
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் கடந்த 6 மாதத்தில் 66 கொலைகள் நடந்துள்ளன. இதில் 26 பேர் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் நாடார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும். பெரும்பாலும் கூலிப்படைகளால் நடத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதில் அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கண்ணை மூடிக் கொண்டு, சம்பந்தம் இல்லாத நபர்களை கைது செய்து கணக்கு காட்டி வருகிறது.
இந்த பிரச்னை குறித்து, அனைத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை அழைத்து, வரும் 23ம் தேதி நெல்லையில் எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பின்னணி பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க விரைவில் நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இந்த ஆட்சியை நிரந்தரமாக உடனே நீக்க வலியுறுத்தி விரைவில் ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளோம்.
- டாக்டா் கிருஷ்ணசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக