எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 23 ஜூன், 2014

ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு- ஜூன் 27ல் புதிய தமிழகம் ஆர்பாட்டம் ............

சென்னை: ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஜூன் 27ம்தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். மத்திய அரசு பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.இல்லை என்றால் வருகிற ஜூன் 27ல் மாவட்ட தலைநகரங்களில் உள்ள ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார். இந்த சந்திப்பின் போது மாநில அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர்,துறைமுகம் கண்ணன் ஆகியேர் உடன் இருந்தனர்.ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு- ஜூன் 27ல் புதிய தமிழகம் ஆர்பாட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக