எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 29 டிசம்பர், 2014

அரசு சிமின்ட் ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க சதி; புதிய தமிழகம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு...

ராஜபாளையம் : ""சிவகாசி அருகே ஆலங்குளம் அரசு சிமின்ட் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க அரசியல் சதி நடக்கிறது,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
இந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலங்குளத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்ட கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது: ஆயிரக்கணக்கானவர்கள் வேலை பார்த்த 40 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள இந்த அரசு சிமின்ட் ஆலையை நவீனப்படுத்தவில்லை. சட்டசபையில் இதற்காக குரல் கொடுத்தேன். அதன்விளைவாக 2012-2013 பட்ஜெட்டில் 165 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவிப்பு வந்தது. இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணி நடக்கவில்லை.
இந்த ஆலையை நவீனப்படுத்தி உற்பத்தியை பெருக்கினால் தற்போது மூடை 390 ரூபாய்க்கு விற்பனையாகும் சிமின்ட்டை 110 ரூபாய்க்கு விற்க முடியும். இந்த சிமின்ட் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க அரசியல் சதி நடப்பதாக குற்றம் சாட்டுகிறேன். ஆலையை மூடினால் அதற்கு இந்த மாவட்டத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் தான் பொறுப்பு. அடுத்து தென்மாவட்ட அளவில் போராட உள்ளோம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக