எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 1 ஜனவரி, 2014

நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க.வுக்கு கிருஷ்ணசாமி ஆதரவு!




சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று நண்பகலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், அரசியல் நிலவரம் குறித்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக