எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 31 மே, 2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA இன்று திடீரென சந்தித்து பேசினார்.


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுகள் மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பதவியேற்பு விழாவே முடிந்திருக்கக் கூடும். இந்த நிலையில் தமிழக அரசியல்களம் கொதிநிலையை எட்டியுள்ளது. . டாக்டர் கிருஷ்ணசாமி.MD,MLA அவர்கள் , திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி ஜி.கே.வாசன், வைகோஉள்ளிட்ட தலைவர்களை சந்தித்து தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுக்க ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார் 'தமிழர் பிரச்சனைக்காக' அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இயக்கம் அமைக்க டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள்
சந்தித்து பேசிவருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக