எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 1 ஜனவரி, 2014

லோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்!

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் 'தற்போதைய தோழமை கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் திமுக போட்டியிடும்' என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை உள்ளன. இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் தலைவர் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்றார். அதிமுகவுடன் மோதல்- திமுகவுக்கு ஆதரவு சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, அதிமுக அணியில் இடம்பெற்றது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக அரசுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி குரல் கொடுத்தார். பின்னர் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரித்தார். ஏற்காடு இடைத் தேர்தலிலும் திமுகவுக்கு தமது ஆதரவை அவர் தெரிவித்தார். இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏவான நிலக்கோட்டை ராமசாமி, திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது டாக்டர் கிருஷ்ணசாமி, கருணாநிதியை நேரில் சந்தித்த கையோடு லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்றும் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக