எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 18 மே, 2015

சாதி மறுப்புத் திருமண பாதுகாப்பு சட்டம் அவசியம்: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .க. கிருஷ்ணசாமி,,M .D .M .L .A.,..,

சாதி மறுப்புத் திருமண பாதுகாப்பு சட்டம் அவசியம்: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .க. கிருஷ்ணசாமி,,M .D .M .L .A.,..,சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோர் மீதான தாக்குதல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதில், தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஓராண்டில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 105 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சாதி மறுப்புத் திருமணம் என்பது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசும், மத்திய அரசும் சாதி மறுப்பு திருமண பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாநாடு நடத்தப்படும்.
அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும், முதலமைச்சர்கள் படங்களை வைக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை புதிய தமிழகம் வரவேற்கிறது. இந்த தீர்ப்பை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்
என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக