எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 27 டிசம்பர், 2011

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே முழு பொறுப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி


முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே பொறுப்பு என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசினார்.


முல்லைப் பெரியாறு அணையை மீட்டெடுக்க புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனி பகவதியம்மன் கோவில் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தண்ணீர், காற்று ஆகியவை அனைவருக்கும் சொந்தமானது. இதனை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்கள் அரசியல் கட்சிகள் பாகுபாடு இன்றி பொது மக்களாக நாள்தோறும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

136
அடியில் இருந்து 142 அடியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே முழு பொறுப்பு. இரு மாநிலங்களிடையே பிரச்சினை ஏற்படும் போது பிரதமர் இரு மாநில முதல் அமைச்சர்களையும் அழைத்து பேசி சுமுகமாக முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தவறிவிட்டதாக தெரிகிறது.

கேரளாவில் வாழும் தமிழர்கள் அகதிகளாக வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கேரள அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் விளைவு விபரீதமாக இருக்கலாம். இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக