எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 10 டிசம்பர், 2014

தென்மாவட்ட சாதிக்கொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி

தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதிக்கொலைகளைப்பற்றி சட்டசபையில் பேசி அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து புதியதமிழகம் கட்சி இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து சட்டமன்ற பேரவை வளாகத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு :-
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளடங்கிய தென்மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் தேவேந்திரகுல வேளாளர் 18 பேர், உள்பட 74 பேர்; நாடார் சமுதாயம், பிள்ளைமார் சமுதாயம், யாதவர் சமுதாயம் மற்றும் சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்தவர்கள் படுகொலைக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.
அங்கு சட்டம் ஒழுங்கு முற்றும் சீர்குலைந்து காணப்படுகிறது. அங்கு பணியாற்ற கூடிய காவல்துறை அதிகாரிகள் அதே போல் வருவாய் துறை அதிகாரிகள் ஒரு சாதி சார்புடையவர்களாக செயல்படுவதால், சாதரணமாக தங்களுக்கு சமூக கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது என்றும், பெண்கள் தங்களை அவமானம் படுத்துகிறார்கள் என்றும், பள்ளி மாணவர்கள் படிக்கப்போகின்ற பொழுது தாங்கள் அவமானத்திற்கு ஆளாகிறோம் என்றும் புகார் கொடுத்தால் கூட, புகார் கொடுப்பவர்களை கூலிப்படையின் மூலமாக தீர்த்துக்கட்டக்கூடிய ஒரு மிகப்பெரிய சமூக அநீதி அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுக்குறித்து தழிகத்திற்கு உரிய சட்டம் ஒழுங்கை கவனிக்க வேண்டிய காவல்துறையோ அல்லது தமிழ்நாட்டு காவல்துறைக்கு பொறுப்பேற்று இருக்க கூடிய முதலைமைச்சரோ சிறிதும் அக்கறை செலுத்தாத காரணத்தினால் அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மையின் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வேறு இடங்களுக்கு குடிப்பெயர வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது குறித்து உடனடியாக சட்டமன்றத்தினிலே பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கடந்த 4ம் தேதி 9மணிக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் கவனஈர்ப்பு தீர்மானம் மற்றும் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்திருந்தேன். 4ம் தேதி அனுமதி கேட்டேன் 5ம் தேதியும் அனுமதி கேட்டேன் அனுமதி அளிக்க வில்லை. இன்று அவைக்கூடியதும் நான் வந்து தென்மாவட்டங்களில் கலவரம் குறித்து அவை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டுமென்று அவைத்தலைவரிடம் அனுமதி கேட்டதற்கு அனுமதி மறுத்தார். ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்துடன் எடுத்துக்கொள்ளப்படும் என்று சொன்னார். அதற்கு பின்பும் எடுக்காத காரணத்தினாலே புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் வெளிநடப்பு செய்திருக்கிறேன்.
எங்களுடை கோரிக்கை கடந்த 6 மாதத்தில் தென்மாவட்டங்களில் நடந்த அந்த 74 படுகொலைக்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்.
ஒரு சாதி சார்புடைய அதிகாரிகளை உடனடியாக தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு உடனடியாக பாதுகாப்புக்காக துணை இராணுவத்தை நிறுத்த வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக