எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 6 டிசம்பர், 2011

பால், பஸ் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் நாளை ஆர்ப்பாட்டம்


கோவை : ""பால்விலை, போக்குவரத்து கட்டணம் உயர்வை திரும்ப பெறக்கோரி, புதிய
தமிழகம் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் நாளை (21ம் தேதி) ஆர்ப்பாட்டம்
நடக்கும்'' என,புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கூறினார். அவர்
நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை
கண்டிக்கிறோம்; இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மாநில அரசு தலா
ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களை
வஞ்சிக்கும் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; ஆதி திராவிட
நலத்துறைக்கு "பட்டியல் இனத்துறை' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
இம்மானுவேல் சேகரன் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க
வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சார்பில்,
சென்னை மெமோரியல் ஹாலில் ஒருநாள் உண்ணாவிரதம் வரும் டிச.,6 ல் நடக்கிறது. 
அதிமுக அரசு பால் மற்றும் பஸ் கட்டணத்தை நூறு சதவீதம் உயர்த்தி, தமிழக
மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது. விலையேற்றத்துக்கு, அரசு என்ன காரணம்
கூறினாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை."பால்விலை,
போக்குவரத்து கட்டணம் உயர்வை திரும்பபெறக்கோரி, புதிய தமிழகம் கட்சி
சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்கள்
முன், நாளை ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக