எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 28 ஜூன், 2014

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..


-ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 108 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தென் மாவட்டங்களில் ஒடுக்க பட்ட மக்கள் மீது நடைபெறும் வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.டி.கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இவர்கள் ரயில் நிலையத்திற்குள் சென்று மறியல் செய்ய முயன்றபோது, போலீஸார் இவர்களைக் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பொறுப்பாளர் ராஜலிங்கம், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் பவுண்ராஜ், வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியச் செயலாளர் பாரதிராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் 27:-ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், நகரச் செயலாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக