எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 17 ஜூன், 2014

சென்னையில் இன்று (16-06-2014) டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை 16:-தென்தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் - தமிழகம் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சி நிறுவனர்-தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தென்தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்கொடுமை தாக்குதல்களையும், தமிழகத்தில் பொள்ளாச்சி, உத்திரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சிறுமியர், இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இரண்டு தாழ்த்தப்பட்ட இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.
அண்மைகாலமாக தென்தமிழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது கடந்த மே மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில்பட்டி - நெல்லை தனியார் பேரூந்து நடத்துனர் சங்கரன்கோவில் தாலூகா அழகனேரி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் த/பெ.தங்கராஜ் என்பவர் சில ஆதிக்க சாதியினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டு அகால மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடத்துனருக்கும், பயணச்சீடு வாங்காத பயணிகளுக்கும் ஏற்பட்ட தகராறில் நடந்த சம்ப்வம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அது திட்டமிட்ட கொலையாகும். சாதிய வெறியோடு நடத்தப்பட்ட கெளரவ கொலையாகும்.
இரண்டாவதாக அதே சங்கரன் கோவில் அருகே உடப்பன்குளம் என்ற கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தை சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அதில் பட்டியலின பிரிவில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள் வெறும் 40 குடும்பங்கள் மட்டுமே. அந்த நாற்பது குடும்பங்களுக்கு குடிநீர் பிடிப்பது.மாயானப் பாதைக்கு செல்வது, நடைபாதை போன்ற பல அடிப்படை உரிமைகள் அங்கு வாழக்கூடிய பிறசமூகங்கள் மறுக்கப்பட்டு வந்ததும் அதனுடைய தொடர்ச்சியாக வால்பாறையிலிருந்து திருமண நிகழ்ச்சிகு வந்து திரும்பிய 2 பேர் உட்பட மூன்று பேர் அதே கிராமத்திற்கு அருகாமையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலூகா மணக்கரை என்ற கிராமத்தில் அதே பட்டியலினப் பிரிவில் தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சார்ந்த 30 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. 8 பைக்குகள்,2 ஆம்னி பஸ் பலத்த சேதமடைந்துள்ளன, 30 வீடுகளிலும் அந்த மக்களுடைய வீடுகள் குடியிருக்கமுடியா வகையில் வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், அடுப்புகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுள்ளன.
அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு 10 வயதிற்குட்பட்ட தாழ்த்தப்பாட்ட சமூகத்தை சார்ந்த இளம் சிறுமிகள் மிக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இப்படி தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக நடைபெற்று வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள்,ஒன்றிய,நகர, தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு தங்களது கண்டன குரல்களை எழுப்பினார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக