புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பல்வேறு சமுதாய மக்களை ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் பள்ளர், காலாடி, மூப்பர், பண்ணாடி, குடும்பர், தேவேந்திர குலத்தான் என்று அழைக்கப்படும் 6 சமுதாயத்தை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் மத்திய–மாநில அரசுகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். அதன் பின்னரும் மத்திய– மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக