எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 29 நவம்பர், 2014

புதிய தமிழகம் கட்சி அரசியல் பயிலரங்கம்...

புதிய தமிழகம் கட்சியின் அரசியல் பயிலரங்கம் நவம்பர் 29&30 ஆகிய இரு தினங்களில் மகாபலிபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் நடைபெற உள்ளது.
29 ந் தேதி காலை 9 மணிக்கு அழைப்பாளர் பதிவு ஆரம்பம். 10 மணிக்கு நிகழ்சிகள் தொடங்கும் . தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 600 முதல் 700 அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
1998 - ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் இதே போன்று 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது .ஆனால் அது திறந்தவெளி மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டு நடைபெற்றது .இது முழுக்க முழுக்க அரங்கு நிகழ்ச்சியாகும் .முதல் முறையாக நடத்தப்பட்ட பயிலரங்கத்தில் பல்வேறு விதமான கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது அதைக்காட்டிலும் சிறப்பாக தற்பொழுது நடைபெறயுள்ள இப்பயிலரங்கதில் சர்வதேச , தேசிய , மாநில அளவிலான அரசியல் சூழ்நிலைகள் புதிய தமிழகம் கட்சியை மாநில அளவில் முதன்மை அரசியல் கட்சியாக முன் எடுத்து செல்வது தமிழகத்தில் தற்பொழுது நிலவக்கூடிய சமூக சிக்கல்கள் , சட்டங்கள் , ஆட்சி மாற்றங்கள் , சுகாதாரம் ,சுயஒழுக்கம் ,கட்சியை விரிவாக்கம் செய்தல் , ஊடகங்கள் தோற்றுவித்தல் என பல தரப்பட்ட விசயங்களும் இப்பயிலரங்கதில் விவாதிக்கப்படும்.
அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்ச்சி 29ந் தேதி காலை 9 மணிக்கு துவங்கி 30 ந் தேதி இரவு 7 மணி வரையிலும் நடைபெறும். அழைப்பிதழ் கிடைக்கப்படாதோர் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக