எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 27 டிசம்பர், 2011

இராமய்யாவின் குடிசை -கீழ்வெண்மணி சம்பவ ஆவணப் படம் -வீடியோ


கீழ்வெண்மணி 44 உயிர்களும் அரைப்படி நெல்லும்




36 வருஷங்களாகியும் உயிர் பொசுங்கிய நெடியடிக்கிறது இந்தக் கிராமத்து மண்ணில். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் வெண்மணிச் சம்பவத்தை நினைவூட்டுகிற சிவப்பு வளைவு. உள்ளே போனால் காலனி தெரு. அதில் ரத்தசாட்சி போல சிவப்புமயமான கட்டிடம். 

1967ல் 44 உயிர்கள் விறகுகள் மாதிரி எரிக்கப்பட்ட இடம் இதுதான். ஜாலியன் வாலா பாக்கில் உள்ள நினைவுச் சின்னம் மாதிரியே வடிவமைத்திருக்கிறார்கள் இதையும். ஜோதிபாசு அடிக்கல் நாட்டி 1970ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டத்தைத் திறந்து வைத்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான பி. ராமமூர்த்தி. நினைவுத்தூண்களில் வரிசையாகப் பதிந்திருக்கின்றன சாகடிக்கப்பட்ட அந்த 44 பேர்களின் பெயர்கள். 

தஞ்சை மண்ணில் 'பண்ணையாள் முறை' ஆழமாக வேரூன்றியிருந்த காலம். விவசாய வேலைகளில் சற்று சுணக்கம் காட்டினாலும் உடம்பில் சவுக்கடி விழுந்து வலியுடன் ரத்தம் கசியும். அதோடு மாட்டுச் சாணியைப் பால் மாதிரி கரைத்து அந்தத் தொழிலாளர்களைக் குடிக்கச் சொல்வார்கள். கசங்கிய முகத்துடன் வேறுவழியில்லாமல் குடிப்பார்கள் விவசாயத் தொழிலாளிகள். எதிர்த்துச் சிறுவார்த்தை கூடப் பேச முடியாது. 

அவர்களிடமும் வந்தது விழிப்பு. "நியாயமான கூலியைக் கேள். குருடனாக இருக்காதே... கண்ணைத் திற ஊமையாக இருக்காதே - பேசு..." என்று நரம்புகளை அதிரவைக்கிறபடி பிரச்சாரம் பண்ணினார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் சீனிவாசராவும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். பிரச்சார பொறி பலருடைய மனசில் விழுந்து கணகணத்தது. ஒன்று சேர்ந்தார்கள். உருவானது விவசாயிகள் சங்கம். எழுந்தது தட்டிக் கேட்கிற குரல். 

அந்த ஒற்றுமையே பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டது. 'தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது' என்று கண்டுபிடித்துச் சொன்னார் ராஜாஜி. நிலச்சுவான்தார்களும் கூடினார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். மஞ்சள் கொடியை ஏற்றி செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். அதை மறுத்து அரைலிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள். 

ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. தோல்விதான். அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரப் பொறி. 

1967 டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். நிலச்சுவான்தார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார்கள். கிராமமே ரணகளமானது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒரே பீதி. வேட்டையின் தீவிரம் தாளாமல் பலர் ஓடியிருக்கிறார்கள். ஒரு தெருவின் மூலையில் ராமையனின் குடிசை. மேலே கூரை. அதற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சின்ன அறையில் அடைசலாக 48 பேர். 

கொஞ்ச நேரத்தில் கதவடைத்து தீவைத்து விட்டார்கள். வெப்பம் தகித்து ஒரே கூச்சல். நெருப்பை மீறி ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். வந்ததில் இரண்டு பேரையும், ஒரு தாய் தூக்கி வெளியே வீசிய குழந்தையையும் திருப்பி குடிசைத்தீயில் வீசியிருக்கிறது வெளியே இருந்த கும்பல். தீ வேகத்துடன் எரிய அந்தப் பிழம்பில் கசிந்தது உயிர் கருகிய நாற்றம். 

நடு இரவில் போலீஸ் வந்து கனன்று கொண்டிருந்த கனலை விலக்கிப் பார்த்தால், உள்ளே கரிக்கட்டைகளாக எரிந்து அவிந்து கிடந்தன 44 உயிர்கள். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர். போஸ்ட் மார்ட்டத்திற்காக நாகப்பட்டினத்திலிருந்து வந்த டாக்டர் கைவிரித்தார். அடையாளம் சொல்ல முடியாமல் 'விடிந்ததும் செய்தி பரவி தமிழகமே அதிர்ந்தது'. 'நாட்டுக்கே அவமானம்' என்று கட்டம் கட்டி வெளியிட்டன டெல்லிப் பத்திரிகைகள். 

106 பேர் கைதானார்கள். திமுக ஆட்சி நடந்த அந்த நேரத்தில் கைதானவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். தப்பிப் பிழைத்தவர்கள் சாட்சியம் சொன்னார்கள். 'இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்' என்று சொன்னது போலீஸ். 

'அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல...' என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதும், விடுதலையானார்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சட்டரீதியாக அடங்கிப் போனது கீழ்வெண்மணிப் புகை. 

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி - புதிய தமிழகம்





 
கீழ்வெண்மணியில் எரித்துக் கொல்லப்பட்ட 43 ஒடுக்கப்பட்ட வேளாண் குடிமக்களுக்கு வரும் 25ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு : 

இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று சென்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர். 

இந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்திருப்பினும், 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் - கீழ்வெணிமணியில் நடந்த துயரச் சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது. 

உழைத்த உழைப்பிற்காக அரைப்படி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 43 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயரச் சம்பவம் நடந்த நாள் அது. தியாகம் புரிந்தவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது. 

அம்மக்களின் அளிப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழக கட்சியின் சார்பாக எனது தலைமையில் கீழ்வெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும். 

அதேபோல, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த மனு விபரம்




சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, சென்னை விமான நிலையத்தில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது,

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே முழு பொறுப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி


முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே பொறுப்பு என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசினார்.


முல்லைப் பெரியாறு அணையை மீட்டெடுக்க புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனி பகவதியம்மன் கோவில் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தண்ணீர், காற்று ஆகியவை அனைவருக்கும் சொந்தமானது. இதனை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்கள் அரசியல் கட்சிகள் பாகுபாடு இன்றி பொது மக்களாக நாள்தோறும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

136
அடியில் இருந்து 142 அடியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே முழு பொறுப்பு. இரு மாநிலங்களிடையே பிரச்சினை ஏற்படும் போது பிரதமர் இரு மாநில முதல் அமைச்சர்களையும் அழைத்து பேசி சுமுகமாக முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தவறிவிட்டதாக தெரிகிறது.

கேரளாவில் வாழும் தமிழர்கள் அகதிகளாக வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கேரள அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் விளைவு விபரீதமாக இருக்கலாம். இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசினார்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி





முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 9 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள தமிழக மக்களிடையே மிகப்பெரிய கசப்புணர்வு வளர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைகளும் உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட மத்திய அரசு இந்த பிரச்சினையில் தீர்வுகாண்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காது கண்டிக்கத்தக்கது. இலங்கை பிரச்சனையில் கண்டுகொள்ளாததுபோலவே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும் மத்திய அரசின் அணுகுமுறை உள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முல்லைப்பெரியாறு பிரச்சினை மட்டும் அல்ல, கன்னியாகுமரி மாவட்டத்தில் மெய்யாறு, வடகரை பகுதிகளுக்கு கேரளாவில் இருந்துவந்துகொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளது. ஆந்திரா எல்லையில் பாலாற்றின் குறுக்கே 300 க்கும் மேற்பட்ட தடுப்பு அணைகள் கட்டப்பட்டதால் பாலாறு வரண்டு, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழடையும் நிலையில் உள்ளது. இப்படிப்பட்ட எந்த பிரச்சினைக்கும் மத்திய அரசு தீர்வுகாண்பதாக தெரியவில்லை.

இதேபோல முல்லைப்பெரியாறு பிரச்சினையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் கேரள அரசு மதிக்கவில்லை. மத்திய அரசு தொடர்ந்து மெத்தன போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது.
எனவே கேரள தமிழக மாநிலங்களின் முதல் மந்திரிகளையும் பிரதமர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.

இரண்டு மாநில மக்களும் மோதிக்கொள்ளும் சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளிவைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஜனவரி மாதம் 9 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

ச‌சிகலா பெயரை சொ‌ன்னாலே.... அ‌திரு‌ம் அ‌.‌தி.மு.க.‌வின‌ர்

WD
ச‌சிகலா உற‌வின‌ர் க‌லியபெருமா‌ள் உ‌ள்பட இர‌ண்டு பேரை இ‌ன்று க‌ட்‌‌சி‌யி‌ல் இரு‌ந்து அ‌திரடியாக ‌நீ‌க்‌கியு‌ள்ளா‌ர். அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌‌ரு‌ம், முதலமை‌ச்சருமான ஜெயல‌‌லிதா.

யாரு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்காத வகை‌யி‌ல் தனது உ‌யி‌ர்‌த்தோ‌ழியான ச‌‌சிகலா, அவரது கணவ‌ர் நடராஜ‌ன் உ‌ள்பட 14 பேரை க‌ட்‌சி‌யி‌‌ன் அடி‌ப்படை உறு‌ப்‌பின‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து அ‌ண்மை‌‌யி‌ல் ஜெயல‌லிதா ‌நீ‌க்‌கியது ‌த‌மிழக அர‌சிய‌லி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியது.

கட‌ந்த 19ஆ‌ம் தே‌தி ச‌சிகலாவுக்கு எ‌திரான தனது அ‌திரடி நடவடி‌க்கையை இ‌ன்று வரை தொட‌ர்‌ந்து வரு‌கிறா‌ர் ஜெயல‌‌லிதா. ச‌சிகலா‌வி‌ன் உற‌வின‌ர் க‌லியபெருமா‌ள், பழ‌னிவே‌ல் ஆ‌‌‌கியோரை இ‌ன்று க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்‌கியு‌ள்ள முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, அவ‌ர்களுட‌ன் க‌ட்‌சி உறு‌‌ப்‌பின‌ர்க‌ள் யாரு‌ம் தொட‌ர்பு வை‌த்து‌க் கொ‌ள்ள கூடாது எ‌ன்று க‌‌ண்டி‌ப்பான உ‌த்தரவை ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

பெ‌ங்களூரு‌‌வி‌ல் நட‌ந்து வ‌ரு‌ம் வருமான‌த்து‌க்கு அ‌திகமாக சொ‌‌த்து சே‌ர்‌த்த வழ‌க்‌கி‌ல் ஜெய‌ல‌லிதாவு‌க்கு த‌ண்டனை ‌கிடை‌ப்பது உறு‌தியானா‌ல் முதலமை‌ச்ச‌ர் பத‌வியை தனது உற‌வின‌ர் அ‌ல்லது தன‌க்கு வே‌ண்டியவ‌ர்களு‌க்கு கொடு‌த்து‌விடலா‌ம் எ‌ன்ற ‌நினை‌ப்‌பி‌ல் கா‌ய் நக‌ர்‌த்‌தி வ‌ந்த ச‌சிகலா, அவரது கணவ‌ர் நடராஜ‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் த‌ந்‌திர‌ம் ஜெயல‌லிதாவு‌க்கு தெ‌‌ரியவரவே இ‌ந்த அ‌திரடி நடவடி‌க்கையை எடு‌த்து‌ள்ளா‌ர்.

க‌ட்‌‌சி‌யி‌ல் ம‌ட்டு‌மி‌ன்‌றி ஆ‌ட்‌சி அ‌திகா‌ர‌த்‌திலு‌ம் ப‌கிர‌ங்கமாக தலை‌யி‌ட்ட ச‌சிகலா, த‌ற்போது போய‌ஸ் தோ‌ட்ட‌த்த‌ி‌ல் இரு‌ந்தே ‌விர‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ச‌சிகலாவு‌க்கு ஆதரவாக செய‌ல்ப‌ட்டவ‌ர்க‌ள் ப‌ட்டியலை த‌ற்போது தயா‌ரி‌த்து வரு‌ம் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, ச‌சிகலா‌வி‌ன் உற‌வின‌ர்களை முத‌லி‌ல் களையெடு‌த்து வரு‌கிறா‌ர்.

முத‌ல் க‌ட்டமாக ச‌சிகலா உ‌ள்பட 14 பேரை க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து‌ ‌நீ‌க்‌கிய ஜெயல‌லிதா, சசிகலாவினஅண்ணி இளவரசி, அவரதசம்பந்தி கலியபெருமாள், டிடிவி தினகரனினமனைவி அனுராதஆகியோரமட்டுமநீக்கப்படாமலஇருந்தனர். இந்த நிலையிலதற்போதகலியபெருமாளையுமஅ.தி.மு.க.விலஇருந்து ஜெயலலிதநீக்கியுள்ளார்.

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா


அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கியதும், சீர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாலும்தான் பொறுக்க முடியாமல் சசிகலா கும்பலை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.
1991ம் ஆண்டுக்கு முன்பு போக வேண்டும் ஜெயலலிதா, சசிகலா இடையிலான நட்பை அறிந்து கொள்ள. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்தபோது அவருக்கு சாதாரண முறையில்தான் அறிமுகமானார் சசிகலா.
ஆணாதிக்கம் மிக்க அரசியல் துறையில், உற்ற தோழியாக சசிகலா வந்ததாலும், தன்னைப் புரிந்து கொண்டு நடந்ததாலும் சசிகலாவை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலாவும், ஜெயலலிதாவின் மனதறிந்து அவருக்கு உற்ற தோழியாக நடந்து கொண்டார். இந்த நட்பு நாளுக்கு நாள் இறுகி இணை பிரியாத தோழிகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும் மாறிப் போயினர். நாளடைவில் ஜெயலலிதாவின் உதவியாளராக உருவெடுத்தார் சசிகலா. மேலும் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கும் அவர் மாறினார்.
1991ம் ஆண்டுதான் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்பட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலா ஒரு முக்கிய அதிகார மையமாக உருவெடுத்தார். 91 முதல் 96 வரை நடந்த முதலாவது ஜெயலலிதா ஆட்சியின்போது சசிகலாவைத் தாண்டித்தான் காற்றாக இருந்தாலும் கூட ஜெயலலிதாவை சென்றடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
சர்வ வல்லமை படைத்த அதிகார மையமாக மாறிய சசிகலா படிப்படியாக தனது குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சிக்குள் இழுத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்காக தனது கணவர் நடராஜனைக் கூட உதறித் தள்ளத் துணிந்தார். பல ஆண்டுகளாகி விட்டது சசிகலாவும் நடராஜனும் பிரிந்து (இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்திப்பதுண்டு என்ற தகவலும் உண்டு).
ஜெயலலிதாவின் வலது கரமாகவும், இடதுகரமாகவும் மாறிப் போனதால் சசிகலா வைத்ததே சட்டம் என்ற நிலை கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் உண்டாகி விட்டது.
சசிகலாவின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவரது அக்காள் மகன்களான சுதாகரன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் அதிமுகவில் தலை தூக்கினர். உறவினர்களான அக்காள் கணவர் விவேகானந்தன்,டாக்டர் வெங்கடேஷ், ராவணன் உள்ளிட்டோரும் அதிகார மையங்களாகினர்.
அதிமுகவில் ஏதாவது நடக்க வேண்டும் என்றால் இவர்களில் யாரையாவது ஒருவரைப் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டனர். இந்த மன்னார்குடி வகையறாவின் ஆதிக்கத்தால், ஆளுமையால் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிச் சென்றனர், பலர் தூக்கியடிக்கப்பட்னர் – முத்துசாமி போல.
தற்போதைய கதைக்கு வருவோம். ஜெயலலிதாவின் 3வது ஆட்சி தொடங்கிய கடந்த 6 மாதங்களில் சசிகலாவின் ஆதிக்கமும், ஆட்டமும் கட்சிக்குள் அதிகரித்து விட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும் ஆட்சியிலும் அவர் பெருமளவில் தலையிடுகிறார் என்ற புகார்களும் கிளம்பின.
தனக்கு வேண்டியவர்களை முக்கியப் பதவிகளில் அமர்த்தினார் சசிகலா. அதேபோல அமைச்சர்கள் நியமனத்திலும் அவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. இடமாறுதல்கள் உள்ளிட்டவற்றிலும் பெரிய அளவில் விளையாடினார் சசி என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
இந்த குழப்பத்தால்தான் ஜெயலலிதாவின் இந்த ஆறு மாத கால ஆட்சியில் பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைச் செயலாளர்கள், பல அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்படுத்த காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமனமும், இடமாற்றமும் ஒரு முக்கிய உதாரணமாக கூறப்படுகிறது. இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர். இதனால்தான் அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரது செயல்பாடுகள் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காததால் அதிரடியாக அந்தப் பதவியிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. இது சசிகலாவுக்கு முதல் ஷாக் என்கிறார்கள்.
உளவுத்துறை தகவல்களை தன்னிடம் நேரடியாக கொடுக்காமல் சசிகலாவிடம் போய் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதனால்தான் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, பொன் மாணிக்கவேலை தூக்கினார் என்றும் கூறுகிறார்கள்.
அதேபோல நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவரான ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தையும் அதிரடியாக, அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கி 2வது ஷாக்கைக் கொடுத்தார் ஜெயலலிதா.
இப்படி அடுத்தடுத்து சசிகலாவுக்கு ஆப்பு வைத்தார் ஜெயலலிதா. இதன் பிறகாவது அவர் ஆட்சியில் தலையிடுவதை நிறுத்துவார் என்பதுதான் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு.
ஆனால் ஜெயலலிதாவே எதிர்பாராத வகையில் சசிகலா தரப்பின் சதிச் செயல்கள் இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்து ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவது, பின்னர் தங்களுக்குச் சாதகமாக எம்.எல்.ஏக்களை வளைத்து கட்சியைக் கைப்பற்றுவது என்ற திட்டமும் தீட்டப்பட்டதாக ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் வழக்கம் போல ஜெயலலிதாவின் விசுவாசி ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதவிக்கு வந்து விடாமல் தடுத்து நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டமும் சசிகலா தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்திற்குப் போனதால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்தே சசிகலாவை நீக்கும் அதிரடி முடிவுக்கு அவர் வந்ததாக கூறுகிறார்கள்.
இதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.
டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.
நந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
எனவே இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு!




மதுரை :
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார். மேலும், கமுதி அருகே கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முடிவு செய்திருந்தார். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஜான் பாண்டியனை தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் பரமக்குடியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்ட தமிழக அரசு, பலியானோரின் குடும்பத்தினரு க்கு ஸீ1 லட்சம் வழங்கியது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் குரு விஜயன், சட்டக்கல்லூரி மாணவர் செல்வம், தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்கச் செயலாளர் செல்வகுமார் உள்பட 10 பேர் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். மேலும் வக்கீல் புகழேந்தி என்பவர், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த 11 மனுக்களையும் நீதிபதிகள் கே.என். பாஷா, என். வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பிரசாத், சங்கர சுப்பு, ரத்தினம், தாளை முத்தரசு, பிரபு ராஜதுரை, லஜபதிராய், ரஜினி, ஆர்.வெங்கடேஷன், ஷாஜி செல்லன் ஆஜராகினர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில்Ô பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான புகார்கள் உட்பட அனைத்து ஆவணங்களை யும் போலீசார் 10 நாட்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரி ஒருவரை சிபிஐ இணை இயக்குநர் நியமித்து விசாரணையைத் தொடங்க வேண்டும். சிபிஐ உயர் அதிகாரி விசாரணையை மேற்பார்வையிட வேண்டும். சிபிஐ விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை அரசு வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கவும்,
இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நிவாரணம் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு அரசு செலவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய தேவையில்லை. சஸ்பெண்ட் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டன

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

மதுரை : பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார். மேலும், கமுதி அருகே கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முடிவு செய்திருந்தார். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஜான் பாண்டியனை தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் கைது செய்தனர்.

இதைக் கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் பரமக்குடியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்ட தமிழக அரசு, பலியானோரின் குடும்பத்தினரு க்கு ஸீ1 லட்சம் வழங்கியது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் குரு விஜயன், சட்டக்கல்லூரி மாணவர் செல்வம், தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்கச் செயலாளர் செல்வகுமார் உள்பட 10 பேர் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். மேலும் வக்கீல் புகழேந்தி என்பவர், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த 11 மனுக்களையும் நீதிபதிகள் கே.என். பாஷா, என். வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பிரசாத், சங்கர சுப்பு, ரத்தினம், தாளை முத்தரசு, பிரபு ராஜதுரை, லஜபதிராய், ரஜினி, ஆர்.வெங்கடேஷன், ஷாஜி செல்லன் ஆஜராகினர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில்Ô பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான புகார்கள் உட்பட அனைத்து ஆவணங்களை யும் போலீசார் 10 நாட்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரி ஒருவரை சிபிஐ இணை இயக்குநர் நியமித்து விசாரணையைத் தொடங்க வேண்டும். சிபிஐ உயர் அதிகாரி விசாரணையை மேற்பார்வையிட வேண்டும். சிபிஐ விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை அரசு வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கவும்,

இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நிவாரணம் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு அரசு செலவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய தேவையில்லை. சஸ்பெண்ட் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சனி, 17 டிசம்பர், 2011

999 ஆண்டு உரிமையை 125 ஆண்டுகளிலேயே கேரளா பறிக்க முயல்வது ஏன்?

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):




தமிழகத்தின் உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுப்பதில்லை என்ற இந்த தீர்மானத்தை முழுமனதோடு வரவேற்கிறோம். சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் எந்த அணையும் உடைந்ததாக வரலாறே இல்லை. தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழ்நாட்டுடன் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. தாமிரபரணி தவிர ஒரு நதி கூட தமிழகத்தின் எல்லைக்குள் உற்பத்தியாகவில்லை. எனவே மாநில எல்லை சீரமைப்பை நடத்த மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.



அமைதியான முறையில் அணுகுவதை வரவேற்கும் அதே நேரம், இன்னும் விரைந்து செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். பிரதமரை அனைத்து கட்சி குழு சந்திக்கலாம், ஒரு நாள் முழு அடைப்பு கூட நடத்தலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கேரள அரசு கலைக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி பார்வையில் விடலாம் என்பது எனது கருத்து. மத்திய அரசு மெளனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை.



தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கொண்ட குழுவுடன் பிரதமரை முதல்வர் சந்திக்க வேண்டும் என்றார்.

பெரியாறு அணை விவகாரம்

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : மாவட்டங்கள் எல்லையை பிரிக்கும் போதே, அதன் இயற்கை வளங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை இணைக்கும் பல பகுதிகளை தமிழகத்துடன் இணைந்திருக்க வேண்டும். எல்லை பிரிப்பின் போது, தமிழகம் ஏமாந்துவிட்டது.
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைந்து இருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்னையே ஏற்பட்டிருக்காது. தென் மாவட்டங்களில், தாமிரபரணி தவிர ஒரு நதி கூட, தமிழகத்தின் எல்லைக்கு உட்பட்டதாக இல்லை என்ற அளவில், எல்லை பிரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

அதிரவைக்கும் பரமக்குடி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்


நீதிபதி சம்பத் கமிஷனின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக நான்கு லட்ச ரூபாயையும் வாரிசுகளுக்கு அரசு வேலையையும் அறிவித்திருக்கிறார் முதல்வர். இந்த நேரத்தில், பலியானவர்களின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்து சர்ச்சை கிளம்பியுள்ளது!
மதுரையில் உள்ள 'ஸ்பார்க்' அறக்கட்டளையின் இயக்கு​நரும் மனித நல ஆர்வலருமான மாரிக்குமார் நம்மிடம் பேசினார். ''பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தது நான்கு பேர்தான். மற்ற இருவரும் போலீஸ் அடித்ததால்தான் இறந்திருக்கிறார்கள். அதற்கு இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்​போர்ட்​​தான் சாட்சி.
ஜெயபால் என்பவருக்கு வலது மார்பில் குண்டு பாய்ந்து இடது தோள்பட்டையைத் துளைத்திருக்கிறது.
50 வயதான பன்னீர்செல்வத்துக்கு, முன் நெற்றியில் இடது புருவத்துக்கு நான்கு செ.மீ. மேலே பாய்ந்திருக்கும் தோட்டா, தலையின் பின் பகுதியில் உச்சந்​தலைக்கு நான்கு செ.மீ-க்கு கீழே வெளியேறி இருக்கிறது. ஆனால், பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், 'குனிந்து ஒரு போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்துக்கொண்டு இருந்த​போது பன்னீர்செல்வத்தை சுட்டதுபோலீஸ்' என்று தனது ரிப்போர்ட்டில் சொல்கிறார். குனிந்தவரைச் சுட்டால் முன்னந்தலையிலா துப்பாக்கிக் குண்டு பாயும்?
முத்துக்குமாருக்கு அடிவயிற்றில் பாய்ந்த குண்டு, சிறுநீர்ப் பையை துளைத்து பின்புறமாக வெளியேறியதாக பி.எம். ரிப்போர்ட் சொல்கிறது.
54 வயதான வெள்ளைச்சாமிக்கு கையில் வலது மூட்டுக்கு மேலேயும் காலில் இடது முட்டிக்கு கீழேயும் குண்டு பாய்ந்திருக்கிறது. அத்துடன் முன்னங்காலும் முன்னங்கையும் சிதைந்து விட்டது. 'வய்ட்டல் பார்ட்ஸ்' என்று சொல்லப்படும் உடலின் முக்கியப் பாகங்கள் எதுவும் இவருக்குப் பாதிக்கவில்லை. எனவே, குண்டு பாய்ந்து கிடந்தவரை, போலீஸார் காட்டுமிராண்டித்தனமாக அடித்து ரத்தப் போக்கை ஏற்படுத்தியதாலேயே, வெள்ளைச்சாமி இறந்திருக்கிறார்.
தீர்ப்புக்கனி என்ற இளைஞரின் உடலில் தோட்டா காயமே இல்லை. தலையில் 34-க்கு 12 செ.மீ. அளவுக்கு ரத்தக் கட்டு. தலை முழுக்க ரத்தம் கட்டி வீங்கும் அளவுக்கு அடித்திருக்கிறது போலீஸ். இரண்டு கை, இரண்டு தொடைகளிலும், உடம்பு முழுக்கவும் ரத்தம் கட்டி இருந்துள்ளது. இடது காலின் முன் பகுதியில் இரும்பு ராடு துளைத்ததற்கான காயம்.
55 வயதான கணேசனுக்கு கீழ் முதுகில் பாய்ந்த குண்டு அடிவயிற்றுப் பகுதி வழியாக வெளியேறி இருக்கிறது. போலீஸுக்குப் பயந்து ஓடிய அந்தப் பெரியவரை, வெறித்தனமாய் சுட்டிருக்கிறது போலீஸ். கலவரத்தை அடக்க நினைக்காமல், கதையை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரையும் இடுப்புக்கு மேலேயே சுட்டு, துப்பாக்கிச் சூட்டுக்கான நெறிமுறைகளை மீறி இருக்கிறார்கள்.
நீதிபதி சம்பத் கமிஷனின் விசாரணை, அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதால்தான் மக்கள் அதைப் புறக்கணித்தார்கள். ஆனாலும், அவர்களின் வலிகளை தனது இடைக்கால அறிக்கையில் பதிவு செய்திருக்​கிறார் நீதிபதி சம்பத். அதனால்தான் இடைக்கால நிவாரணத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர்.
இது மட்டுமே மக்களின் ரணங்களுக்கு மருந்தாகி​விடாது. திட்டமிட்டுக் கலவரத்தை உண்டாக்கி, ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. அல்லது வேறு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரித்தால்தான் அது சாத்தியமாகும். போலீஸ் வாகனத்தை போலீஸாரே தீ வைத்துக் கொளுத்துவது போன்ற வீடியோ உள்​ளிட்ட சில முக்கியமான ஆவணங்கள் இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
''பரமக்குடி சம்பவத்தில் கலவரத்தைத் தூண்டியதும் நடத்தியதும் போலீஸ்தான். தொடக்கத்தில் சிலர் மட்டும் ரோட்டில் மறியல் செய்தபோதே அவர்களை அப்புறப்படுத்தாமல், ஒரு மணி நேரம் வேடிக்கை பார்த்தது போலீஸ். அதனால் அதிக அளவில் கூட்டம் கூடியது. கலவரம் நடந்த ஏரியாவில் பெரும்பாலும் பள்ளர் சமூகத்தினரின் கடைகள்தான் இருக்கிறது. அவர்களது வாகனங்களே கடை வாசல்களில் நிறுத்தப்பட்டு இருந்தன. தங்களது வாகனங்களை, அவர்களே தீ வைத்து எரிப்பார்களா? துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக போலீஸாரே அங்கு இருந்த வாகனங்களுக்கு தீ வைத்திருக்கிறார்கள். உயிரையும் உடமையையும் பாதுகாப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சொல்லும் போலீஸ்காரர்களுக்கு, ஒரு சுண்டு விரலில் கூட காயம் இல்லை. அரசாங்கம் அறிவித்திருக்கும் கூடுதல் இழப்பீடானது சிறு நிவாரணம்தானே தவிர, இதுவே தீர்வு ஆகாது'' என்கிறார் கலவரம் தொடர்பான ஆவணங்களைத் திரட்டிவரும் வன்கொடுமைக்கு எதிரான வழக்கறிஞர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பகத்சிங்.
ஆனால், கலவரக் களத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளோ, ''வெளியில் இருந்து பேசுகிறவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஸ்பாட்டில் இருந்தவர்களுக்குத்தான் பிரச்னையின் ஆழம் தெரியும். கலவரக்காரர்கள் என்ன செய்தார்கள்... துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்களை நாங்களும் வைத்​திருக்​கிறோம்'' என்கிறார்கள்.
    மீண்டும், புயல் வீசத்தொடங்கி விட்டது!
   - குள.சண்முகசுந்தரம்
    படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

செவ்வாய், 6 டிசம்பர், 2011

பால், பஸ் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் நாளை ஆர்ப்பாட்டம்


கோவை : ""பால்விலை, போக்குவரத்து கட்டணம் உயர்வை திரும்ப பெறக்கோரி, புதிய
தமிழகம் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் நாளை (21ம் தேதி) ஆர்ப்பாட்டம்
நடக்கும்'' என,புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கூறினார். அவர்
நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை
கண்டிக்கிறோம்; இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மாநில அரசு தலா
ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களை
வஞ்சிக்கும் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; ஆதி திராவிட
நலத்துறைக்கு "பட்டியல் இனத்துறை' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
இம்மானுவேல் சேகரன் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க
வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சார்பில்,
சென்னை மெமோரியல் ஹாலில் ஒருநாள் உண்ணாவிரதம் வரும் டிச.,6 ல் நடக்கிறது. 
அதிமுக அரசு பால் மற்றும் பஸ் கட்டணத்தை நூறு சதவீதம் உயர்த்தி, தமிழக
மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது. விலையேற்றத்துக்கு, அரசு என்ன காரணம்
கூறினாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை."பால்விலை,
போக்குவரத்து கட்டணம் உயர்வை திரும்பபெறக்கோரி, புதிய தமிழகம் கட்சி
சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்கள்
முன், நாளை ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறினார்

டிசம்பர் 6: புதிய தமிழகம் உண்ணாவிரதம்




First Published : 04 Dec 2011 02:01:36 AM IST


சென்னை, டிச.3: திட்டமிட்டபடி டிசம்பர் 6-ம்தேதி உண்ணாவிரதம் நடக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
"பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்று அந்த சம்பவத்தின்போது உயிரிழந்த மேலும் 3 பேர் குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு வேலையும் வழங்கவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள், வெளி ஒதுக்கீடுகள் இல்லாமல் 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 77 சாதியைச் சேர்ந்தவர்களைப் பட்டியல் இனத்தவர்கள் என்றே அழைக்க வேண்டும்; இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே அறிவித்தபடி டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடக்கும்.சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு விவசாயிகளுக்கு நல்லது. இதுகுறித்துப் பொது விவாதம் நடத்த வேண்டும்.
ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைத் தண்ணீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.விலைவாசி உயர்வை கண்டித்து மற்ற கட்சியினரை ஒருங்கிணைத்து புதிய தமிழகம் கட்சி போராட்டம் நடத்தும்' என்றார் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்





  [செவ்வாய் - 6 டிசம்பர்-2011 - 01:43:23 மாலை ]
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி; புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், கட்சியின் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கிருஷ்ணசாமி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் உயிரிழந்த ஆறுபேரைத் தவிர மேலும் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அத்துடன் ஆதிதிராவிட நலத்துறைக்கு பட்டியல் துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பி;க்க வேண்டும் என்று தெரிவித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் உயிரைக் காப்பாற்ற தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீhமானம் இயற்றி, நடுவண் அரசிடம் வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

வியாழன், 1 டிசம்பர், 2011

வெள்ள நிவாரண நிதியில் பல கோடி முறைகேடு - டாக்டர் கிருஷ்ணசாமி

 





தூத்துக்குடி டிச.1-
புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் க.கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த செப்டம்பர் மாதம் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி  டிசம்பர் ஆறாம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் முதற்கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து இருந்தோம். தமிழக முதல்வர் பரமக்குடியில் பலியான குடும்பத்திற்கு கூடுதலாக நான்கு லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலையும் அறிவித்து உள்ளார்கள். எனினும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளையும், இறந்த நாளையும் அரசு விழாவாக  அறிவிக்க வேண்டும், பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும்,  அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை  ரத்து செய்ய வேண்டும், ஆதிதிராவிட நலத்துறை என்பதை பட்டியலினத்துறை எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற பிற கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் ஆறாம் தேதி நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து நாளை, நாளை மறுநாள் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்

.
அண்மையில் பெய்த மழையினால் தமிழக அளவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழையினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் பழுதான சாலைகள், பல பாலங்கள், குளங்கள் சேதமடைந்தன. இதற்கு மத்திய அரசை எதிர்பார்க்காமல் அரசு தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் மழை வெள்ளத்தால் அதிகளவு சேதம் அடைந்துள்ளது. இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளேன். வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கு தமிழக அரசு ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு முதற்கட்டமாக நூறு கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அத்திமரப்பட்டி கிராமத்தில் வைரமணி என்ற சிறுவன் மழை நேரத்தில் மின்சாரம் தாக்கி இறந்துள்ளான். மாப்பிளையூரணி கிராமத்தில் பாலமுருகன் என்ற இளைஞர் குளத்தில் மூழ்கி இறந்துள்ளார். ஜாகீர் உசேன் காலனியில் சம்சுராஜாஉசேன் என்ற பன்னிரண்டு வயது சிறுவன் ஓடையில் மூழ்கி இறந்துள்ளான். தருவைக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற அந்தோணி ஜெயக்குமார் சென்ற மீனவரை கடந்த மாதம் இருபதாம் தேதி முதல் காணவில்லை. இவரது உயிர்க்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம். எனவே பாதிக்கப்பட்ட இந்த நான்கு குடும்பங்களுக்கும் தலா இரண்டு இலட்சம் தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.


மீனவர்கள் காணாமல் போவது தமிழகத்தில் அடிக்கடி நடைபெற்று வருகின்றது. கடலோர காவல் படை விரைந்து செயல்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு மீனவர்களை தேடும் பணிக்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க வேண்டும். முழுமையாக கடலோர காவல்படையை மட்டும் நம்பி இருக்காமல் காணாமல் போகும் மீனவர்களை கண்டு பிடிக்க தமிழக மீன்வளத்துறை மூலம் அனைத்து உபகரணங்களும் அரசு தயாராக வைத்திருக்க வேண்டும்.



ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் வெள்ள சேதம் ஏற்படும் பொழுது தற்காலிக நிவாரணப் பணிகள், நிரந்தர நிவாரணப் பணிகள் என்ற பெயரில் நடைபெற்ற வேளைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. கடந்த 2010-2011ம் ஆண்டுகளில் கோரம்பள்ளம் பகுதிகளில் மட்டும் ஒரு கோடியே இருபத்தி ஒன்பது இலட்சம் ரூபாய்க்கு 63 வேலைகள் நடைபெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதில் பல கோடி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எந்த வேலையும் முறையாக நடைபெறவில்லை.  


மாவட்ட ஊராட்சியின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2011 வரை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் வேலைகள் நடைபெற்றதாக பல கோடிகள் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட ஊராட்சி நிதியில் செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தனியாக விசாரணை கமிசன் அமைக்க வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்து தேசி அளவில் பொது விவாதம் நடத்தப் பட வேண்டும். தமிழ்நாட்டில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, உயர்த்தப்பட உள்ள மின் கட்டணம் இவையெல்லாம் ஏற்புடையதல்ல. கடந்த கால ஆட்சியை குறை சொல்லலி விலையேற்றத்தை நியாயப்படுத்தக் கூடாது. மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. விலைவாசி உயர்விற்கு எதிராக ஒத்த கருத்துடைய  அமைப்புகள், அரசியைக் கட்சிகளோடு இணைந்து போராடுவோம்" என்று டாக்டர். க. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தனது பேட்டியில் கூறினார்.  அப்போது மாவட்ட செயலாளர் வக்கீல்.கனகராஜ், மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி, ஓட்டபிடாரம் ஒன்றிய செயலாளர் பாபு, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் பெருமாள், மாநகர செயலாளர் கனகராஜ், தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் மகாராஜன், புதூர் பாண்டியாப்ரோம் ஊராட்சி மன்றத் தலைவர் முனியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.