எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 29 நவம்பர், 2014

புதிய தமிழகம் கட்சி அரசியல் பயிலரங்கம்...

புதிய தமிழகம் கட்சியின் அரசியல் பயிலரங்கம் நவம்பர் 29&30 ஆகிய இரு தினங்களில் மகாபலிபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் நடைபெற உள்ளது.
29 ந் தேதி காலை 9 மணிக்கு அழைப்பாளர் பதிவு ஆரம்பம். 10 மணிக்கு நிகழ்சிகள் தொடங்கும் . தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 600 முதல் 700 அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
1998 - ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் இதே போன்று 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது .ஆனால் அது திறந்தவெளி மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டு நடைபெற்றது .இது முழுக்க முழுக்க அரங்கு நிகழ்ச்சியாகும் .முதல் முறையாக நடத்தப்பட்ட பயிலரங்கத்தில் பல்வேறு விதமான கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது அதைக்காட்டிலும் சிறப்பாக தற்பொழுது நடைபெறயுள்ள இப்பயிலரங்கதில் சர்வதேச , தேசிய , மாநில அளவிலான அரசியல் சூழ்நிலைகள் புதிய தமிழகம் கட்சியை மாநில அளவில் முதன்மை அரசியல் கட்சியாக முன் எடுத்து செல்வது தமிழகத்தில் தற்பொழுது நிலவக்கூடிய சமூக சிக்கல்கள் , சட்டங்கள் , ஆட்சி மாற்றங்கள் , சுகாதாரம் ,சுயஒழுக்கம் ,கட்சியை விரிவாக்கம் செய்தல் , ஊடகங்கள் தோற்றுவித்தல் என பல தரப்பட்ட விசயங்களும் இப்பயிலரங்கதில் விவாதிக்கப்படும்.
அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்ச்சி 29ந் தேதி காலை 9 மணிக்கு துவங்கி 30 ந் தேதி இரவு 7 மணி வரையிலும் நடைபெறும். அழைப்பிதழ் கிடைக்கப்படாதோர் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

புதிய தமிழகம் கட்சியின் அரசியல் இரண்டு நாள் பயிலரங்கம்..

காஞ்சிபுரம் மாவட்டம் மாகபலிபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் இரண்டு நாள் பயிலரங்கம்.டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் முதல் நாள் பயிலரங்கம் இன்று காலை 11:00 மணிக்கு துவங்கியது

திங்கள், 24 நவம்பர், 2014

நெல்லை மாவட்ட ஆட்சியா் கருணாகரன் அவா்களை இடமாற்றம் செய்ய வேண்டும் - டாக்டா் கிருஷ்ணசாமி

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி 10 ஆயிரம் கிராமங்களில் புதிய தமிழகம் கட்சிதிண்ணைப் பிரசாரம்...

23.11.2014 அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்திற்கு எதிராக நடைபெறும் தொடா் படுகொலைகளை சம்பந்தமாக தேவேந்திரகுல வேளாளா் சமுதாயகிராமத் தலைவா்கள் மற்றும் புதிய தமிழகம் நிா்வாகிகள் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவா்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்.
தீா்மானம்-6
1989ம் ஆண்டு பட்டியலின வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 2014ம் அண்டு திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிாிவினா் முறையாக தொிந்து கொள்ளும் பொருட்டு தங்களுக்கு எதிராக அன்றாட நடைபெறும் சமூக கொடுமைகள் மற்றும் தனிநபா் கொடுமைகள் அனைத்திற்கும் தீா்வு காணும் பொருட்டு வரும் 3 மாதங்களில் முதல் கட்டமாக 10ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டு பிரசுரங்கள், வாகன பிரசாரம், பொதுக் கூட்டங்கள் வாயிலாக எடுத்து செல்வது என இக்கூட்டம் முடிவுசெய்யப்படுகிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி 10 ஆயிரம் கிராமங்களில் புதிய தமிழகம் கட்சிதிண்ணைப் பிரசாரம்...

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தீர்மானங்கள்: தென்தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெற்ற தொடர் படுகொலை சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசைக் கோருவது.1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்து கொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப்பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது.வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரியாக ஒரு சிறப்பு வழக்குரைஞர் குழு அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் செல்லப்பா உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி திண்ணைப் பிரசாரம்: புதிய தமிழகம் கட்சி முடிவு...

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனர்-தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
தீர்மானங்கள்: 1989ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்துகொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப் பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது.
வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரியாக ஒரு சிறப்பு வழக்குரைஞர் குழு அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களால் கவுரவக் கொலைகள் நடைபெறுகின்றன - டாக்டர் க. கிருஷ்ணசாமி



அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே கவுரவக் கொலைகள் நடைபெறுகின்றன என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய டாக்டர்.க.கிருஷ்ணசாமி, "தமிழகத்தில் தற்போது சாதிக்கலவரங்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. கடந்த 2012இல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் பரமக்குடியில் 7 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு தர்மபுரியில் இருவேறு சமூகத்தினரின் காதல் திருமணத்தையொட்டி, கலவரம் நடந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது.

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகள் அனைத்தும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற கூலிப்படையினர் மூலமாகவே நடத்தப்படுகிறது. இவர்களுக்கு போலீஸ்காரர்களின் துணை உள்ளது.

அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. இந்த கொலைகள் அனைத்தும் அற்ப காரணங்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளன. உசிலம்பட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் கவுரவ கொலைகள் நடந்து உள்ளன" என்றார்.

நெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடக்கும் அவசர ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...

தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறும் தொடர் படுகொலைகள் குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நெல்லையில் 23ம் தேதி டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-
~தென்தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெற்ற தொடர் படுகொலை சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசைக் கோருவது. தென்மாவட்டங்களில் துணைராணுவ படை பாதுகாப்பு வழங்க வேண்டும்
~ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியல் பின்பலத்துடன் அப்பாவி மக்களை கொன்று தங்கள் ஜாதிய மேலாதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் மறவர் சமுதாயத்தின் ஜாதிய வன்முறை கும்பலுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது
~பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் நவீனமுறையிலான தீண்டாமையை நிலை நாட்டும் குறிப்பிட்ட பிரிவினரின் செயல்களை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது
~கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
~1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்து கொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப்பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது
~வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரியாக ஒரு சிறப்பு வழக்கறிஞர் குழு அமைப்பது
~1994-95ல் தூத்துக்குடி கலெக்டராக இருந்தவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால் கொடியன்குளம் கலவரம் ஏற்பட்டது. 1996ல் ஏற்பட்ட ஜாதி கலவரத்திற்கு பிறகு முக்குலத்தோர் , பட்டியலினம் , நாடார் உள்ளிட்ட மூன்று குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களை தென்மாவட்டங்களில் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. 2001ல் ஜெ.,ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை.
தென்தமிழகத்தில் அமைதி நிலவ கடந்த கால அரசாணையை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் . தென்தமிழகத்தில் இப்பொழுது பணிபுரியும் மூன்று பிரிவை சார்ந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பனிஇடமாற்றம் செய்ய இக்கூட்டம் வலியுறுத்திகிறது.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

நெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடக்கும் அவசர ஆலோசனைக் கூட்டம்.

நெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடக்கும் அவசர ஆலோசனைக் கூட்டம்.

தன்மானத் தலைவரின் தலைமையில் மீண்டுமோர் சமத்துவப் போர்!

தென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு எதிராக நிகழும் தொடர்படுகொலைகள் தொடர்பாக அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் ‘தென்திசை உதித்த செஞ்சுடர். டாக்டர் அய்யா’ அவர்கள் தலைமையில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய ஊர் நாட்டாண்மைகள் மற்றும் ஊர் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசிக்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை (23.11.2014) காலை 11 மணியளவில் திருநெல்வேலி சிந்துபூந்துறையிலுள்ள ஆர்.கே.வி.திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. 1995-ஆம் கொடியன்குளம் கலவரம் ஏற்பட்டபோது தென்தமிழகம் முழுவதும் எந்த மாதிரியான அசாதாரண சூழல் நிலவியதோ அதே மாதிரியான அசாதாரண சூழல் தான் தற்போதும் தென்தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. 1995-ல் எவ்வாறு நம் இனமான சொந்தங்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ், ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து, சமத்துவப் போர்தொடுத்து, நம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்தோமோ அதே ரீதியான சமத்துவப் போருக்கு தயாராக வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கிறோம். ஆகவே நம் இனமான சொந்தங்கள் அனைவரும் நம்மிடையே நிலவும் கருத்து முரண்பாடுகளைக் களைந்து, இனவிடுதலை ஒன்றையே இலக்காக வைத்து ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து மீண்டுமோர் சமத்துவப் போருக்குத் தயாராகும் வகையில் முதற்கட்டமாக நடைபெறும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அந்தந்த ஊர் நாட்டாண்மைகள், ஊர் தலைவர்கள் மற்றும் நம் இனமான சொந்தங்களான இளைஞர்களும் பெரியோர்களும் திரளாக கலந்துகொள்ளுமாறு அறைகூவல் விடுத்து அழைக்கிறோம்…

தென்தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் இறந்த 66 தமிழர்களுக்கு புதிய தமிழகத்தின் மவுன அஞ்சலி.

செவ்வாய், 18 நவம்பர், 2014

தென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்: தமிழக அரசை கலைக்கவேண்டும் - கிருஷ்ணசாமி



மதுரை:  தென் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. தென் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இதில் 26 பேர் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் நாடார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும் ஆகும்.

அதிகாரிகள் துணையோடு இந்த கொலைகள் நடந்துள்ளதால் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டுமென்று ஆளுனரிடம் மனு கொடுக்க போகிறேன். இந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பின்னணி பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன்" என்றார்.

நெல்லை மாவட்ட கொத்தன்குளம் கிராமத்தில் உள்ள தேவேந்திகுல மக்களை டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் சந்தித்த போது.

நெல்லை மாவட்ட கொத்தன்குளம் கிராமத்தில் உள்ள தேவேந்திகுல மக்களை டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் சந்தித்த போது.

தென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்....டாக்டா் கிருஷ்ணசாமி.

கடந்த 1991 முதல் 96 வரை அதிமுக ஆட்சி இருந்தபோது தமிழகத்தில் ஜாதி, மதக்கலவரங்கள் அதிகம் நடந்தன. அதேபோன்று தற்போது துவங்கி உள்ளது. அண்மைக்காலமாக தாழ்த்தப்பட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னரே, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கவுரவக் கொலைகள் நடந்துள்ளன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் கடந்த 6 மாதத்தில் 66 கொலைகள் நடந்துள்ளன. இதில் 26 பேர் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் நாடார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும். பெரும்பாலும் கூலிப்படைகளால் நடத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதில் அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கண்ணை மூடிக் கொண்டு, சம்பந்தம் இல்லாத நபர்களை கைது செய்து கணக்கு காட்டி வருகிறது.
இந்த பிரச்னை குறித்து, அனைத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை அழைத்து, வரும் 23ம் தேதி நெல்லையில் எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பின்னணி பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க விரைவில் நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இந்த ஆட்சியை நிரந்தரமாக உடனே நீக்க வலியுறுத்தி விரைவில் ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளோம்.
- டாக்டா் கிருஷ்ணசாமி.

தென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்....

கடந்த 1991 முதல் 96 வரை அதிமுக ஆட்சி இருந்தபோது தமிழகத்தில் ஜாதி, மதக்கலவரங்கள் அதிகம் நடந்தன. அதேபோன்று தற்போது துவங்கி உள்ளது. அண்மைக்காலமாக தாழ்த்தப்பட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னரே, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கவுரவக் கொலைகள் நடந்துள்ளன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் கடந்த 6 மாதத்தில் 66 கொலைகள் நடந்துள்ளன. இதில் 26 பேர் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் நாடார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும். பெரும்பாலும் கூலிப்படைகளால் நடத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதில் அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கண்ணை மூடிக் கொண்டு, சம்பந்தம் இல்லாத நபர்களை கைது செய்து கணக்கு காட்டி வருகிறது.
இந்த பிரச்னை குறித்து, அனைத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை அழைத்து, வரும் 22ம் தேதி நெல்லையில் எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பின்னணி பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க விரைவில் நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இந்த ஆட்சியை நிரந்தரமாக உடனே நீக்க வலியுறுத்தி விரைவில் ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளோம்.

புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர்...

தென் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிற இத்தருணத்தில் நம் சமூகத்திற்கான விடுதலையை நோக்கி சரியான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கும் சமூக சமநீதிப் போராளி டாக்டர் அய்யா அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கட்சிகளிலிருந்து விலகி புதிய தமிழகம் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக
'தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரு.அலங்கை.முனியாண்டி அவர்கள் தலைமையில் வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் திரு.கண்ணன், மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு.ஆட்டோ பாண்டி, அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் திரு.இரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள்'
புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் மதுரம் பாஸ்கர், மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர் அண்ணன் தெய்வேந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் தன்மான தானைத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர்.

தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்து வருகிறது: கிருஷ்ணசாமி


புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது,   ‘’தமிழகத்தில் தற்போது சாதிக்கலவரங்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. கடந்த 2012ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் பரமக்குடியில் 7 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு தர்மபுரியில் இருவேறு சமூகத்தினரின் காதல் திருமணத்தையொட்டி, கலவரம் நடந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது.

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகள் அனைத்தும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற கூலிப்படையினர் மூலமாகவே நடத்தப்படுகிறது. இவர்களுக்கு போலீஸ்காரர்களின் துணை உள்ளது. அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன.

இந்த கொலைகள் அனைத்தும் அற்ப காரணங்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளன. உசிலம்பட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் கவுரவ கொலைகள் நடந்து உள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளேன். இதுதொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம்.

கடந்த ஓராண்டாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். கவுரவ கொலைகள், சாதி கலவரங்களை கண்டிக்கும் வகையில் அனைத்து தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நெல்லையில் வருகிற 22–ந்தேதி அன்று ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உள்ளோம்’’என்று கூறினார். 

ஆதிக்க சாதி வெறியர்களால் பல கொலைகளை கண்ட நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள தேவேந்திரகுல மக்களை நேரில் சந்தித்து டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஆறுதல் கூறும் போது....

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் அதிகரித்துவிட்டது டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்..


நெல்லை,
“நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பரமக்குடி துப்பாக்கி சூடுகடந்த 1991–ம் ஆண்டு முதல் 1995–ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தென் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடந்த தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த சாதிக்கலவரம் 10 ஆண்டுகள் நீடித்தது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கும், மக்களிடையே சமுதாய நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் புதிய தமிழகம் கட்சி பெரும் முயற்சி எடுத்தது. மக்களிடையே சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு செப்டம்பர் மாதம் பரமக்குடியில் தேவேந்திரகுல வேளாளர்கள் 7 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது ஆங்காங்கே ஆதிக்க சாதியினரால் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்கள் கடந்த 2 மாதமாக அதிகரித்து உள்ளன. இந்த 2 மாதத்தில் மட்டும் 20–க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
குரல் கொடுக்க வேண்டும்இந்த கொலையில் தொடர்புடைய கும்பல் நெல்லை, ஸ்ரீவைகுண்டத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களும், தமிழக நலனில் அக்கறை உள்ளவர்களும், அரசியல் கட்சியினரும், கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இதனால் நெல்லை–தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடவேண்டும் என்று கவர்னருக்கும், மத்திய உள்துறை மந்திரிக்கும் கடிதம் எழுதவும், அவர்களை சந்தித்து பேசவும் உள்ளேன்.
பேரணிநெல்லை–தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் வன்கொடுமை தாக்குதலை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நெல்லை, ஸ்ரீவைகுண்டத்தில், கண்டன பேரணி நடத்த உள்ளோம். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறோம். கால்வாய் கிராமத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இது கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார்.

தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்து வருகிறது: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேட்டி

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் தற்போது சாதிக்கலவரங்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. கடந்த 2012ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் பரமக்குடியில் 7 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு தர்மபுரியில் இருவேறு சமூகத்தினரின் காதல் திருமணத்தையொட்டி, கலவரம் நடந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகள் அனைத்தும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற கூலிப்படையினர் மூலமாகவே நடத்தப்படுகிறது.
இவர்களுக்கு போலீஸ்காரர்களின் துணை உள்ளது. அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன.
இந்த கொலைகள் அனைத்தும் அற்ப காரணங்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளன. உசிலம்பட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் கவுரவ கொலைகள் நடந்து உள்ளன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளேன். இதுதொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம்.
கடந்த ஓராண்டாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். கவுரவ கொலைகள், சாதி கலவரங்களை கண்டிக்கும் வகையில் அனைத்து தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நெல்லையில் வருகிற 22–ந்தேதி அன்று ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். 

வியாழன், 13 நவம்பர், 2014

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

நாகப்பட்டினம்:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஆணைக்கினங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவம்பர்-7 அன்று புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்..

புதிய தமிழ்கம் கட்சியின் முன்னணித் தோழர் புதிய தமிழகம் போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர் திரு.தங்கராஜ் - எப்சிஜான் திருமண விழா.

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஆணைக்கினங்க திருப்பூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

கரூர் நவ-7:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர்:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


  • விருதுநகர் நவ-7 :-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியார் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சனி, 8 நவம்பர், 2014

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

இராமநாதபுரம்:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி இராமநாத புரம் மாவட்ட ஆட்சியார் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் கதிரேசன் அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

மதுரை:-தேவேந்திரகுல வேளாளர் என்று அரசானை பிறப்பிக்க வலியுறுத்தியும்,மதுரை விமான நிலையத்திற்கு 80 சதவீதம் இடமளித்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் தலைவர் இமானுவேல் சோகரன் அவர்களின் பெயர் சூட்ட வலியுறுத்தி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் செ.பாஸ்கர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை:-தேவேந்திரகுல வேளாளர் என்று அரசானை பிறப்பிக்க வலியுறுத்தியும்,மதுரை விமான நிலையத்திற்கு 80 சதவீதம் இடமளித்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் தலைவர் இமானுவேல் சோகரன் அவர்களின் பெயர் சூட்ட வலியுறுத்தி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் செ.பாஸ்கர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

"தேவேந்திரகுல வேளாளர்" என அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி., எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பள்ளர்,குடும்பர்,காலாடி,பண்ணாடி,மூப்பர்,தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் அழைக்கப்படும் ஒரே சமுதாய மக்களை "தேவேந்திரகுல வேளாளர்" என அழைக்க வலியுறுத்தி நவம்பர் 07-ம் தேதி தமிழகம் தழுவிய அனைத்து மாவட்ட ஆட்சியார் அலுவலகங்கள் முன்பு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருச்சியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட்த்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பல்வேறு சமுதாய மக்களை ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் பள்ளர், காலாடி, மூப்பர், பண்ணாடி, குடும்பர், தேவேந்திர குலத்தான் என்று அழைக்கப்படும் 6 சமுதாயத்தை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் மத்திய–மாநில அரசுகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். அதன் பின்னரும் மத்திய– மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சிவகங்கை,

இமானுவேல் சேகரனா ருக்கு அரசு விழா எடுக்க கோரி புதிய தமி ழகம் கட்சியினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குலத்தார், காலாடி, குடும்பர், பள்ளர், பன்னாடி ஆகிய இனத்தவர் களை ஒருங்கிணைத்து தேவேந் திர வேளாளர் என அழைக்க வேண்டும். ஆதிதிராவிடர் என்பதை நீக்கி பட்டியல் இன மக்கள் என்று அழைக்க வேண் டும்.

இமானுவேல் சேகரனா ருக்கு அரசு விழா எடுக்க வேண்டும். உள்ஒதுக்கீடை நீக்க வேண்டும். பால்விலை உயர்வை ரத்து செய்ய வேண் டும்.

இலங்கையில் தூக்கு தண் டனை விதிக்கப்பட்ட 5 பேர் களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்முக ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செய லாளர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் உடை யப்பன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வீட் டன், நிர்வாகிகள் இந்திரஜித், காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

திருவாரூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். இளமுருகு, ஒன்றிய செயலாளர்கள் கோட்டூர் ரஜினிகுமார், நீடாமங்கலம் சுரேஷ்கண்ணன், திருத்துறைப்பூண்டி இளங்கோ, கொரடாச்சேரி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் ஒன்றிய செயலாளர் சீனி.செம்மலர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பள்ளர் குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையன், மூப்பன் உள்ளிட்ட பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ரஜினி, தென்பாதி தலைவர் மாகாளி, மன்னார்குடி நகர செயலாளர் ஞாயிறுநாதன், நகர இளைஞர் அணி செயலாளர் கமலகாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

அதேபோல நாகையில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு புதியதமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டசெயலாளர் சூர்யா தலைமை தாங்கினார். நாகை நகர செயலாளர் ராமகிருஷ்ணன், நாகூர் நகர செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் நேசன், ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தேவேந்திரகுலத்தான் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோரியும், தெய்வத்திருமகனார் தியாகி.இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அரசுவிழா எடுக்க வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மும்முனைப் போராட்டம் நடத்தப்படும் என ‘தென்திசை உதித்த செஞ்சுடர்.மருத்துவர் அய்யா’ அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன் முதற்கட்டமாக முதல் போராட்டமாக இன்று (07.11.2014) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இன்று காலை 10 மணியளவில் திருச்சி-சிந்தாமணி அண்ணாசாலை அருகில் திருச்சி மாவட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் கலந்துகொள்கிறார். மேலும் இன்று மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைக்கப்படும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்கிறார். இந்த போராட்டமானது ஏதோ ஒரு பெயர் மாற்றத்திற்கான போராட்டம் மட்டுமல்ல, நம்சமூகத்தின் ஒட்டுமொத்த தலையெழுத்தையே மாற்றியமைக்கக்கூடிய போராட்டமாகும். 60 வயதை கடந்த நிலையிலும் இந்த சமூகத்தின் விடுதலைக்கான பாதையில் ஓய்வறியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் உன்னதத் தலைவருக்குப் பின்னால் ஒருமைப்பாட்டோடு அணிதிரள்வோம். என் இனமான சொந்தங்கள் அனைவரும், இளைஞர்களும், மாணவர்களும், தாய்மார்களும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் நடைபெறவிருக்கும் இந்த முதற்கட்ட மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு கட்சிகடந்து, இயக்கம்கடந்து “சமூக அங்கீகாரம்” என்கிற உயரிய நோக்கோடு திரளாக திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறது புதிய தமிழகம்!