எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 21 மார்ச், 2015

அதிமுக அரசை கண்டித்து சென்னையில் கண்டன பேரணி: கிருஷ்ணசாமி பேட்டி..

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது தவறானது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.


நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது தவறானது. பாஜக அரசு கொண்டு வந்த திட்டத்தை அதிமுக அரசு ஆதரித்திருப்பது, மோசமான நடவடிக்கை. விவசாயிகளின் உரிமைகளை பாதிக்கும் மோசமான சட்டத்தை ஆதரித்த அதிமுகவை வரலாறு மன்னிக்காது. தமிழகத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் மீதும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த தவறிய அதிமுக அரசை கண்டித்து, வரும் மே மாதம் 6ஆம் தேதி சென்னையில் கண்டன பேரணி நடத்தப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக