#Dr_க_கிருஷ்ணசாமி MD.MLA அவர்கள்
"திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்" - பேரறிஞர் அண்ணா.
நேற்று (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
ஆனால் குறிக்கிட்டுப் பேசிய அமைச்சர் ‘ஏதோ வழக்கு இருக்கிறது’ என்று தவறுதலாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலே பலர் வழக்கு தொடுத்திருக்கிறதற்கெல்லாம் ‘இதுபோன்ற பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என்று ஆறு பெயர்களில் அழைக்கப்படக்கூடியவர்களை ஏன் ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று தான் நீதிமன்றங்கள் கேட்டிருக்கின்றனவே தவிர வேறு எதுவும் நீதிமன்றங்கள் சொல்லவில்லை.
மேலும் 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின்போது தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியபொழுது, ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார்’ என்று கூறியிருக்கிறார்.
அப்படியெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் எந்தவிதமான தவறுமில்லை; அவர் தகுதியானவர், என்ற அடிப்படையிலே நான் பேசினேன். அதேபோல இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
மேலும் இன்று காலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அரசினுடைய தனித் தீர்மானம், அதாவது, ஈழ மக்களுக்கு எதிராக 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து “ International Independent Investigation” என்று அழைக்கப்படும் சர்வதேச சுதந்திரமான விசாரணை தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, அந்த விதிமுறைகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்ற அமெரிக்காவினுடைய மாறுபட்ட நிலைபாட்டை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இந்திய அரசு ஐ.நா.வில் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்துப் பேசினோம். அதற்கு சான்றுகளாக இப்பொழுது சேனல் 4 என்ற ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் துப்பாக்கிச்சூடுகள், அதேபோல “No Fire Zone” என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கிச்சூடுகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படக்கூடாதோ அங்கெல்லாம் அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட நடத்தப்படக்கூடாத இடங்களிலெல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல ஈழ விடுதலைப் போரில் மிகப்பெரிய தியாகம் செய்திருக்கக்கூடிய பிரபாகரன் அவர்களுடைய புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பாட்டார் என்ற ஆதாரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட பல போர் விதிமுறை மீறல்கள் எல்லாம் இப்பொது மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும், ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் சர்வதேச அளவிலான நேர்மையான, நியாயமான, சுதந்திரமான விசாரணை வேண்டுமென்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக