எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 29 டிசம்பர், 2014

கெளரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் : டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்...

கெளரவக் கொலைகளைத் தடுóத்திட தனிச்சட்டம் இயற்றவேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
 கெளரவக் கொலைகள் மற்றும் காவல் நிலைய சாவுகளைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மதுரையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மாவட்டங்களில் கடந்த 20 மாதங்களில் 40 பேர் கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வடமாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட அமைப்பினர் தென்மாவட்டங்களில் உள்ளோருடன் சேர்ந்து படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே இதுகுறித்து அரசு தீவிர விசாரணை நடத்திடவேண்டும்.
 கெளரவக் கொலைகளைத் தடுக்க சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவும், சிறப்பு சலுகைகள் அளிக்கவும் முன்வரவேண்டும். திராவிட ஆட்சியில்தான் சீர்திருத்த திருமணம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 கெளரவக் கொலைகளைத் தடுக்க அனைத்து அமைப்பினர் பங்குபெறும் வகையில் புதிய தமிழகம் சார்பில் மாநில அளவில் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.
 மாநிலத்தில் காவல் நிலையச் சாவுகள் நடந்துவருகின்றன. செம்பட்டி, இளையான்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்த காவல் நிலையச் சாவுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே காவல் நிலையச் சாவுகளை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் மதுரை புறநகர் மாவட்டச் செயலர் பி.பாஸ்கர், மதுரை செய்தித்தொடர்பாளர் தெய்வம், மாநிலச்செயலர் மதுரம் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக