசமற்ற , போர்குணத்துடன் போராடிய டாக்டர் அய்யா அவர்களுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் ..
. (2).. தமிழக அரசியல் வரலாற்றில் ஓரிரு தொகுதிகள் பெற்று வந்த நிலையை மாற்றி 10 தொகுதிகளை பெற்ற புரட்சியாளர்.. .......(3)......வெள்ளை அறிக்கையின் மூலம் 17.000க்கும் .. மேற்பட்ட ஆசிரியர் , அரசு ஊ ழியர்களுக்கு .. அரசு பணிகளை பெற்று தந்த எம் இனத்தின் அரசியல் ஆசான் , வெள்ளை அறிக்கை வேந்தர் டாக்டர் அய்யா அவர்கள் .;.. .... (4).. சட்டமன்ற உ றுப்பினராக இல்லாத நிலையிலும், நீதிமன்றத்தின் மூலம் போராடி 900ம் பேராசிரியர் பணியிடங்களை பெற்று தந்தவர் .... சட்டமன்ற உ றுப்பினராக இல்லாத நிலையிலும், சண்டியரை விருமாண்டியாக மாற்றியவர் ..தமிழக அரசியல் வரலாற்றில் பல்கலைகழகங்களில் தேவேந்திரர் சமுகத்தை துணை வேந்தராக அமர வைத்து அழகு பார்த்தவர் டாக்டர் அய்யா அவர்கள் .(5)... தமிழக முதலமைச்சர் (கருணாநிதி )... தலைமையில் சென்னையில் மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர் அரசு விழா , மாவீரன் சுந்தரலிங்கத்திற்கு மணி மண்டபமும், , சுந்தரலிங்கம் வாரிசுதாரார்களுக்கு ஓய்வூதியமும் , அரசு விழாவாகவும் தனி ஒருவராக போராடி பெற்ற அரசியல் ஆசான் டாக்டர் அய்யா அவர்கள் 

விருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர்

விருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .. டாக்டர் . க . கிருஷ்ணசாமி M.D..M.L.A.,அவர்கள் .தலைமையில் தொடங்குகிறது ...!!!. மாபெரும் மக்கள் இயக்கம் ....!!!......................மாநிலம் முழுவதும் பேரணி , பொதுக்கூட்டம் .....பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் .அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்...தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.பாராளுமன்றத்தில் தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரன் அவர்கள் சிலையை நிறுவிடவும் ,
தேவேந்திர குல இன மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நடத்தும் மாநிலம் தழுவிய மும்முனை .போராட்டத்திற்கு தேவேந்திரகுல மக்களே அலைகடலென திரண்டு வாரீர்..!!!. ஆதரவு தாரீர் ..!!!.

புதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம்

2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வாக்கு சதவிதம்..... புதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் ....54.30% பெற்று முதலிடம் ............கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் ....... (போட்டியிட்ட இடங்களில்)..அ.தி.மு.க 53.93%
தே.மு.தி.க 44.84%
மார்க்சிஸ்ட் கம்யூ 50.29%
இந்திய கம்யூ 48.64%
மனித நேய மக்கள் கட்சி 42.36%
சமத்துவ மக்கள் கட்சி 7.88%
கொங்கு இளைஞர் பேரவை 7.88%
இந்தியகுடியரசு கட்சி 7.88%
பார்வர்டு பிளாக் 51.22%
தி.மு.க 42.11%
காங்கிரஸ் 35.64%
பா.ம.க 44.84%
விடுதலை சிறுத்தை 34.01%
கொ.மு.க 32.5%....நன்றி ..https://ta.wikipedia.org/…/தமிழகத்_தேர்தல்களில்_வாக்குப்பதி…

தமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும்.....தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் .........டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல்....தமிழகத்தில் நெல்லை, திண்டுக்கல், வால்பாறை, கோத்தகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இத்தோட்டங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழக அரசு, தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தேட்ட தொழிலாளர்களுக்கு தினமும் சம்பளமாக ரூ.220 வழங்கப்படுகிறது. கேரளா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகை சேர்த்து ரூ.370 வழங்கப்படுகிறது. அதுபோல், தமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல்.

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் உ ரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் ...டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல்.......தமிழகத்தில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதில், இரண்டு பல்கலைக்கழகங்களில் பட்டியல் வகுப்பினரை துணைவேந்தர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

மாட்டுக்கறி சர்ச்சை ...!!!.. பாஜகவினரின் இந்துத்துவா அரசியலுக்கு ...டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் கடும் கண்டனம்

.உணவு பழக்க வழக்கம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. இதில் தலையிடுவது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் செயலாகும். வடமாநிலங்களில் நடந்த சம்பவங்களுக்கும், டெல்லியில் கேரளா அரசின் விருந்தினர் மாளிகையில் செய்யப்பட்ட சோதனைக்கும் புதிய தமிழகம் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கின்றது.

இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு "டாக்டர் கிருஷ்ணசாமி"! M .D .M .L .A ., அவர்கள் ....!!!,.

. தமிழகத்தில் சாதி , மத ஆதிக்கங்களை தகர்த்தெறிந்த சமரசமற்ற சமூகநீதி போராளி டாக்டர் கிருஷ்ணசாமி"! M .D .M .L .A ., அவர்கள் ....!!!,.
இன்று 2015, அக்டோபர் 28. புதிய தமிழகத்தின் சாதனைகளில் என்னை மிகவும் கவர்ந்த சரித்திர சாதனை நிகழ்ந்த நாள்தான் இன்று. ஆம்! இதே அக்டோபர் 28-ஆம் நாளை சுமார் 12 ஆண்டுகள் பின்னோக்கி 2003-ஆம் ஆண்டிற்குச் சென்று புதிய தமிழகத்தின் வரலாற்றுச் சுவடுகளில் பார்த்தால் இன்றைய தினத்தின் சிறப்பு தெரியும்.
1990-களின் மத்தியில் தமிழ்நாடு முழுவதிலும் புரையோடிப்போயிருந்த சாதி என்னும் உயிர்கொல்லி நோயை விரட்டியடித்து, சாதி ஆதிக்க வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்து புறமுதுகிட்டு ஓடச்செய்த சரித்திர சாதனைக்கு சொந்தக்காரரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல, இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் கூட…
ஆம்! இந்தியா முழுவதும் புரையோடிப்போயிருந்த இந்துத்துவ ஆதிக்கவெறி, ‘விசுவ இந்து பரிஷத்’ எனும் பெயரில் தமிழகத்தில் நுழைய முயற்சித்தபோது முதல் ஆளாக போர் தொடுத்து, இந்துத்துவ ஆதிக்க வெறியர்களை பின்னிட்டுப் பார்க்காமல் ஓடச்செய்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் டாக்டர் அய்யா அவர்கள் என்பது இங்கே அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் ஏதோ ஒரு அரசியல் தலைவர் என்று மட்டும் தான் இங்கு அநேகர் நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவருடைய புரட்சிகரமிக்க, போர்க்குணமிக்க போராட்ட வரலாற்றுச்சுவடுகளை அறிந்தவர்களுக்குத் மட்டும் தான் அவர் ஒரு சமரசமற்ற “சமூக சமநீதிப் போராளி” என்பது தெரியும்.
இந்துத்துவ ஆதிக்கவெறியர்களின் பல்வேறு பரிணாமங்களில் அல்லது பரிவாரங்களில் ஒன்றான விசுவ இந்து பரிஷத் (வி.எச்.பி.) எனும் சங்பரிவார் அமைப்பு, தான் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்துக்களைப் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில், வி.எச்.பி. அல்லது ஆர்.எஸ்.எஸ்.-ன் அடையாளமாக திரிசூலம் (சூலாயுதம்) எனும் ஆயுதத்தை தன்னுடைய தொண்டர்களுக்கு வழங்கி இந்துத்துவத்தின் வேரை இந்தியாவெங்கும் பரப்பிக்கொண்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக தனக்கு தொண்டர்களே இல்லாத தமிழகத்தில், வேரொரு விஞ்ஞான ரீதியாக திரிசூலம் வழங்க விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டிருந்தது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி அணுசரிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவரின் நினைவு நாள் நிகழ்வையொட்டி அந்த குறிப்பிட்ட சாதியின் இன்றைய தலைவர்களில் ஒருவரான உசிலம்பட்டி முருகன் என்பவரின் ஏற்பாட்டில் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் ஒரு மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை தயார் செய்து, அந்தக் கூட்டத்தில் வைத்து விசுவ இந்து பரிஷத்தின் அகில உலக தலைவரான ‘பிரவீன் தொகாடியா’ தலைமையில் அக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு திரிசூலம் வழங்கி இந்துத்துவத்தை தமிழகத்தில் பரவலாக்க திட்டமிட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளும் வெகு மும்முரமாக முடுக்கிவிடப்பட்டன. விழாவுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து திரிசூலத்தை வழங்குவதற்காக தலைவர்களும், வாங்குவதற்காக தொண்டர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
இந்துத்துவ ஆதிக்க வெறியின் வாடையே நுகரப்பட்டிராத தமிழகத்தில் புதிதாக வேர்முளைக்க முயற்சித்தது. ஆனால், அத்தகைய தவறேதும் நடந்துவிடக்கூடாது, இங்கு நிலைகொண்டிருக்கும் சமூகநல்லிணக்கத்துக்கு சீர்குலைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் முதல் ஆளாக தன்னுடைய அஸ்திரத்தை இந்துத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக தொடுத்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர தென்சுடர் டாக்டர் அய்யா அவர்கள். ஆம்! “அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் விசுவ இந்து பரிஷத் தலைவர் தனது தொண்டர்களுக்கு திரிசூலம் கொடுப்பதற்கு இந்த அரசு அனுமதித்தால், அதே மதுரையில், அதே இடத்தில், அதே 28-ஆம் நாள், அதே நேரத்தில் நான் என்னுடைய தொண்டர்களுக்கு வாள் கொடுப்பேன்” என்பது தான் அந்த அஸ்திரம். அதோடு மட்டுமல்ல, புதிய தமிழகம் கட்சியின் அன்றைய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வாள் கொடுக்கும் விழாவுக்கான அனுமதியும் கோரப்பட்டது.
இதனையடுத்து தென்மாவட்டங்களில் அசாதாரண சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசும் மதுரை மாவட்ட நிர்வாகமும் உடனடியாக திரிசூலம் வழங்கும் விழாவிற்கு தடை விதித்தது. ‘விசுவ இந்து பரிஷத்தும், அந்த குறிப்பிட்ட சாதி அமைப்பும் தயார் நிலையிலிருந்த தன்னுடைய விழாவை கைவிட்டன’.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தில் அ.தி.மு.க. என மதவாத அரசுகள் ஆட்சியிலிருந்த காரணத்தால் மத்திய, மாநில அரசுகளின் துணையோடு பெரும் துணிச்சலோடு தயார்படுத்தப்பட்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா மூலம், தமிழகத்தினுள் நுழையவிருந்த மதவாதம் டாக்டர் அய்யா அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகண்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா எனும் ‘இந்துத்துவ ஆதிக்கவெறி நுழைவை' தமிழகத்தின் எந்த அரசியல் கட்சிகளும் எதிர்க்க முன்வராத, துணிந்திராத சூழலில் தனியொரு ஆளாக சாதி ஆதிக்கம், மதவெறி ஆதிக்கம் ஆகிய இரண்டையும் ஒருங்கே எதிர்த்து நின்று, ஒற்றை அஸ்திரத்தால் இரண்டு ஆதிக்க வெறிகளையும் தூள்தூளாக்கி, புறமுதுகிட்டு ஓடச்செய்த சரித்திர சிறப்புமிக்க சாதனையாளரான டாக்டர் அய்யா அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் டாக்டர் அய்யா அவர்கள் மட்டுமே
இங்கே ஒன்றை கண்டிப்பாக சுட்டிக்காட்டியே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழகத்தின் வரலாற்றுக் காலகட்டங்களில் சங்ககாலம் வரையில் இந்து என்றொரு சமயமே இருந்ததில்லை. சங்ககாலத்தின் இறுதியில் அதுவும் பல்லவர் காலத்தில் தான் இந்து என்கிற மதமே தமிழகத்தினுள் ஊடுருவி உறவாடுகிறது. பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களையும், கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அழித்தொழித்து தன்னுடையவைளை உட்புகுத்தி தமிழர்களின் அடையாள அழிப்பு நிகழ்ந்ததே இந்த இந்து சமய வருகைக்குப் பின்புதான் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
நிலவுடைமையாளர்களாக இருந்த தமிழர்களை குறிப்பாக உழவர்களை நிலமற்றவர்களாக்கி பண்ணை அடிமைகள் என்ற நிலைக்கு கொண்டு சென்றதும் இந்த இந்து மதம் தான்.
"நான் மேலே கூறிய சாதி ஆதிக்கம் மற்றும் இந்துத்துவ ஆதிக்கத்திற்கும் அடுத்து கூறிய தமிழர்களின் சுருக்க வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
அதாவது சங்ககாலத்திற்கு பின்பு தமிழ்நாட்டிற்கு வடக்கே சாளுக்கியர்களின் ஆளுகைக்குட் பட்ட பகுதிவரை பரவியிருந்த இந்து மதமானது தமிழ் மன்னர்களை வீழ்த்தி தமிழ் நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு எந்த தமிழ்ச்சமூகம் அன்று துணையாக இருந்ததோ அதே தமிழ்ச்சமூகம் தான் இன்று அதே தமிழர்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பாக உருவாக்கப்பட்டு விசுவ இந்து பரிஷத் எனும் இந்துத்துவ ஆதிக்கத்தோடு கைகோர்த்து நிற்கிறது.
பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ச்சமூகங்கள் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை எதிர்த்தனவோ இல்லையோ, ஆனால் இந்த இருபத்து ஓன்றாம் நூற்றாண்டில் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை, தமிழ்தேசியம் பேசும் அல்லது திராவிடம் பேசும் எந்தவொரு அமைப்புகளுமே எதிர்க்க திராணிற்று ஓடி ஒழிந்த சூழலில், ஒற்றை மனிதனாக அதிவேக நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று, அதில் வெற்றியும் கண்டு, பண்டைய தமிழர்களின் வீரத்திற்கு இன்றளவும் செயல்வடிவம் கொடுத்து நிற்கும் தென்திசை உதித்த செஞ்சுடர் டாக்டர் அய்யா அவர்களின் போர்குணமிக்க போராட்டங்களின் வாயிலாக
சாதி, மத பேதமற்ற சமத்துவ சமூகத்தை அமைப்போம்! 
புதிய தமிழகம் படைப்போம்!!

புதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்தல்...!!!.

புதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்தல்...!!!.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு அரசியல் இயக்கமாக ,புதிய தமிழகம் இயக்கம் 1997 டிசம்பர் 15ம் தேதி துவங்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் 1998 ஜனவரி மாதம் நடைபெற்றது. இயக்கம் துவங்கிய ஒரே மாதத்தில் தேர்தலை சந்தித்தது.
போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் வாக்கு நிலவரம்.
தென்காசி :1,23,900..(.டாக்டர் . க .கிருஷ்ணசாமி .. M .D .M .L .A )
சிவகாசி :1,06,726.
நெல்லை :86,500.
இராமநாதபுரம் :53,542.
பெரியகுளம் :20,219.
திண்டுகல் :20,126. ...தொடரும் .

தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம்...!!!.

தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம்...!!!. மாவட்ட வாரியாக தேதி மற்றும் நடைபெறும் இடங்கள்.... மாவட்ட ஒன்றிய , நகர பொறுப்பாளர்கள் தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை வெற்றியடைய , அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டுகிறோம் ...!!!.
💥பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்.
💥எம் இன மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
💥மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
💥தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.
ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
*நவம்பர்-25 நெல்லை.
*டிசம்பர்-03 தூத்துக்குடி
.
*டிசம்பர்-05 விருதுநகர்
.
*டிசம்பர்-10 இராமநாதபுரம்
.
*டிசம்பர்-15 திருச்சி
.
*டிசம்பர்-17 மதுரை
.
*டிசம்பர்-19 திண்டுகல்
.
*டிசம்பர்-24 தேனி.
*டிசம்பர்-27 கரூர்
.
*ஜனவரி-05 தஞ்சாவூர்
.
*ஜனவரி-06 திருவாரூர்.
*ஜனவரி-07 பெரம்பலூர்.
*ஜனவரி-08 நாமக்கல்
.
*ஜனவரி-09 சேலம்
.
*ஜனவரி-10 ஈரோடு
.
குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் மாலை மூன்று மணிக்கு பேரணி துவங்குகிறது.
ஓரு கோடி தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்க, அரசியல் அதிகாரம் வென்றெடுக்க, அரசியல் பாகுபாடின்றி அலைகடலென திரண்டு வாரீர்..