எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி





முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 9 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள தமிழக மக்களிடையே மிகப்பெரிய கசப்புணர்வு வளர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைகளும் உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட மத்திய அரசு இந்த பிரச்சினையில் தீர்வுகாண்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காது கண்டிக்கத்தக்கது. இலங்கை பிரச்சனையில் கண்டுகொள்ளாததுபோலவே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும் மத்திய அரசின் அணுகுமுறை உள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முல்லைப்பெரியாறு பிரச்சினை மட்டும் அல்ல, கன்னியாகுமரி மாவட்டத்தில் மெய்யாறு, வடகரை பகுதிகளுக்கு கேரளாவில் இருந்துவந்துகொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளது. ஆந்திரா எல்லையில் பாலாற்றின் குறுக்கே 300 க்கும் மேற்பட்ட தடுப்பு அணைகள் கட்டப்பட்டதால் பாலாறு வரண்டு, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழடையும் நிலையில் உள்ளது. இப்படிப்பட்ட எந்த பிரச்சினைக்கும் மத்திய அரசு தீர்வுகாண்பதாக தெரியவில்லை.

இதேபோல முல்லைப்பெரியாறு பிரச்சினையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் கேரள அரசு மதிக்கவில்லை. மத்திய அரசு தொடர்ந்து மெத்தன போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது.
எனவே கேரள தமிழக மாநிலங்களின் முதல் மந்திரிகளையும் பிரதமர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.

இரண்டு மாநில மக்களும் மோதிக்கொள்ளும் சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளிவைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஜனவரி மாதம் 9 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக