First Published : 04 Dec 2011 02:01:36 AM IST
சென்னை, டிச.3: திட்டமிட்டபடி டிசம்பர் 6-ம்தேதி உண்ணாவிரதம் நடக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
"பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்று அந்த சம்பவத்தின்போது உயிரிழந்த மேலும் 3 பேர் குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு வேலையும் வழங்கவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள், வெளி ஒதுக்கீடுகள் இல்லாமல் 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 77 சாதியைச் சேர்ந்தவர்களைப் பட்டியல் இனத்தவர்கள் என்றே அழைக்க வேண்டும்; இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே அறிவித்தபடி டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடக்கும்.சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு விவசாயிகளுக்கு நல்லது. இதுகுறித்துப் பொது விவாதம் நடத்த வேண்டும்.
ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைத் தண்ணீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.விலைவாசி உயர்வை கண்டித்து மற்ற கட்சியினரை ஒருங்கிணைத்து புதிய தமிழகம் கட்சி போராட்டம் நடத்தும்' என்றார் கிருஷ்ணசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக