)
தென்காசி:
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடந்தது. அக்கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடந்தது. அக்கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தாமிரபரணி நதி மாசுபடாமல் பாதுகாக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும்.
தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,
பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி அனைத்த மாவட்டங்களிலும் ஜனவரி 22 ஆம் தேதி
பொதுக்கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
அதன்பின் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது, ''தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றிருப்பதற்கு பொதுக்குழுவில் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை சொல்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தல் நடத்திய வரலாறு இதுவரை கிடையாது. தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற எம்.பி.க்களின் அடிப்படையில்தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார். தேசிய அரசியலில் கடந்த 20 ஆண்டுகளில் மாநில, பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்திருக்கிறது" என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக