எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 24 நவம்பர், 2014

நெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடக்கும் அவசர ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...

தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறும் தொடர் படுகொலைகள் குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நெல்லையில் 23ம் தேதி டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-
~தென்தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெற்ற தொடர் படுகொலை சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசைக் கோருவது. தென்மாவட்டங்களில் துணைராணுவ படை பாதுகாப்பு வழங்க வேண்டும்
~ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியல் பின்பலத்துடன் அப்பாவி மக்களை கொன்று தங்கள் ஜாதிய மேலாதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் மறவர் சமுதாயத்தின் ஜாதிய வன்முறை கும்பலுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது
~பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் நவீனமுறையிலான தீண்டாமையை நிலை நாட்டும் குறிப்பிட்ட பிரிவினரின் செயல்களை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது
~கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
~1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்து கொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப்பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது
~வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரியாக ஒரு சிறப்பு வழக்கறிஞர் குழு அமைப்பது
~1994-95ல் தூத்துக்குடி கலெக்டராக இருந்தவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால் கொடியன்குளம் கலவரம் ஏற்பட்டது. 1996ல் ஏற்பட்ட ஜாதி கலவரத்திற்கு பிறகு முக்குலத்தோர் , பட்டியலினம் , நாடார் உள்ளிட்ட மூன்று குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களை தென்மாவட்டங்களில் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. 2001ல் ஜெ.,ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை.
தென்தமிழகத்தில் அமைதி நிலவ கடந்த கால அரசாணையை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் . தென்தமிழகத்தில் இப்பொழுது பணிபுரியும் மூன்று பிரிவை சார்ந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பனிஇடமாற்றம் செய்ய இக்கூட்டம் வலியுறுத்திகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக