புதிய தமிழகம் சட்டப்பேரவையிலிருந்து 2-வது முறையாக வெளிநடப்பு!
கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் சரியான விளக்கம் அளிக்க பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து இரண்டாவது முறையாக இன்று வெளிநடப்பு செய்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
"கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. அதில் பல்வேறு விசயங்கள் தொய்விலே இருக்கின்றன. அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று நான் அந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து பேச முற்பட்டபோது அதற்கு பேரவைத்தலைவர் அனுமதி மறுத்தார். எனவே அதை கண்டிக்கக்கூடிய வகையிலே அவையினுடைய நடவடிக்கைகளிலிருந்து இன்று இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்திருக்கிறேன். குறிப்பாக கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மத்திய அரசினுடைய நிதி உதவியால் 1988-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரக்கூடிய பல்கலைக்கழகமாகும். 2010-ஆம் ஆண்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும் பல்கலைக்கழக மானியக் குழுவும் இணைந்து ஒருசில விதிமுறைகளை வகுத்தன. அதாவது மத்திய அரசின் நிதி உதவியால் செயல்பட்டு வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுடைய வேந்தர்களாக இருக்கக்கூடியவர்கள், துணைவேந்தர்களாக இருக்கக்கூடியவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள், அதேபோல அதனுடைய உறவினர்கள், சொந்தபந்தங்கள் மற்றும் அந்த அறக்கட்டளைக்கு தலைமை தாங்கக் கூடியவர்களாக இருக்க கூடாது. ஆனால் இந்த விதிமுறைகளுக்கு மாறாக அவினாசிலிங்கம் அறக்கட்டளையின் தலைவராக இருக்கக்கூடிய மீனாட்சிசுந்தரம் தான் இதுவரையிலும் அந்த பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக இருக்கிறார். இதுதான் இப்போது இருக்கக்கூடிய பிரச்சினை. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டும் அவர் அந்தப் பதவியிலிருந்து இறங்க மறுக்கிறார். அவர் அந்த பதவியிலிருந்து விலகினால் தான் ஒரு கல்வியாளரை அந்தப் பதவியில் நியமிக்க முடியும். இந்த இடைவெளி நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகத்தான் மத்திய அரசு தனது நிதியுதவியை நிறுத்தியிருக்கிறது. எனவே தான் இந்த பல்கலைக்கழகத்தை மெல்ல மெல்ல சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குண்டான வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். எனவே மத்திய அரசு சிறிதளவு கூட விட்டுக்கொடுக்காமல் தற்போது இருக்கக்கூடிய வேந்தரை நீக்கிவிட்டு ஒரு கல்வியாளரை புதிய வேந்தராக நியமிக்க வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்குமா? என்பது தான் என்னுடைய கேள்வியாக இருந்தது. இந்தக் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதிலளிப்பதற்கு பேரவைத்தலைவர் மறுத்தார். தொடர்ந்து பேரவைத் தலைவர் இந்த சட்டமன்றத்தை அ.தி.மு.க.வின் அவைக்குழுவாகவே நடத்தி வருகிறார். எனவே அவருடைய ஜனநாயக விரோதப்போக்கைக் கண்டிக்கக்கூடிய வகையிலே இன்று இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக