எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை குனியமுத்தூரில் உள்ள டாக்டர் அய்யா அவர்களுடைய வீட்டில் இன்று நேரில் சென்று சந்தித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையில் அமைய இருக்கும் கூட்டணிக்கு, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஆதரவு தருவதாக, தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 15 - 16 தேதிகளில், திருச்சியில் நடைபெற உள்ள, திமுக 10-வது மாநில மாநாட்டில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த அடிப்படையில் இன்று கோவையில் நடைபெறும் கழக இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, தலைவர் கலைஞர் அவர்கள் கைப்பட வழங்கிய மாநாட்டு அழைப்பிதழை, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களிடம், அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினேன். அவரும் மாநாட்டில் பங்கேற்பதாக மனமுவந்து ஒப்புதல் அளித்துள்ளார். திமுக அணியில் தேமுதிக சேர வேண்டும், அப்படி வந்தால் அவர்களை வரவேற்க காத்திருப்பதாக, தலைவர் கலைஞர் அவர்கள் தெரிவித்துள்ளார். முடிவு அவர்களிடம் உள்ளது. இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது. பொறுத்து இருந்து பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக