எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 12 அக்டோபர், 2016

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?...

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?.....பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல், தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது பரமக்குடி போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
இமானுவேல்சேகரன் நினைவு தினமான செப்.11-ஆம் தேதி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் மாலையில் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நினைவிடத்தின் முன்பாகவே கூட்டம் நடத்தி அதில் ஒலிபெருக்கியிலும் பேசினார். ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் காலதாமதமாக வந்தமைக்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் மீது பரமக்குடி நகர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக