எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 26 ஆகஸ்ட், 2015

ராமதாசின் வாலை ஒட்ட நறுக்குவோம்!... டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A .,



ராமதாசின் வாலை ஒட்ட நறுக்குவோம்!... டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A .,
தென் தமிழகம் அடிக்கடி சாதிய மோதல்களுக்கு இலக்காகி அமைதி இழந்திருந்ததை நாடறியும். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மதுரையை மையமாகக் கொண்ட தென் மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தேறின. அதில் தேவேந்திரகுல வேளாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் சிலைமான் என்ற இடத்தில் இரு சமுதாயங்களிடையே மோதல்; திருமங்கலம் குராயூரில் அடிக்கடி மோதல் மற்றும் கொலைகள்; உசிலம்பட்டி பகுதியில் மோதல்; நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பட்டியலின மக்கள் படுகொலை என தொடர்கதையாயின.
1957-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அதனால் தென் தமிழகமே கலவர பூமியானது. மேலும் 1997-ஆம் ஆண்டு விருதுநகரை மையமாக வைத்து வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் உருவாக்கப்பட்டபோது முக்குலத்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோர்க்கும் எண்ணற்ற மோதல்கள் ஏற்பட்டு உயிர்சேதமும் பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. அப்பொழுதே தேவேந்திரகுல மக்கள் மதுரை விமான நிலையத்திற்கும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பலமாக எழுப்பினர்.
சுந்தரலிங்கம் பெயரை நீக்வேண்டும் என்பதற்காகவே அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களில் இயங்கிவந்த போக்குவரத்துக்கழகங்களும் மாவட்டப் பெயர்களும் நீக்கப்பட்டன. தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேருந்துகள், கல்விநிலையங்கள், மாவட்டங்கள், அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு எதிர்காலத்தில் எந்தவொரு தலைவரின் பெயரையும் சூட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின்படியே கடந்த 18 வருடங்களாக எந்தவொரு தலைவரின் பெயரும் எதற்கும் சூட்டப்படாமல் இருந்தது. இதனால் தென் தமிழகத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவிவருகிறது .
அரசியல் காரணங்களுக்காக மீண்டும் தென் தமிழகத்தில் சிலர் சாதித் ‘தீ ’ மூட்ட முயற்சி செய்கின்றனர். மதுரை விமான நிலையத்துக்குக்கும் ஓடுபாதைக்கும் 1932, 1935, 1942, 1950, 1999 ஆகிய ஆண்டுகளில் தங்களது நிலங்களைக் கொடுத்தவர்கள் அதற்கு அருகேயுள்ள சின்ன உடைப்பு கிராமத்து தேவேந்திரகுல வேளாளர்கள் ஆவர். எனவே மதுரை விமான நிலையத்துக்கு பெயர் வைக்க வேண்டுமாயின் அதற்கு நிலங்களைக் கொடுத்த தேவேந்திரகுல மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரையே சூட்டவேண்டும்.
தென் தமிழகத்தில் நிலவும் சமூக சூழ்நிலைகளை நன்கு அறிந்திருந்தும் ஏதும் அறியாதவர் போல மீண்டும் முக்குலத்தோருக்கும் தேவேந்திர குல வேளாளருக்கும் மோதலை உருவாக்கி சிந்தும் இரத்ததின் மூலம் அரசியல் லாபம் தேட துடிக்கும் வகையிலேயே ராமதாஸ் சம்பந்தமே இல்லாமல் மதுரை விமான நிலைய பிரச்சினையை கிளப்புகிறார் .
வடமாவட்டங்களில் கெளரவக் கொலைகளை நிகழ்த்தி, ஆதி திராவிடர்களுக்கு (பறையர்கள்) எதிராக அணிதிரட்டியத்தை போல தென் தமிழகத்திலும் தேவேந்திர குல வேளாளருக்கு (பள்ளர்கள்) எதிராக முக்குலத்தோரை அணிதிரட்ட எண்ணுகிறார். அவருடைய முயற்சி எள்ளளவும் வெற்றி பெறாது. தென் தமிழக தேவேந்திரகுல மக்கள் ராமதாஸின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்தே அவரை ஏற்கனவே ஒதுக்கித் தள்ளினர். எனவே அவரது இந்த முயற்சியும் பலிக்காது. பா.ம.க.-வின் நரித்தனத்தை தென் தமிழகத்தில் காட்ட முற்பட்டால் அதன் வால் ஒட்ட நறுக்கப்படும் என்பதை புதிய தமிழகம் எச்சரிக்கிறது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம்!! இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி:


மதுரையில் அமிட்ஷா அவர்கள் கலந்துகொண்ட "தேவேந்திரகுல வேளாளர்" அரசு ஆணைக்கான மாநாட்டை வரவேற்கிறேன். கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுத்த அமிட்ஷா அவர்களை பாராட்டுகிறேன். 
மற்றபடி அவர்களின் நோக்கம் எப்படி இருந்தால் என்ன? தேவேந்திர குல மக்கள் புதிய தமிழகம் கட்சியால் அரசியல்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்றிவிட முடியாது.
தேவேந்திர குல வேளாளர் என்ற எங்கள் அடையாளம் மீட்கப்பட வேண்டும். தமிழகத்தில் நிலத்தின் அடிப்படையில் தான் சமூகங்கள் இருந்தன. நாங்கள் மருத நில மக்கள். நாயக்கர் ஆட்சியின் வருகையால் தான் மிகப்பெரிய பின்னடைவை தேவேந்திரர் சமுகம் சந்தித்தது. எம் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன நிலமற்ற விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர். எம் மக்களின் சமுக, பண்பாட்டை சிதைக்கும் வகையில் பாளையப்பட்டுகள் உருவாக்கப்பட்டன.
நாயக்கர்களுக்கு துணை நின்ற சமுதாயங்கள் தேவேந்திர குல மக்கள் மீது எட்டு வகையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
அந்த வடுகர்கள் எப்படி நாயக்கர் ஆனார்கள்? கள்ளன் மறவன் எப்படி தேவர் ஆனார்கள் தீண்டாமையால் அதிக அளவு பதிப்புக்கு உள்ளான சாணார் சமுகம் எப்படி நாடார் ஆனார்கள்? ஆங்கிலேயர்கள் பட்டியல் இனத்தில் சாணார்களை சேர்த்தபோது லண்டன் வரை சென்று பட்டியல் மாற்றத்தை வலியுறுத்தினார்கள், அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் தேவேந்திர குல சமுகத்திற்கு அன்று வலிமையான தலைமை இல்லாத காரணத்தினால் எங்களின் விருப்பத்திற்க்கு மாறாக பட்டியல் இனத்தில் சேர்த்தனர். எல்லாரும் தங்களை ஆண்ட பரம்பரையினர் என்று கூறுகின்றனர். தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம், யாரையும் அடக்கி, ஆண்டதாக வரலாறு இல்லை .

சங்கராபுரம் கலவரம் ....புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு................டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A .,

''சங்கராபுரம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, புதிய
தமிழகம் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்,'' என, கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A ., அவர்கள் .கூறினார்.கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவின்போது, ஆதி
திராவிடர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில், துரை ஈஸ்வரன் கொலையில் தொடர்புடையவர்களை ஒரு வாரத்துக்குள் கைது செய்யாவிடில், புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
'பாகுபலி' படத்தில் பகடை எனும் சமுதாயத்தினருக்கு எதிரான சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதை நீக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்னும், 48 மணி நேரத்துக்குள் வசனங்களை நீக்காவிடில், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

மாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்......

..பள்ளர்,குடும்பர்,காலாடி,பன்னாடி,மூப்பர்,தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திடும் அரசானை பிறபிக்க கோரியும்,நீதிபதி ஜனார்த்தனன் அவர்களின் அறிக்கையை வெளியிடக் கோரியும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் . மாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்... அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள்:22-08-2015.
நேரம்:காலை 11 மணி.
இடம்:இராமநாதபுரம் மாவட்டம்.
ஒரு கோடி தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்க அரசியல் அதிகாரம் வென்றெடுக்க தேவேந்திரகுல மக்களே... அழைக்கிறார் டாக்டர் அய்யா அவர்கள் .. அரசியல் பாகுபாடின்றி அலைக் கடல் என திரண்டு...
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

மது விலக்கு: சட்டமன்றத்தைக் கூட்ட டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் வலியுறுத்தல்..........

மது விலக்கு: சட்டமன்றத்தைக் கூட்ட டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் வலியுறுத்தல்................................விருதுநகர்: மது விலக்கு பிரச்னை தொடர்பாக உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில், விருதுநகர் தேசபந்து மைதானத்தில், பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மதுப்போதை காரணமாக இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். எனவே மது, மக்கள் பிரச்னையாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பல்வேறு கட்சியினர், மாணவர்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது.
எனவே மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து கட்சியினரிடமும் அரசு விவாதிக்க வேண்டும் " என்றார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ மதுவுக்கு எதிராக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவதை வரவேற்கிறேன். அதே நேரம் சில இடங்களில் காவல்துறைக்கும், மாணவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் ரோட்டில் வந்து மதுவுக்கு எதிராக போராடுவதை கை விட்டு, ஒவ்வொரு ஊர்களிலும் வீதி வீதியாக சென்று, மதுவுக்கு எதிராக பொது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
வருகிற சட்டசபை தேர்தலில் மது பிரச்னை முக்கியமான பிரச்னையாக மக்கள் மன்றத்தில் முன் வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மதுவுக்கு எதிராக எந்த கட்சி குரல் கொடுத்தாலும், புதிய தமிழகம் அதை ஆதரிக்கும். பூரண மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக எல்லா கட்சிகளும் இணைந்து செயல்பட்டால், அதை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல முடியும்" என்றார்.

போராட்டத்தில் ஈடுபடாமல் பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி.M.D.M.L.A., ..

போராட்டத்தில் ஈடுபடாமல் பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி.M.D.M.L.A., .......................................................மாணவ, மாணவிகள் மதுவிலக்கு தொடர்பான போராட்டங்களில் ஈடுபடாமல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வரவேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை புதிய தமிழகம் கட்சியின் மகளிர் அணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் தலைமை வகித்து பேசுகையில், இந்த ஆர்ப்பாட்டம் மகளிர் அணி சார்பில் நடைபெறகிறது. தமிழகத்தில் இந்த மதுக்கடையால் இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் ஆகியோரும் குடிப்பழகத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடிப்பழக்கத்தால் கல்லீரல் மண்ணீரல் ஆகியவை பாதிக்கப்பட்டு பல குடும்பங்கள் தெருவிற்கே வந்து விடும் சூழ்நிலை இருக்கிறது.
இக்கட்சி தொடங்கியதிலிருந்தே மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, பொதுமக்கள் இயக்கமாக மாறியதை தொடர்ந்து தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மது விலக்கை அமுல்படுத்தக்கோரி போராடும் அனைவருக்கும் எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். அதேபோல், மதுவிலக்கு பிரச்னை குறித்து மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபடாமல், பொதுமக்களுக்கு மது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ், மத்திய தலைவர் வெள்ளைச்சாமி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் அணியினர், கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்..

காலச்சுவடுகள் .....19:05:2014 ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் பட்டியலில் இருந்து விடுபடுவது பற்றியும் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் க.கிருஷ்ணடாமி M .D .M .L .A ., அவர்களின் சிறப்பு பேட்டி ...

காலச்சுவடுகள் .....19:05:2014 ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் பட்டியலில் இருந்து விடுபடுவது பற்றியும் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர்
க.கிருஷ்ணடாமி M .D .M .L .A ., அவர்களின் சிறப்பு பேட்டி ....தேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வோரு சமுதாயமும் தங்களுடைய அடையாளத்திற்க்காக போராடி வருகின்றனர். அது போலவே காலாடி, பண்ணாடி, வாதிரியான், தேவேந்திர குலத்தான், பள்ளன் போன்ற பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கக் கூடிய ஒரே சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாள்ப படுத்த வேண்டும் என்று இந்த சமூக மக்கள் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக போராடியும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்.அது எந்த விதத்திலும் தவறு இல்லை. இதை இந்த அரசாங்கம் ஒரு சின்ன ஒருசொட்டு மையுங்கூட செலவாகாது அதற்க்கு உத்தரவு போடுவதற்க்கு. இன்றைக்கு இருக்கும் திராவிட இயக்கங்களுக்கு மனசு வரவில்லை.
இதனால் வெறுப்புற்ற தேவேந்திர குல சமூக மக்கள், திராவிட கட்சிகளின் அரசாங்கமும் , திராவிட இயக்கங்களும் நம்மை இன்னும் பள்ளர் என்று கூப்பிட்டு சிறுமைப் படுத்தி பார்ப்பதில் தான் அதிமுக , திமுக விரும்புகிறது என்பதை நினைத்து , வெறுப்புற்ற மக்கள் , அப்படியானால் இந்த பட்டியலில் இருந்தே விடுபட வேண்டும் என்று நினைக்க துவங்கி விட்டனர்.
பட்டியலே வேண்டாம் என்றும் சொல்ல
ஆரம்பித்து விட்டனர். இதில் நியாயம் இருகின்றது..இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் தேவேந்திர குல மக்களுடைய பார்வை இப்போழுது ; இந்த அரசாங்கம் தங்களை ஒரு கெளரவத்தோடு அழைப்பதற்க்கு தயங்குகிற காரணத்தினால் இந்த ஒதுக்கீடு- தாழ்த்தப்பட்ட பட்டியலில் (SC ) இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வுகள் தேவேந்திர குல மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.
இட ஒதுக்கிடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த இழிவோடு பட்டியலுக்குள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக தங்களை பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக படித்தவர், படிக்காதவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு கூறினார்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, ஆக. 20ல் ராமநாதபுரத்தில் போராட்டம்

ராமநாதபுரம்: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி டாக்டா் கிருஷ்ணசாமி M.D.M.L.A.,.அவர்கள். ராமநாதபுரத்தில் நேற்று அளித்த பேட்டி: புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்டதில் இருந்தே பூரண மதுவிலக்கு கோரி பிரசாரம் செய்து வருகிறது. காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்கு பின் மதுவுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். மாணவர்கள் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.
போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என அரசு நினைத்தால் அது தவறு. 1971ல் மதுவிலக்கை ரத்து செய்ததை எண்ணி வருத்தப்படுகிறேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. இதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். தேவேந்திரகுல மக்களை ஒருங்கிணைந்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, ஆக. 20ல் ராமநாதபுரத்தில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.

புறா' திட்டத்திற்கு கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும்: கிருஷ்ணசாமி...M.D.M.L.A.,.அவர்கள்..

புறா' திட்டத்திற்கு கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும்: கிருஷ்ணசாமி...M.D.M.L.A.,.அவர்கள்..ராமேஸ்வரம்: 'புறா' திட்டத்திற்கு அப்துல் கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும் என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள். வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் இல்லத்திற்கு வருகை தந்த அவர், அங்கு கலாமி சகோதரர முகம்மது முத்து மீரா மரைக்காயர் குடும்பத்தினரை சந்தித்து கலாமின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பால் நாட்டின் உச்ச பதவியை அடைந்தவர் டாக்டர் அப்துல்கலாம். அவரது நினைவிடத்தினை மாநில அரசு சிறப்புடன் அமைக்க வேண்டும். நகர் பகுதிகளை போன்றே கிராமங்களையும் உருவாக்கும் ‘புறா’ திட்டத்திற்கு மத்திய அரசு கலாமின் பெயரை சூட்ட வேண்டும்" என்றார்.

மது விலக்கு அமல் ரொம்ப சிரமம்! .....டாக்டா் கிருஷ்ணசாமி M.D.M.L.A.,.அவர்கள்.


....ராமநாதபுரம்: “மது விலக்கு என்பது கொள்கை அளவில் சாத்தியம். நடைமுறையில் சாத்தியமல்ல” என புதிய தமிழகம் நிறுவனர் .டாக்டா் கிருஷ்ணசாமி கூறினார்.அவர் கூறியதாவது:சசிபெருமாள் மரணத்திற்கு பின் மது விலக்கு போராட்டம் வலுத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மது 
விற்பனை வருமானத்தால் அரசின் திட்டங்கள் செயல்படுகின்றன என்பதில் மாற்று கருத்தில்லை; மது வருவாயால் எந்த அரசும் செயல்படவில்லை.முதல்கட்டமாக 'பார்'களை மூடலாம். மது விற்பனை நேரத்தை குறைக்கலாம். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை மூடலாம்.
புதிய மது விலக்கு கொள்கையை அமல்படுத்த, சட்டசபை சிறப்பு கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். மது விலக்கு என்பது கொள்கை அளவில் சாத்தியம்; நடைமுறையில் சாத்தியம் அல்ல.
மதுவுக்கு எதிராக மாணவர்கள் நேரடியாக களமிறங்கக்கூடாது; விழிப்புணர்வு பிரசாரம் செய்யலாம். கடந்த 1971ல் அரசின் பொருளாதார சிக்கலை தீர்க்க மது விலக்கை தி.மு.க., அரசு விலக்கிக் கொண்டதற்கு கருணாநிதி மன்னிப்பு கோருவது அவரது பெருந்தன்மை.
இலவசங்களை மக்கள் பயன்படுத்துவதில்லை. இலங்கை வசமுள்ள தமிழக விசைப்படகுகளை மீட்கவும், சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராமேஸ்வரம் பேக்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சமாதியில் மலரஞ்சலி செலுத்திய கிருஷ்ணசாமி கூறியதாவது:ராமேஸ்வரம்:அவரது சமாதியில் மணி மண்டபம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். நகர்புறம் போல், கிராமங்களிலும் குடிநீர், விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் 'புரா' திட்டத்தை, கலாம் கொண்டு வந்தார்.
அதை நாடு முழுவதும் அமல்படுத்தி, 'அப்துல்கலாம்' என பெயர் வைக்க வேண்டும் என்றார்.
ராமேஸ்வரம் நகர் செயலாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

புதன், 5 ஆகஸ்ட், 2015

மதுரையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி M.D,M.L.A .,அவர்கள் பங்கேற்பு.

.....................................................................................பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பன்னாடி, வாதிரியார் ஆகிய உட்பிரிவு பட்டியல் இன சாதிகளை ஒருங்கிணைத்து ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிடக்கோரி மதுரையில் இன்று புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணாநகரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M.D,M.L.A .,அவர்கள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வக்கீல் பாஸ்கர், மாட்ஷின், இரும்பொறை சேதுராமன், சிற்றரசு, முனியாண்டி, துரை தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி M.D,M.L.A .,அவர்கள் பேசியதாவது:–
இந்த போராட்டம் திடீரென நடத்தப்படும் போராட்டம் அல்ல. புதிய தமிழகம் கட்சி தொடங்கியதில் இருந்து இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. 1995–ம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டில் இந்த தீர்மானம்தான் முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது நாங்கள் ஜெயலலிதாவிடம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தோம். 4½ ஆண்டுகள் ஆகியும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதற்காக 6 கட்டமாக போராட்டத்தை அறிவித்து முதல் கட்டமாக மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.

தேவேந்திரகுல வேளாளர் உட்ஜாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வேண்டும்: டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A அவர்கள்.வலியுறுத்தல்..

..மதுரை,:''உட்ஜாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அழைப்பதற்கான அரசாணை வெளியிட வேண்டும்,'' என மதுரையில் புதிய 
தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி M.D,M.L.A அவர்கள் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:புதிய தமிழகம் சார்பில், பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பர் மற்றும் தேவந்திர குலத்தான் என அழைக்கப்படும் உட்ஜாதி பிரிவு மக்களை தேவேந்திர குல வேளாளர் என ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் வேலை வாய்ப்பு அடிப்படையில் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, முற்படுத்தப்பட்டோர், பிற்பட்டோர் பட்டியலில் இன வகுப்பு மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. பட்டியலில் உள்ள குறிப்பிட்ட ஜாதிகளை ஒருங்கிணைத்து அருந்ததியினர் என அறிவித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள பள்ளர் உள்ளிட்ட ௬ ஜாதிகளை இணைத்து தேவந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ௬ கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறோம். இதில் முதல்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.